search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக்"

    120 கடைகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையி்ல் தடை செய்யப்பட்ட 595 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சிவகங்கை நகராட்சியை தூய்மை மிகு நகரமாக மாற்ற புதிதாக பொறுப்பேற்ற நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

    அதனடிப்படையில் சிவகங்கை காந்தி வீதி பகுதியில் உள்ள 120 கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்களில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

    இதில் பல்வேறு கடைகள் மற்றும் பிரபல ஷாப்பிங் மால்களில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் மற்றும் மெகா சைஸ் பைகள் உள்ளிட்ட 595 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    மேலும் அவைகளை வைத்திருந்த கடையின் உரிமையாளர்களுக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

    இதே போல் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த ப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும், கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
     
    இது குறித்து நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் கூறும்போது, பொதுமக்கள் தானாக முன்வந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து சிவகங்கை நகரை தூய்மையாக மாற்ற ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
    ×