search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Nellai Junction"

  • கருணை அடிப்படையில் அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
  • தமிழகத்தின் வளர்ச்சியை கிராமம் முதல் நகரம் வரை சீராக திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

  நெல்லை:

  நெல்லை சந்திப்பு பகுதியில் இயங்கி வந்த பஸ் நிலையத்தை இடித்து புதிய நவீன பஸ் நிலையமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டும் பணி 2018-ம் ஆண்டு தொடங்கியது.

  நீதிமன்ற வழக்குகள், கொரோனா காலக்கட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பஸ் நிலைய பணிகள் ரூ.85½ கோடியில் முழுமையாக முடிந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது.

  மேலும் நெல்லை மாவட் டத்தில் ரூ.436 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

  விழாவில் தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.85½ கோடியில் கட்டி முடிக்கப்பட்ட சந்திப்பு பஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.

  பின்னர் பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் கருணை அடிப்படையில் அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

  பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து ரூ.572 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார்.

  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார். கலெக்டர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார்.

  விழாவில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு திட்ட விளக்கவுரையாற்றினார்.

  விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

  நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ. 85.56 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நமது ஆட்சியில் விளையாட்டுத்துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து உள்ளது. தற்போது விளையாட்டு துறை சார்பில் டார்லிங் நகரில் ரூ.6.50 கோடியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தின் வளர்ச்சியை கிராமம் முதல் நகரம் வரை சீராக திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளம் நெல்லையை புரட்டி போட்டது. மழை வெள்ளத்தால் இந்த பஸ் நிலையம் பாதிக்கப்பட்டது. இரவோடு இரவாக மழை வெள்ள பாதிப்புகளை மேற்கொள்ள அனைத்து அரசு அதிகாரிகளையும் முதல்வர் முடுக்கிவிட்டார்.

  சேலம் மாநாட்டை ரத்து செய்து இங்கேயே அமைச்சர்களும் நானும் 3 நாட்களாக தங்கி இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டோம்.

  இன்று பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு தமிழகம் ரூ. 6 லட்சம் கோடியை கொடுத்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு 1.5 லட்சம் கோடியை மட்டுமே தந்துள்ளது.

  ஒரு ரூபாய்க்கு மத்திய அரசு 28 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தராத நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.

  நிகழ் காலத்தில் மட்டு மல்ல எதிர்காலத்திற்கு தேவையான அனைத்தையும் தொலைநோக்கு திட்டத் தோடு முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

  சென்னையில் இருப்பது நெல்லையிலும் இருக்க வேண்டும்,நெல்லையில் இருப்பது தென்காசியில் கிடைக்கவேண்டும்.


  எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். தி.மு.க. அரசு நெல்லையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

  முடிவில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் நன்றி கூறினார்.

  பஸ் நிலையம் திறப்பு விழாவையொட்டி சுற்றிலும் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டிருந்தது. நுழைவு வாயில்களில் வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.

  நெல்லை நகர மக்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்து இருந்த சந்திப்பு பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டதால் வியாபாரிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்த னர்.

  பஸ் நிலைய நடை பாதைகள் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள நமது நெல்லை செல்பி பாயிண்ட் முன்பு நின்று பொதுமக்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். 

  • நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் வி.கே. சாலையில் அதே பகுதியில் வசிக்கும் வீரபாகு (வயது 40) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
  • தினமும் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம்.

  நெல்லை:

  நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் வி.கே. சாலையில் அதே பகுதியில் வசிக்கும் வீரபாகு (வயது 40) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். தினமும் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்றும் இரவு வழக்கம்போல் அவர் வீட்டுக்கு சென்றார்.

  இன்று அதிகாலை வியாபாரத்திற்கு பால் பாக்கெட்டுகள் எடுப்பதற்காக வீரபாகு கடைக்கு சென்று ள்ளார். அப்போது அங்கு கடையின் முன்பக்க கதவின் பூட்டு இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த வீரபாகு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 85 ஆயிரம் பணம் கொள்ளை யடிக்கப்பட்டு இருந்தது.

  உடனே அவர் சந்திப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் ஆகியோர் கடையில் ஆய்வு செய்தனர்.

  இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

  • நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் ராஜாஜி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி குப்பம்மாள் என்ற ராஜி (வயது 39).
  • இவர் கடந்த 24-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுப்பதற்காக காரில் சென்றுள்ளார்.

  நெல்லை:

  நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி குப்பம்மாள் என்ற ராஜி (வயது 39). இவர் கடந்த 24-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுப்பதற்காக காரில் சென்றுள்ளார்.

  அன்று மாலை வீடு திரும்பிய ராஜி மகளை மட்டும் வீட்டில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் காரில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த சுப்பிர மணியம் பல இடங் களில் தேடிப் பார்த்தும் ராஜியை காண வில்லை.

  அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச்-ஆப்' ஆகி இருந்தது. எனவே மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு சுப்பிரமணியன் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான ராஜியை தேடி வருகிறார்கள்.

  • நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.79 கோடியில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
  • பஸ் நிலைய கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  நெல்லை:

  நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.79 கோடியில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

  பஸ் நிலைய கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர் பார்த்து காத்திருக்கின்ற னர்.

  இந்த நிலையில் பழைய பஸ் நிலையம் இருந்தபோது அதன் முன்பு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பாக்கிய விநாயகர் மற்றும் கல்யாண விநாயகர் என்ற இரண்டு விநாயகர் கோவில் இருந்தது.

