என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வானவெடி கோவிலுக்குள் புகுந்ததை தட்டிக்கேட்டதில் மோதல்
    X

    கோப்பு படம்.

    வானவெடி கோவிலுக்குள் புகுந்ததை தட்டிக்கேட்டதில் மோதல்

    • இரு தரப்பினருக்கும் இடையே வாயத்தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
    • தாக்குதலில் காயமடைந்த சச்சின் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே கரையாம்புத்தூரை அடுத்த கடுவனூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்(வயது39). விவசாயி.

    சம்பவத்தன்று அப்பகுதியில் துக்க நிகழ்ச்சியின் போது அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் வானவெடி வெடித்த போது அங்குள்ள கோவிலுக்குள் புகுந்தது.

    இதனை அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் சிலர் தட்டிக்கேட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாயத்தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு நாகராஜ் அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணராஜ் குருவிநத்தத்தை சேர்ந்த கண்ணன் அவரது தம்பி அரவிந்த் மற்றும் கடுவனூரை சேர்ந்த முத்துக்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி நாகராஜை தாக்கினர்.

    மேலும் மோட்டார் சைக்கிள் செயின் கவரை எடுத்து கிருஷ்ணராஜ் அங்கிருந்தவர்களை தாக்க முயன்றார். அப்போது இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 16 வயது சிறுவனின் தலையில் செயின் கவரால் கிருஷ்ணராஜ் தாக்கினார்.

    மேலும் அவங்கிருந்தவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு கிருஷ்ணராஜ் மற்றும் அவருடன் வந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

    இந்த தாக்குதலில் காயமடைந்த சச்சின் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து அருண் கரையாம்புத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×