என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus stand"

    • கழிப்பறை அருகே அந்தப் பையைக் கண்டெடுத்தனர்.
    • கலசிபாளையம் மத ரீதியாக முக்கியமான மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பரபரப்பான கலசிபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு பொது கழிப்பறைக்கு வெளியே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில், அங்கு வைக்கப்பட்டிருந்த பைகளில், ஆறு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டிட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    சந்தேகத்திற்கிடமான பை குறித்து தகவல் கிடைத்ததும், பெங்களூரு போலீசார் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்று வெடிபொருட்களை மீட்டனர். அவை தனித்தனி பைகளில் வைக்கப்பட்டு இருந்ததாக மேற்கு மண்டல துணை ஆணையர் எஸ். கிரிஷ் உறுதிப்படுத்தினார்.

    அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியாளர்கள் சுமார் 1:15 மணியளவில் கழிப்பறை அருகே அந்தப் பையைக் கண்டெடுத்து அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாக FIR கூறுகிறது.

    ஆரம்பகட்ட விசாரணையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் சாதாரணமாக கல் குவாரிகளில் பயன்படுத்தப்படுபவையாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    கலசிபாளையம் மத ரீதியாக முக்கியமான மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருப்பதால், இந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் பெங்களூருவில் 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

    • சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 13 பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஏழை எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் சென்டர் உருவாக்கப்பட்டு துறைமுகம் மற்றும் கொளத்தூரில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு களஆய்வு மேற்கொண்டார்.

    திரு.வி.க.நகர் பஸ் நிலையம், அகரம், ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம், பெரியார் நகர் பஸ் நிலையம், பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன சந்தை மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் காகர்லா உஷா சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 13 பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    மகாபலிபுரம், செங்கல்பட்டு, ஆவடி மற்றும் தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்படுத்தப்பட்டு வரும் பஸ் நிலையங்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முத்திரைகளாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    பெரியார் நகர் மற்றும் திரு.வி.க. நகர் பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி துவக்கப்பட்டு அடுத்த மாதம் ஜூலை இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    ஏழை எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் சென்டர் உருவாக்கப்பட்டு துறைமுகம் மற்றும் கொளத்தூரில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் அனைத்தும் நிறைவேறும் பொழுது வடசென்னை மக்களின் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தி ஆகி இருக்கும்.

    குத்தம்பாக்கம் பஸ் நிலையம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பணிகள் தீவிரபடுத்தப்பட்டு இருக்கிறது.

    தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 50 கூட நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை கூறுவது, தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது, அண்ணாமலையை மேடை ஏற சொல்லுங்கள் சொன்னதை எத்தனை செய்துள்ளோம் சொல்லாததை எத்தனை செய்துள்ளோம் என்று பட்டியலிடுகிறோம், குறை சொல்லக்கூடிய தளத்தில் இருப்பவர்கள் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். அரசியல் களம் வேண்டும் என்பதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை போன்றோர் சொல்லிக் கொண்டு உள்ளார்கள், நடுநிலையாளர்கள் இந்த ஆட்சியை பாராட்டுகிறார்கள், வசை பாடியவர்கள் கூட இந்த ஆட்சியை வாழ்த்துகிறார்கள்.

    முடிச்சூர் பஸ் நிலையத்தை பொறுத்தவரையில் நீதிமன்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. கூடிய விரைவில் வழக்கை இறுதிக்கு கொண்டு வந்து முடிச்சூர் பஸ் நிலையத்தை ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பயன்படுத்தும் அளவிற்கு மேம்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்களும் வந்தது.
    • ஒரு சிலர் தானாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மத்திய பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்தநிலையில் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இது தொடர்பாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்களும் வந்தது.

