search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palldam"

    • வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    பல்லடம்:-

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளிநகர் தொட்டி அப்புச்சி கோவில் பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதையடுத்து சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன்படி அந்தப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் டாக்டர் காவியா, வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர் முத்துக்குமாரசாமி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

    பல்லடம் :

    பல்லடம் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி காரணமாக மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில்,கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே போலீசார் பஸ்நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×