என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலைக்குமார சுவாமி கோவிலில் பாலாலயம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
நெல்லை சந்திப்பு சாலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி பாலாலயம்
- நெல்லை சந்திப்பில் பிரசித்தி பெற்ற சாலைக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் முடிந்துள்ளது.
- இதனைத்தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டி நேற்று காலை கணபதி ஹோமம், தீபாராதனை, இன்று இரவு கும்ப பூஜை, வாஸ்து பூஜை மற்றும் ஹோமகுண்டங்களில் சிறப்பு பூஜை நடந்தன.
நெல்லை:
நெல்லை சந்திப்பில் பிரசித்தி பெற்ற சாலைக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் முடிந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டி நேற்று காலை கணபதி ஹோமம், தீபாராதனை, இன்று இரவு கும்ப பூஜை, வாஸ்து பூஜை மற்றும் ஹோமகுண்டங்களில் சிறப்பு பூஜை நடந்தன.
தொடர்ந்து இன்று காலை சாலைக்குமரன், மூலஸ்தானம், விமானம், சண்முகர் விமானம் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், சனிபகவான் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள், விமானங்கள் திருப்பணி பாலாலயம் இன்று காலை நடைபெற்றது.
Next Story