    இதையடுத்து இன்று திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாவலர்கள் மூலம் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தையும் அகற்றினர். ஒரு சிலர் தானாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முன்பு உள்ள வாகன நிறுத்தங்களில் சோதனை செய்த போலீசார் மர்மபொருட்கள் ஏதேனும் உள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர்.
    • வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீசாரும் மாவட்டந்தோறும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    கோவை கார் வெடிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீசாரும் மாவட்டந்தோறும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பஸ் நிலையம், ஜவுளிக்கடைகள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    புதிய பஸ்நிலையத்தில் உள்ள கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கவாசகம், ஏட்டுகள் துரை, காளியப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நீண்டநாட்களாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் குறித்து ஆய்வு செய்து அது குறித்து உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதேபோல் பாளை பஸ் நிலைய பகுதிகள், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கார் நிறுத்தும் இடம், பயணிகள் இருக்கை, பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர்.

    மேலும் டவுன், வண்ணார்பேட்டை உள்ளிட்ட மாநகர பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளின் வாகன நிறுத்தங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முன்பு உள்ள வாகன நிறுத்தங்களில் சோதனை செய்த போலீசார் மர்மபொருட்கள் ஏதேனும் உள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர்.

    • தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

    பல்லடம் :

    பல்லடம் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில்,கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே போலீசார் பஸ்நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான மேல ரோட்டில் பொது விநியோக அங்காடி அருகில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும்.
    • தெருக்களின் குறுக்கே செல்லும் வாய்க்கால்களுக்கு பாலம் அமைக்க வேண்டும்.

    பாபநாசம்:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்க ல்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் மீன், இறைச்சி மார்க்கெட் தற்போது சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.

    அதனை இடித்து விட்டு புதிய நவீன மீன் இறைச்சி மார்க்கெட் அதே இடத்தில் கட்டித் தர வேண்டும். நூலகம் கட்டித் தர வேண்டும். தெருக்களின் குறுக்கே செல்லும் வாய்க்கால்களுக்கு பாலம் அமைக்க வேண்டும்.

    பேரூராட்சி சமுதாய கூடம் கட்டித் தர வேண்டும். கடைவீதி, தெற்கு ராஜவீதி, சன்னதி தெரு பின்புறம் கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும்.

    அன்னுக்குடி வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தூர்வார வேண்டும். தார் சாலை அமைக்க முடியாத இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    அய்யம்பேட்டை பேரூராட்சியில், நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான மேல ரோட்டில் பொது விநியோக அங்காடி அருகில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும்.

    மேலும் பக்தர்களுக்கான தங்கும் விடுதி அமைக்க வேண்டும். மெலட்டூர் பேரூராட்சியில் உள்ள 9-வது வார்டு ஏர்வாடி பகுதி மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடிமகன்கள் மது வாங்கி கொண்டு வந்து பொதுமக்கள் நடந்து செல்லும் போதும் குடித்து வருகின்றனர்.
    • தட்டிக்கேட்டால் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் பஸ் நிலையத்திற்கு தினசரி ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன . பயணிகளும் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் 2 சப்வேக்கள் உள்ளன.

    இதில் மேல்புறமுள்ள மாடிக்கு செல்லும் படிக்கட்டில் 24 மணி நேரமும் குடிமகன்கள் மது வாங்கி கொண்டு வந்து பொதுமக்கள் நடந்து செல்லும் போதும் குடித்து வருகின்றனர். தட்டிக்கேட்டால் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிர்வாக குழு கூட்டம் டவுனில் நடைபெற்றது
    • தென்காசி, நெல்லை நான்கு வழிச்சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிர்வாக குழு கூட்டம் டவுனில் நடைபெற்றது. தலைவர் முகமது யூசுப் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிக்குமார் வரவேற்றார். துணைத்தலைவர் முகமது ஹனிபா, கான்முகமது, நாராயணன், பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சந்தி பிள்ளையார் கோவில், காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் சாலை அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பது, வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்த தமிழக அரசிற்கு நன்றி தெரிவிப்பது, தென்காசி, நெல்லை நான்கு வழிச்சாலை பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிறுத்தமாக கடலூர் மஞ்சக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தம் இயங்கி வருகின்றது.
    • பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் உள்ளே சென்று வராததால் இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்திற்குள் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்வது போல் மிக முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிறுத்தமாக கடலூர் மஞ்சக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தம் இயங்கி வருகின்றது. இந்த பகுதியில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் கலெக்டர் முகாம் அலுவலகம், பல்வேறு துறை அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றது.

