திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்களும் வந்தது.ஒரு சிலர் தானாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர்.
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் தனியார் பாதுகாவலர்கள் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட காட்சி.
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் தனியார் பாதுகாவலர்கள் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட காட்சி.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மத்திய பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்தநிலையில் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இது தொடர்பாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்களும் வந்தது.

இதையடுத்து இன்று திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாவலர்கள் மூலம் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தையும் அகற்றினர். ஒரு சிலர் தானாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com