என் மலர்
உள்ளூர் செய்திகள்

நவீன சுகாதார வளாகத்தை பழனி நாடார் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி.
சுரண்டை பஸ் நிலையத்தில் நவீன சுகாதார வளாகம் திறப்பு
- நவீன சுகாதார வளாகம் திறப்பு விழாவிற்கு சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார்.
- சிறப்பு விருந்தினராக பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.
சுரண்டை:
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் சுரண்டை பஸ் நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் நவீன சுகாதார வளாகம் திறக்கப்பட்டது. சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் முகம்மது சம்சுதீன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஒப்பந்ததாரர் சவுந்தர் வரவேற்று பேசினார். பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் முத்துக்குமார்,ஆறுமுகசாமி,திமுக நிர்வாகிகள் பூல்பாண்டியன்,சுப்பிரமணயன், ஸ்டீபன் சத்யராஜ், அல்லா பிச்சை, பீர்முகமது,ஜோசியர் தங்க இசக்கி,தனலட்சுமி மாரியப்பன், காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.ஆர். பால்துரை, பிரபாகர், கஸ்பா செல்வம், ஆட்டோ செல்வராஜ்,ராஜன், சுரண்டை நகர் மன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன்,அமுதா சந்திரன், ராஜ்குமார்,உஷா பேபி பிரபு,வேல் முத்து, ராஜேஷ், அந்தோணி சுதா ஜேம்ஸ், செல்வி, சிவசண்முக ஞான லெட்சுமி,மற்றும் நகராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