    இதன் காரணமாக தின ந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவ மாணவிகள் என தினந்தோறும் மஞ்சக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக கடலூருக்குள் வரக்கூடிய அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் மஞ்சக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் சிறிது நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்று வருகின்றனர்.

    இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் விழா காலங்களில் மக்கள் திரள்வது போல் கூட்டமும் மற்றும் சாதாரண நேரங்களில் மக்கள் நின்று கொண்டு பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக மஞ்சகுப்பம் போஸ்ட் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் பெரிய அளவிலான பஸ் நிறுத்த ஷெட் அமைக்கப்பட்டு அனைத்து பஸ்களும் உள்ளே வந்து நின்று பயணிகளை ஏற்றி பாதுகாப்பாக வெளியில் செல்வதற்காக அமைத்தனர்‌. மேலும் இப்பகுதியில் சாலையில் அனைத்து பஸ்களும் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருவதால் பெரிய அளவிலான பஸ் நிறுத்த ஷெட் அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தினந் தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் சென்றுவரும் நிலையில் வழக்கம் போல் சாலையில் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மேலும் பஸ் டிரைவர்கள் தங்கள் பஸ்களில் அதிக அளவில் பயணிகள் ஏற்றுவதற்காக நடுச் சாலையிலே பஸ்களை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக பயணிகளை ஏற்றுவதும், அவர்களுக்குள் அடிக்கடி பயணிகள் ஏற்றுவதில் தகராறு ஏற்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    தற்போது பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் உள்ளே சென்று வராததால் இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. மேலும் கால்நடைகள் உள்ளே அமர்ந்து பாதுகாப்பாக இருந்து வருகின்றது. இதன் காரணமாக எதற்காக பல லட்சம் செலவு செய்து இந்த பஸ் நிறுத்த ஷெட் அமைக்கப்பட்டது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் கடலூர் பெரு நகராட்சி மாநகராட்சியாக மாறிய பின்பு பெயர் மட்டுமே மாறி உள்ளது. அடிப்படை பணிகளான இது போன்ற பணிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி அனைத்து பஸ்களும் பஸ் நிறுத்தத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்‌.

    • பேருந்து நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியில் செல்லும் பகுதிக்கு இடையூறாக இருப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்த வண்ணம் இருந்தன.
    • பஸ் நிலையத்தில் பஸ்கள் இருந்து வெளியில் வரும் பஸ்கள் பிரதான சாலைக்கு திரும்பும் இடத்தில் வளைவு ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளியில்அமைந்துள்ள பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது.பேரூராட்சியால் ஏலம் விடப்பட்டு ஏலதாரர் நடத்தி வந்த இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து இருந்ததாலும், பேருந்து நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியில் செல்லும் பகுதிக்கு இடையூறாக இருப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்த வண்ணம் இருந்தன.

    இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் கட்டிட ஆய்வாளர்களிடம் கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டது. கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த பொறியாளர் குழு கட்டிடம் பழுதடைந்து நிலையில் உள்ளதாகவும், இந்த இடித்து அகற்றப்பட வேண்டும் என்று அறிக்கை சமர்ப்பித்தது.இதன் அடிப்படையில் கட்டிடத்தில் உள்ள உணவகத்தை மூடுமாறு பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு, அதன்படி உணவக கட்டிடம் பூட்டப்பட்டிருந்தது.

    இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பஸ் நிலையத்தில் இருந்த பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடம் நேற்று இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.

