நெல்லை சந்திப்பில் கோவில் உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்கள்

நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன்கோவில் உள்ளது.மீனாட்சிபுரம் பகுதியில் உண்டியல் உடைத்து திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
நெல்லை சந்திப்பில் கோவில் உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்கள்
Published on

நெல்லை:

நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன்கோவில் உள்ளது.

இந்த கோவிலில் வழக்கம்போல் பூஜை முடிந்து நேற்றிரவு கோவில் நிர்வாகத்தினர் கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை கோவிலுக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியலை காணவில்லை. உடனே சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் விரைந்து வந்து உண்டியலை தேடினர்.

அப்போது மீனாட்சிபுரம் பகுதியில் உண்டியல் உடைத்து திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதனை போலீசார் மீட்டு கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர்.

அதனை திருடி சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. மூலம் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com