search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் பழுதடைந்த கட்டிடம் இடித்து அகற்றம்
    X

    திருக்காட்டுப்பள்ளி பஸ்நிலையத்தில் இடித்து அகற்றப்பட்ட கட்டிடம்.

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் பழுதடைந்த கட்டிடம் இடித்து அகற்றம்

    • பேருந்து நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியில் செல்லும் பகுதிக்கு இடையூறாக இருப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்த வண்ணம் இருந்தன.
    • பஸ் நிலையத்தில் பஸ்கள் இருந்து வெளியில் வரும் பஸ்கள் பிரதான சாலைக்கு திரும்பும் இடத்தில் வளைவு ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளியில்அமைந்துள்ள பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது.பேரூராட்சியால் ஏலம் விடப்பட்டு ஏலதாரர் நடத்தி வந்த இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து இருந்ததாலும், பேருந்து நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியில் செல்லும் பகுதிக்கு இடையூறாக இருப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்த வண்ணம் இருந்தன.

    இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் கட்டிட ஆய்வாளர்களிடம் கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டது. கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த பொறியாளர் குழு கட்டிடம் பழுதடைந்து நிலையில் உள்ளதாகவும், இந்த இடித்து அகற்றப்பட வேண்டும் என்று அறிக்கை சமர்ப்பித்தது.இதன் அடிப்படையில் கட்டிடத்தில் உள்ள உணவகத்தை மூடுமாறு பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு, அதன்படி உணவக கட்டிடம் பூட்டப்பட்டிருந்தது.

    இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பஸ் நிலையத்தில் இருந்த பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடம் நேற்று இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.

    பேரூராட்சி செயல்அலுவலர் நெடுஞ்செழியன், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், ஆகியோர் மேற்பார்வையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் பாதுகாப்பில் இரண்டு பொக்லின் இயந்திரங்களைக் கொண்டு கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டது.

    கட்டிடம் இடிக்கப்படுவதை ஒட்டி நேற்று காலை முதல் பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. பயணிகள் பஸ்கள் அனைத்தும் பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றன.இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    கட்டிட இடிப்பு குறித்து பேரூராட்சிசெயல் அலுவலர்நெடுஞ்செழியனிடம் கேட்ட போது பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளதை அடுத்து இடித்து அகற்றப்பட்டது.

    பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருக்கும் பகுதியில் இனி எந்த ஒரு சிறு வணிக கடைகளுக்கும் வைப்பதற்கு அனுமதி கிடையாது.அதில் தற்போது இருக்கும் அனைத்து கடைகளையும் அகற்ற கூறப்பட்டுள்ளது.

    அகற்றப்பட்டவுடன் அந்த இடங்களில் பயணிகள் அமர்வதற்கான வசதி செய்து கொடுக்கப்படும் என்று செயல் அலுவலர் தெரிவித்தார். திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் பஸ்கள் இருந்து வெளியில் வரும் பஸ்கள் பிரதான சாலைக்கு திரும்பும் இடத்தில் வளைவு ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    இதுவும் பஸ்கள் திரும்புவதற்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தும்வகையில் உள்ளது.எனவே இந்த வளைவையும் இடித்து அகற்றுவதற்கும், அதை வளைவின் அருகில் உள்ள மின்சார கம்பத்தை நகர்த்தி வைப்பதற்கும் பேரூராட்சி நிர்வாகம் ஆவனசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×