search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "store"

  துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் கடை உரிமையாளர்கள் கடைகளை அகற்றுவதற்கு கூடுதலாக கால அவகாசம் கேட்டனர்.

  கடலூர்:

  கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட கடற்கரை சாலை, பழைய கலெக்டர் அலுவலக சாலை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக சாலையோரமாக நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து வருகின்றன.இதில் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு கடைகள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றன.கடலூர் மாநகராட்சி சார்பில் சாலையோரமாக 123 கடைகள் ஆக்கிரமித்து இயங்கி வருவதாக அந்த கடைகளின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பணிகளை தொடங்கினார்கள்.

  அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் கடை உரிமையா ளர்கள் கடைகளை அகற்றுவதற்கு கூடுதலாக கால அவகாசம் கேட்டனர். அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் கூடுதலாக அவகாசம் வழங்கி, கடைகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் அகற்றப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றனர். இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வழங்கிய கூடுதல் அவகாசம் இன்றுடன் முடிகிறது. எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை இன்றுக்குள் அகற்ற வேண்டுமென மாநகராட்சி ஊழியர் வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து செல்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் இன்று காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

  • குமாரநத்தம் கிராமத்தில் நல்ல குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • திருநகரி ஆகிய பகுதிகளில் சுடுகாட்டு சாலை மற்றும் கொட்டகை அமைக்க வேண்டும்.

  சீர்காழி:

  சீர்காழி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் கமலஜோதிதேவேந்திரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் உஷாநந்தினி, ஆணையர்கள் சரவணன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். எழுத்தர் சரத் தீர்மானங்களை வாசித்தார்.

  கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு :-

  துர்காமதி : மருதங்குடி ஊராட்சி குமாரநத்தம் கிராமத்தில் நல்ல குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ஆணையர் சரவணன்: குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப் படும். ஏற்கனவே 84 ஆயிரம் செலவில் அப்பகுதியல் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து வழங்கப்பட்டு வந்தது.

  விஜயகுமார்: தில்லைவிடங்கன், புதுதுறை, வெள்ளபள்ளம் ஆகிய பகுதிகளில் குடிதண்ணீர் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். வாரம் ஒரு முறை மட்டுமே புதுத்துறை பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

  ரிமா: அகணி ஊராட்சியில் வி.ஏ.ஓ அலுவலகம், பகுதி நேர அங்காடிக்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும்.

  ஜான்சிராணி: நகராட்சி கவுன்சிலர்களுக்கு அரசின் மதிப்பூதியம் வழங்கப்படுவது போல் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும். இது தொடர்பாக மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு அனுப்ப வேண்டும்.

  ஆனந்தி: கவுன்சிலர்கள் மன்றத்தில் தெரிவிக்கும் கோரிக்கைகளை பதிவு செய்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  நடராஜ்: நெப்பத்தூர், திருநகரி ஆகிய பகுதிகளில் சுடுகாட்டு சாலை மற்றும் கொட்டகை அமைக்க வேண்டும்.

  வள்ளி: பெருந்தோட்டம் ஊராட்சியில் நாயக்கர்குப்பம், மடத்துக்குப்பம் ஆகிய பகுதிகளில் புதிய போர் அமைத்து நல்ல குடிதண்ணீர் வழங்க வேண்டும்.

  இதற்கு பதில் அளித்து தலைவர் கமலஜோதி தேவேந்திரன் பேசும்போது,

  கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அந்தந்த துறைகளின் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செய்யப்படும் பணிகள் குறைபாடுகள் இன்றி துரிதமாக நடைபெற்று வருகிறது . கவுன்சிலர்கள் கேட்கும் பணிகள் ஒவ்வொன்றாக பொது நிதிக்கு ஏற்றவாறு செய்து தரப்படும் என்றார்.

  • நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் வி.கே. சாலையில் அதே பகுதியில் வசிக்கும் வீரபாகு (வயது 40) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
  • தினமும் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம்.

  நெல்லை:

  நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் வி.கே. சாலையில் அதே பகுதியில் வசிக்கும் வீரபாகு (வயது 40) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். தினமும் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்றும் இரவு வழக்கம்போல் அவர் வீட்டுக்கு சென்றார்.