  பஸ் நிலையத்தை இடிக்கும் போது அப்போ தைய கமிஷனர் மீண்டும் விநாயகர் கோவில் அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.இது தொடர்பாக இந்து முன்னணி சார்பில் கடந்த 2021 மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி ஆகிய 2 நாட்களிலும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகி யோரிடம் மனு அளிக்கப் பட்டது.

  அந்த மனுவில் இடிக்க ப்பட்ட 2 விநாயகர் கோவி லையும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை அளிக்கப்பட்டு இருந்தது.

  இந்நிலையில் இன்று இந்து முன்னணி நிர்வாகிகள் மேயர் சரவணனிடம் மனு அளித்தனர். நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் வந்த இந்து முன்னணியினர் அளித்த மனுவில், மாநகராட்சி கமிஷனர் மற்றும் கலெக்டர் ஆகியோர் பஸ் நிலையம் கட்டும் பணி முடிந்த பிறகு கோவில் அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

  ஆனால் எந்த இடத்தில் கோவில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் 2 விநாயகர் கோவில்களையும் அமைத்து தர வேண்டும். அதற்கு விரைவாக இடத்தை ஒதுக்கீடு செய்து கோவில் கட்டுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

  அதனை வாங்கி படித்து பார்த்த மேயர் சரவணன் இந்து முன்னணி கோரிக்கை கண்டிப்பாக நிறை வேற்றப்படும். பஸ் நிலையம் கட்டி முடிப்பதற்குள் அந்த இடத்தை ஆய்வு செய்து பாக்கிய விநாயகர் மற்றும் கல்யாண விநாயகர் ஆகிய 2 கோவில்களும் கண்டிப் பாக அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.

  • நெல்லை சந்திப்பில் பிரசித்தி பெற்ற சாலைக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் முடிந்துள்ளது.
  • இதனைத்தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டி நேற்று காலை கணபதி ஹோமம், தீபாராதனை, இன்று இரவு கும்ப பூஜை, வாஸ்து பூஜை மற்றும் ஹோமகுண்டங்களில் சிறப்பு பூஜை நடந்தன.

  நெல்லை:

  நெல்லை சந்திப்பில் பிரசித்தி பெற்ற சாலைக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் முடிந்துள்ளது.

  இதனைத்தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டி நேற்று காலை கணபதி ஹோமம், தீபாராதனை, இன்று இரவு கும்ப பூஜை, வாஸ்து பூஜை மற்றும் ஹோமகுண்டங்களில் சிறப்பு பூஜை நடந்தன.

  தொடர்ந்து இன்று காலை சாலைக்குமரன், மூலஸ்தானம், விமானம், சண்முகர் விமானம் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சனிபகவான் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள், விமானங்கள் திருப்பணி பாலாலயம் இன்று காலை நடைபெற்றது.

  • நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன்கோவில் உள்ளது.
  • மீனாட்சிபுரம் பகுதியில் உண்டியல் உடைத்து திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

  நெல்லை:

  நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன்கோவில் உள்ளது.

  இந்த கோவிலில் வழக்கம்போல் பூஜை முடிந்து நேற்றிரவு கோவில் நிர்வாகத்தினர் கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

  இந்நிலையில் இன்று அதிகாலை கோவிலுக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியலை காணவில்லை. உடனே சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் விரைந்து வந்து உண்டியலை தேடினர்.

  அப்போது மீனாட்சிபுரம் பகுதியில் உண்டியல் உடைத்து திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதனை போலீசார் மீட்டு கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர்.

  அதனை திருடி சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. மூலம் தேடி வருகின்றனர்.

  • நெல்லை சந்திப்பு பெருமாள் தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் அருண்ராஜ். எலக்ட்ரீசியன்.
  • கொள்ளை முயற்சி தொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

  நெல்லை:

  நெல்லை சந்திப்பு பெருமாள் தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் அருண்ராஜ். எலக்ட்ரீசியன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 28). நேற்று இரவு ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

  அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் ராஜேஸ்வரியிடம் பிச்சை கேட்டுள்ளார். உடனே ராஜேஸ்வரி பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றுள்ளார்.

  அவரை பின்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர் ராஜேஸ்வரியை கத்தியை காட்டி மிரட்டி நகையை கேட்டுள்ளார். அவர் கத்தி கூச்சலிடவே அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.இது தொடர்பாக ராஜேஸ்வரி சந்திப்பு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

  அப்போது ராஜேஸ்வரி வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேறுவது தெரிய வருகிறது. அந்த காட்சி பதிவுகளை கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

  • மத்திய அரசின் அக்னிபத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு.
  • ஒவ்வொரு தண்டவாளத்துக்கும் 2 போலீஸ்காரர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு

  நெல்லை:

  மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.இந்த திட்டத்தின் மூலம் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.

  மத்திய அரசின் இந்த அக்னிபத் ராணுவ வீரர்கள் ஒப்பந்த சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்த போராட்டம் தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலும் இன்று ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  ஒவ்வொரு தண்டவாளத்துக்கும் 2 போலீஸ்காரர்கள் என 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  மேலும் ரெயில்வே மேம்பாலங்கள், தண்டவாளங்கள் உள்ளிட்ட இடங்களில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  நெல்லையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ரெயில் நிலையங்களில் போராட்டத்திற்கு நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மாநகர போலீசாரும் சந்திப்பு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  ×