வாகனம் மோதி வாலிபர் பலி- சிறுவன் படுகாயம்

சாலையில் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் சதிஷ் குமார் மற்றும் சிறுவன் சிவராஜ் ஆகியோர் மீது மோதியது.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
வாகனம் மோதி வாலிபர் பலி- சிறுவன் படுகாயம்
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள மருங்குளம் - தஞ்சாவூர் சாலையில் வடக்குபட்டு அருகே சாலையின் இடது புறமாக தாளம்பட்டி கீழத்தெருவை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 21) மற்றும் அவரது நண்பரான தாளம்பட்டி கீழத்தெருவை சேர்ந்த சின்னையன் மகன் சிவராஜ் (வயது 16) ஆகியோர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு ஆவணி ஞாயிற்றுக்கி ழமையை முன்னிட்டு சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த சாலையில் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் சதிஷ் குமார் மற்றும் சிறுவன் சிவராஜ் ஆகியோர் மீது மோதியது. இதில்சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதில் சிறுவன் சிவராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் போலீஸார் விபத்தில் பலியான சதிஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வி

பத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com