  இன்று அதிகாலை வியாபாரத்திற்கு பால் பாக்கெட்டுகள் எடுப்பதற்காக வீரபாகு கடைக்கு சென்று ள்ளார். அப்போது அங்கு கடையின் முன்பக்க கதவின் பூட்டு இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த வீரபாகு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 85 ஆயிரம் பணம் கொள்ளை யடிக்கப்பட்டு இருந்தது.

  உடனே அவர் சந்திப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் ஆகியோர் கடையில் ஆய்வு செய்தனர்.

  இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

  • அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளனர்
  • இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  மேலூர்

  மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள சந்தைப் பேட்டையில் கடைகள், வணிக நிறுவனங்கள் அதிக ளவில் உள்ளன. நேற்று நள்ளிரவு அந்த பகுதியில் உள்ள பிரபல எலக்ட ரானிக்கல் கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியவில்லை.

  இதையடுத்து கொள்ளை யர்கள் அருகில் உள்ள ஜவுளிகடை, டீக்கடை, செல் போன்கடை, கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் அடுத்தடுத்து பூட்டு களை உடைத்து உள்ளே புகுந்தனர். மேற்கண்ட 4 கடைகளில் பணம் எதுவும் சிக்காததால் கொள்ளையர்களின் கடைகளில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றனர்.

  இன்று காலை கடைதிறக்க வந்த உரிமையாளர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  மேலூர் பகுதியில் கடை, வீடுகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளை யடிப்பது தொடர்கதையாகி விட்டது. எனவே காவல் துறையினர் இரவு நேரங்களில் முக்கிய வீதிகள் மற்றும் நகர் பகுதியில் முழுவதும் தீவிரரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • குமாரபாளையம் பள்ளிப்பாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் விற்கப்பட்ட சிக்கன் துர்நாற்றம் வீசியது.
  • இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டதையடுத்து நேற்று இந்த கடையை பூட்டினர்.

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் பள்ளிப்பாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் விற்கப்பட்ட சிக்கன் துர்நாற்றம் வீசியது. கடையில் ஆய்வு செய்ததில் கெட்டுப்போன இறைச்சி குளிர்சாதனப்பெட்டியில் இருந்ததை பறிமுதல் செய்தனர்.இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டதையடுத்து நேற்று இந்த கடையை பூட்டினர்.

  இது பற்றி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் கூறுகையில், பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் எந்த உணவு பொருள் கடையாக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் பல கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  • நெல்லையை அடுத்த பேட்டை சாம்பவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடக்கன். இவரது மகன் அய்யப்பன்(வயது 36).
  • இவர் பேட்டை செக்கடி பகுதியில் மணல், ஜல்லி மற்றும் ஹார்வேர்ஸ் விற்பனை கடை நடத்தி வருகிறார்

  நெல்லை:

  நெல்லையை அடுத்த பேட்டை சாம்பவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடக்கன். இவரது மகன் அய்யப்பன்(வயது 36).

  ரூ.47 ஆயிரம் கொள்ளை

  இவர் பேட்டை செக்கடி பகுதியில் மணல், ஜல்லி மற்றும் ஹார்வேர்ஸ் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு சென்ற அய்யப்பன் இன்று காலை கடையை திறப்பதற்காக சென்றார்.

  அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.47 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. மேலும் கடையில் பொருத்தப்பட்டு இருந்த 3 சி.சி.டி.வி. காமிராக்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவையும் திருட்டு போனது.

  விசாரணை

  இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்த சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு 12 மணி வரை அய்யப்பன் கடையில் இருந்துள்ளார்.

  அதன்பின்னர் தான் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் அதிகாலையில் வந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அருகில் உள்ள மற்ற கடைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  • இதன் மூலம் 125 குழு உறுப்பினர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.
  • சுற்றுலா பயணிகள் எளிதில் பொருள்களை வாங்க ஏதுவாக கல்லணையில் ஒரு மதி விற்பனை அங்காடி அமைத்திட முடிவு செய்யப்பட்டது.