    பேரூராட்சி செயல்அலுவலர் நெடுஞ்செழியன், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், ஆகியோர் மேற்பார்வையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் பாதுகாப்பில் இரண்டு பொக்லின் இயந்திரங்களைக் கொண்டு கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டது.

    கட்டிடம் இடிக்கப்படுவதை ஒட்டி நேற்று காலை முதல் பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. பயணிகள் பஸ்கள் அனைத்தும் பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றன.இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    கட்டிட இடிப்பு குறித்து பேரூராட்சிசெயல் அலுவலர்நெடுஞ்செழியனிடம் கேட்ட போது பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளதை அடுத்து இடித்து அகற்றப்பட்டது.

    பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருக்கும் பகுதியில் இனி எந்த ஒரு சிறு வணிக கடைகளுக்கும் வைப்பதற்கு அனுமதி கிடையாது.அதில் தற்போது இருக்கும் அனைத்து கடைகளையும் அகற்ற கூறப்பட்டுள்ளது.

    அகற்றப்பட்டவுடன் அந்த இடங்களில் பயணிகள் அமர்வதற்கான வசதி செய்து கொடுக்கப்படும் என்று செயல் அலுவலர் தெரிவித்தார். திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் பஸ்கள் இருந்து வெளியில் வரும் பஸ்கள் பிரதான சாலைக்கு திரும்பும் இடத்தில் வளைவு ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    இதுவும் பஸ்கள் திரும்புவதற்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தும்வகையில் உள்ளது.எனவே இந்த வளைவையும் இடித்து அகற்றுவதற்கும், அதை வளைவின் அருகில் உள்ள மின்சார கம்பத்தை நகர்த்தி வைப்பதற்கும் பேரூராட்சி நிர்வாகம் ஆவனசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாரியப்பன் தனது நண்பர் பெருமாள் என்பவருடன் வண்ணார்பேட்டை பஸ்நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக காத்து நின்றார்.
    • பேராட்சி செல்வம் என்பவர் அவர்களிடம் அரிவாளை காட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார்.

    நெல்லை:

    பாளை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42). இவர் தனது நண்பர் பெருமாள் என்பவருடன் வண்ணார்பேட்டை பஸ்நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக காத்து நின்றார். அப்போது அங்கு வந்த வண்ணார்பேட்டை கம்பராமாயணம் தெருவை சேர்ந்த பேராட்சி செல்வம் (26) என்பவர் அவர்களிடம் அரிவாளை காட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார்.

    இதுதொடர்பாக மாரியப்பன் பாளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் வழக்குப்பதிவு செய்து பேராட்சி செல்வத்தை கைது செய்தார்.

    • நவீன சுகாதார வளாகம் திறப்பு விழாவிற்கு சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு விருந்தினராக பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.

    சுரண்டை:

    கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் சுரண்டை பஸ் நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் நவீன சுகாதார வளாகம் திறக்கப்பட்டது. சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் முகம்மது சம்சுதீன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஒப்பந்ததாரர் சவுந்தர் வரவேற்று பேசினார். பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.

    விழாவில் முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் முத்துக்குமார்,ஆறுமுகசாமி,திமுக நிர்வாகிகள் பூல்பாண்டியன்,சுப்பிரமணயன், ஸ்டீபன் சத்யராஜ், அல்லா பிச்சை, பீர்முகமது,ஜோசியர் தங்க இசக்கி,தனலட்சுமி மாரியப்பன், காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.ஆர். பால்துரை, பிரபாகர், கஸ்பா செல்வம், ஆட்டோ செல்வராஜ்,ராஜன், சுரண்டை நகர் மன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன்,அமுதா சந்திரன், ராஜ்குமார்,உஷா பேபி பிரபு,வேல் முத்து, ராஜேஷ், அந்தோணி சுதா ஜேம்ஸ், செல்வி, சிவசண்முக ஞான லெட்சுமி,மற்றும் நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    ×