டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த தொழிலாளி

பெருந்துறை அருகே டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக சகோதரி போலீசில் புகார் தெரிவித்தார். இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்
டாஸ்மாக் கடை அருகே இறந்து கிடந்த தொழிலாளி
Published on

பெருந்துறை:

பெருந்துறை அருகே தலையம்பாளையம் நடுத்தோ–ட்டத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (42). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி.

வேலுச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி மகாலட்சுமி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து வேலுச்சாமி பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் வேலுச்சாமி கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு பெருந்துறை அடுத்த சீனாபுரம் டாஸ்மாக் மதுக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார். அப்போது வேலுச்சாமிக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வேலுச்சாமி டாஸ்மாக் மதுக்கடை அருகே மர்ம மான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து தனது அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலுச்சாமி யின் தங்கை சித்ரா பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com