  தஞ்சாவூர்:

  தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சிறந்த ஒரு விற்பனை வாய்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் அங்காடி என்ற சிறப்பு அடையாளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும் கூடுதல் வருவாயும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரும் வகையில் ஓர் இலக்குடன் உருவாக்கப்படுகிறது.

  ஏற்கனவே தஞ்சாவூர் மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டது. இதன் மூலம் 35 மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு இதன் மூலம் 125 குழு உறுப்பினர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.

  அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கல்லணை அணைப்பகுதியில் மகளிர் கய உதவிக்குழுவினர் தயார் செய்யும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எளிதில் பொருள்களை வாங்க ஏதுவாக கல்லணையில் ஒரு மதி விற்பனை அங்காடி அமைத்திட முடிவு செய்யப்பட்டது.

  அந்த அங்காடியினை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் இன்று மதியம் திறந்து வைத்தார்.

  இந்த அங்காடியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகன், நடமாடும் பொம்மைகள், பொய்கால் குதிரைகள் கால் மிதியடி பொம்மை வகைகள் பைகள் மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

  இந்திகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்ட இயக்குநர்லோகேஸ்வரி, செயற்பொறியாளர், உதவி திட்ட அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகளிர் திட்ட களப்பணியார்கள், மகளிர் சுய உதவிக்கு உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

  • மளிகை கடை உரிமையாளர் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
  • மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சத்தியமங்கலம்:

  சத்தியமங்கலம் கொங்கு நகரை சேர்ந்தவர் பீட்டர் (46). இவர் மணிக்கூண்டு அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

  இன்று காலை பீட்டர் தனது 2 மகள்களை அழைத்து கொண்டு அய்யப்பன் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

  பின்னர் மகள்களை பள்ளியில் இறக்கி விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அய்யப்பன் நகர் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி பீட்டர் மீது மோதியது.

  இதில் நிலைகுலைந்த அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர்.

  பின்னர் பலியான பீட்டரின் உடலை மீட்டு பரிேசாதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • பெருந்துறை அருகே டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக சகோதரி போலீசில் புகார் தெரிவித்தார்.
  • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்

  பெருந்துறை:

  பெருந்துறை அருகே தலையம்பாளையம் நடுத்தோ–ட்டத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (42). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி.

  வேலுச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி மகாலட்சுமி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து வேலுச்சாமி பெற்றோருடன் வசித்து வந்தார்.

  இந்த நிலையில் வேலுச்சாமி கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு பெருந்துறை அடுத்த சீனாபுரம் டாஸ்மாக் மதுக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார். அப்போது வேலுச்சாமிக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் வேலுச்சாமி டாஸ்மாக் மதுக்கடை அருகே மர்ம மான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து தனது அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலுச்சாமி யின் தங்கை சித்ரா பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

  இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

  • கரூர் ஜங்ஷனில் முருங்கை இணைப் பொருட்கள் விற்பனையகம் திறக்கப்பட்டது.
  • வாழைப்பொருட்கள் விற்பனையகம் தொடங்கப்பட்டது

  கரூர்:

  நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய ரயில்வே துறை சார்பில் சுயஉதவிக்குழுக்கள், ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்களை ஊக்கும் வகையில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் அந்த ஊரின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின்

  அடிப்படையில் அந்தந்த பகுதி சிறப்பை வெளிப்படுத்தும் பொருட்கள் ரயில் நிலையங்களில் விற்க அனுமதிக்கப்படுகிறது. கரூர் ரயில் நிலைய சந்திப்பில், ஈசநத்தம் வேளாண் உற்பத்தியாளர்கள் சார்பில் முருங்கை இணைப் பொருட்கள் விற்பனையகம் திறக்கப்பட்டது.

  கரூர் ரயில் நிலைய மேலாளர் ராஜராஜன், முதன்மை வணிக ஆய்வாளர் சிட்டிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கடைகளுக்கு 15 நாட்களுக்கு ரூ.1,000 என்ற வாடகையில் அனுமதி வழங்கப்படுகிறது. 15 நாட்களுக்கு வேறு பொருள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படும். குளித்தலை ரயில் நிலையத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் சார்பில் வாழைப்பொருட்கள் விற்பனையகம் தொடங்கப்பட்டது.