பிச்சை கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்ம நபர்

நெல்லை சந்திப்பு பெருமாள் தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் அருண்ராஜ். எலக்ட்ரீசியன். கொள்ளை முயற்சி தொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.
பிச்சை கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்ம நபர்
Published on

நெல்லை:

நெல்லை சந்திப்பு பெருமாள் தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் அருண்ராஜ். எலக்ட்ரீசியன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 28). நேற்று இரவு ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் ராஜேஸ்வரியிடம் பிச்சை கேட்டுள்ளார். உடனே ராஜேஸ்வரி பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றுள்ளார்.

அவரை பின்தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர் ராஜேஸ்வரியை கத்தியை காட்டி மிரட்டி நகையை கேட்டுள்ளார். அவர் கத்தி கூச்சலிடவே அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.இது தொடர்பாக ராஜேஸ்வரி சந்திப்பு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது ராஜேஸ்வரி வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேறுவது தெரிய வருகிறது. அந்த காட்சி பதிவுகளை கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com