என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் நிலைய சப்வேயில் உள்ள மது பாட்டில்களை காணலாம்.
பாராக மாறும் தாராபுரம் பஸ் நிலையம்
- குடிமகன்கள் மது வாங்கி கொண்டு வந்து பொதுமக்கள் நடந்து செல்லும் போதும் குடித்து வருகின்றனர்.
- தட்டிக்கேட்டால் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.
தாராபுரம் :
தாராபுரம் பஸ் நிலையத்திற்கு தினசரி ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன . பயணிகளும் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் 2 சப்வேக்கள் உள்ளன.
இதில் மேல்புறமுள்ள மாடிக்கு செல்லும் படிக்கட்டில் 24 மணி நேரமும் குடிமகன்கள் மது வாங்கி கொண்டு வந்து பொதுமக்கள் நடந்து செல்லும் போதும் குடித்து வருகின்றனர். தட்டிக்கேட்டால் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story