search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி"

    • சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆயக்காரன்புலத்தில் சொந்தமாக மர பர்னிச்சர் ஷோரூம் திறந்தார்.
    • சிங்கப்பூர் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரும் வந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்த சண்முகராஜன் 14 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று அங்கு ஒரு மர பர்னிச்சர் கம்பெனியில் பணிபுரிந்தார்.

    அங்கு 14 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி அந்த கம்பெனிக்கு நல்ல வருவாயை ஈட்டி கொடுத்து, அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.

    இதனால் இனி சொந்த ஊரில் தொழில் தொடங்க முடிவு செய்தார். இதற்காக சிங்கப்பூர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆயக்காரன்புலத்தில் சொந்தமாக மர பர்னிச்சர் ஷோரூம் திறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சிங்கப்பூர் பர்னிச்சர் நிறுவன உரிமையாளர் கோலிஞ்சி உடனே சண்முகராஜனை தொடர்பு கொண்டு நீங்கள் தொடங்கி உள்ள பர்னிச்சர் ஷோரூமை பார்க்க இந்தியாவுக்கு வருவதாக கூறினார்.

    இதையடுத்து அவர் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். அவருடன் சிங்கப்பூர் கம்பெனி நிர்வாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரும் வந்தனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் கார் மூலம் ஆயக்காரன்புலம் வந்தனர். அவர்களை வித்தியாசமான முறையில் அழைத்து செல்ல சண்முகராஜன் முடிவு செய்தார்.

    அதன்படி சிங்கப்பூர் நிறுவன உரிமையாளர் கோலிஞ்சி, ஊர்வலமாக இயக்குனர்கள் ஹங்மிங், டிம் ஆகியோரை குதிரை சாரட்டு வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக சுமார் மூன்று கிலோமிட்டர் தூரம் மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் பர்னிச்சர் ஷோரூமுக்கு அழைத்து சென்றார். அங்கு அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான் தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து, பூரண கும்ப மரியாதை அளித்து பூக்கள் தூவி வரவேற்றனர்.

    பின்னர் சண்முகராஜன் தொடங்கியுள்ள மர பர்னிச்சர் ஷோரூமை பார்வையிட்டு அவரை கட்டி தழுவி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது கோலிஞ்சி கூறும்போது, என்னிடம் வேலை சண்முகராஜன் மர பர்னிச்சர் ஷோரூமை சிறப்பாக நடத்தி தொழிலதிபராக மாறி இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    சிங்கப்பூரிலிருந்து உரிமையாளர், தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளியின் ஷோரூமை பார்க்க வந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கதிரவனை கொண்டு சென்றனர்.
    • கதிரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள காவனூரை சேர்ந்தவர் கதிரவன் (வயது 38 ). தொழிலாளி.

    இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரது கையில் கடித்தது.

    கண்ணாடிவிரியன் பாம்பு அவரை கடித்தது தெரிய வந்தது.

    பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கதிரவனை கொண்டு சென்றனர்.

    மேலும் கண்ணாடிவிரியன் பாம்பையும் பிளாஸ்டிக் கவரில் போட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு கதிரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு கதிரவன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார்.
    • பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பஸ் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று காங்கயம் செல்ல வந்தது. பஸ்சின் கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் அருகில் இருந்த கடைக்கு டீ சாப்பிடுவதற்காக சென்றனர்.

    அந்த சமயத்தில் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நிறுத்தப்பட்டிருந்த அரசு டவுன் பஸ் மீது கல்லை வீசி எறிந்ததால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே இதுகுறித்து தகவல் அறிந்து ஓடி வந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் இருவரும் போதை ஆசாமியை பிடித்தனர். பின்னர் அவ்வழியே ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் இது குறித்து புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வருமாறு கூறிச் சென்றார். அந்த போதை ஆசாமியையும் பஸ்சில் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த போதை ஆசாமி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பதும், ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளி என்பதும் தெரிந்தது.

    மேலும் நேற்று இரவு பஸ் நிலையத்தில் யாரோ ஒருவரிடம் ஏற்பட்ட தகராறில் அவரது சட்டை கிழிந்துள்ளது. அந்த கோபத்தில் அங்கு நின்ற டவுன் பஸ் மீது கல்லை எறிந்ததாக அவர் தெரிவித்தார்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பஸ் டிரைவர் தகவல் தெரிவித்தார். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • மப்பேடு போலீசார் மயில்வேலின் உடலை மீட்டனர்.
    • மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலி கிராமம்,மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது38). கொத்தனார். இவரது மனைவி தாந்தோணி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    சமீபத்தில் பெய்த கனமழையால் கன்னிகைப்பேர் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு ராஜா வந்த போது கன்னிகைப்பேர்-திருக்கண்டலம் நெடுஞ்சாலையில் உள்ள கால்வாயில் தவறி விழுந்தார். இதில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அவரை அவ்வழியே சென்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடிவந்தனர். இதற்கிடையே இன்று காலை அதே பகுதியில் கால்வாயில் ராஜாவின் உடல் கரை ஒதுங்கி இருந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூரை அடுத்த, பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமம் கிடங்கு தெருவை சேர்ந்தவர் மயில்வேல்(51). இவர் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் கேண்டினில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை மயில்வேல் வழக்கம்போல் வேலைக்கு சென்றபோது சத்தரை பஸ்நிறுத்தம் எதிரே உள்ள குளத்தில் குளித்தார். அப்போது சேற்றில் சிக்கிய அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மப்பேடு போலீசார் மயில்வேலின் உடலை மீட்டனர்.

    திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கபிலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (30). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை மேல் நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலை எதிரே உள்ள டீ கடைக்கு சென்றார். அப்போது மகேஷ் சிறுநீர் கழிப்பதற்காக டீக்கடையின் சுவர் ஓரம் சென்றார். அவர் அருகில் இருந்த மின்இணைப்பு பெட்டியை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு ஆண் தலை தனியாக கிடந்தது
    • கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டிைய சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார்( 43) என்பதும், அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள குள்ளம்பட்டி பிரிவு சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட ஒரு ஆண் தலை தனியாக கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தலையை கைப்பற்றியதுடன் உடலையும், கொலையாளியையும் தேடினர். தொடர்ந்து தலை வீசப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் குள்ளம்பட்டி பள்ளக்காட்டை சேர்ந்த பிரபல ரவுடியான திருமலை (24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அவர் உடலை அங்குள்ள நாட்டாமங்கலம் ஏரிக்கரையில் வீசியதாக தெரிவித்தார். அதன்படி அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டனர். கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டிைய சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார்( 43) என்பதும், அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளதும் தெரிய வந்தது.

    திருமலை கொடுத்த தகவலின்பேரில் அவரது பைக் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமலை கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது - பிரபல ரவுடியான திருமலை நேற்று முன்தினம் பைக்கில் வாழப்பாடி முத்தம்பட்டி சென்றார். அங்கு விவசாய தோட்ட பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த முத்தம் பட்டியை சேர்ந்த மாணிக்கம் மனைவி ஜோதி 45 என்பவரை மிரட்டி ஒன்றரை பவுன் நகையை பறித்தார்.

    அங்கிருந்து நடுப்பட்டி வழியாக வந்த போது சாலையில் நடந்து வந்த குமார் மீது மோதுவது போல சென்று தகராறு செய்தார். பின்னர் இரு வரும் சமரசம் ஆகிய நிலையில் தன்னுடன் வந்தால் மது வாங்கி தருவதாக கூறி குமாரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு நீர்முள்ளிக் குட்டை சிவசக்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கினர்.

    பின்னர் இருவரும் அக்ரஹாரம் நாட்டாமங்கலம் ஏரிக்கரைக்கு வந்து மது அருந்தினர். அப்போது 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த திருமலை, குமாரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து தலையை அறுத்து குள்ளம்பட்டி பிரிவு சாலையில் வீசி விட்டு சென்றதும், அங்குள்ள சி.சி.டி.சி. காமிரா பதிவால போலீசாரிடம் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்துஅவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டு உள்ளதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ைகதான பிரபல ரவுடி ஏற்கனவே 2 கொலைகள் செய்துள்ள நிலையில் தற்போது சிறிய பிரச்சினையில் ஒருவரரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பீதி நிலவி வருகிறது. மேலும் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடும்நிலை உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாய கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவரது வீட்டில் எறும்பு திண்ணி புகுந்துள்ளது. இதை பார்த்த பெருமாள் சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தீயணைப்பு அலுவலர் ரமேஷ் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எறும்பு திண்ணியை உயிருடன் பிடித்தனர். பின் அதனை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் பிடிக்கப்பட்ட எறும்பு திண்ணியை பார்ப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பலர் வந்து பார்த்து சென்றனர்.

    • இதையடுத்து அருகில் இருந்த சிலரும் கூச்சல் போட்டனர்.
    • அந்த தொழிலாளி எதற்காக ஏறினார் என்று தெரியவில்லை.

    மெலட்டூர்:

    மெலட்டூர் பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க கூலி தொழிலாளி ஒருவர் அரசு மருத்துவமனை அருகே உள்ள மின் டிரான்ஸ்பர்மரில் திடீரென கம்பத்தில் ஏறி மின் கம்பிகளை தொட முயற்சி செய்து கொண்டி ருந்தார்.

    அந்த வழியாக வந்த நபர் ஒருவர் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்து கீழே இறங்க சொல்லி சத்தம் போட்டுள்ளார்.

    இதையடுத்து அருகில் இருந்த சிலரும் கூச்சல் போட்டனர்.

    பின்னர் அந்த தொழிலாளி மின் கம்பத்தில் இருந்து பத்திரமாக கீழே இறங்கி அங்கிருந்து சென்றுவிட்டார்.

    அமின் ஊழியர்கள் மட்டுமே கம்பத்தில் ஏற அனுமதி என்ற நிலையில் அந்த தொழிலாளி எதற்காக ஏறினார் என்று தெரிய வில்லை.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நிலை தடுமாறிய அவர் அருகில் சென்ற உயர்மின் அழுத்த கம்பியின் மீது விழுந்துள்ளார்.
    • மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் அடுத்த வலங்கைமான் அருகே உள்ள வலங்கைமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்.

    இவரது தாய் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இறந்துவிட்டார்.

    இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த பண்டித சோழநல்லூர் பகுதியை சேர்ந்த தனசேகரன் (வயது 43) என்பவர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பன்னீர் வீட்டுக்கு வந்தார்.

    தொழிலாளியான இவர் அப்பகுதியில் தென்னை மட்டைகள் பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார்.

    எதிர்பாராதவிதமாக தென்னை குருத்து உடைந்தது.

    இதில் நிலை தடுமாறிய அவர் அருகில் சென்ற உயர்மின் அழுத்த கம்பியின் மீது விழுந்துள்ளார்.

    இதில் மின்சாரம் தாக்கியதில் தனசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரை மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சரவணன் (வயது 38) கூலி வேலை செய்து வருகிறார். இவர் சொந்த வேலையின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று மீண்டும் சேலம் செல்ல சின்ன சேலம் ஆவின் பாலகம் எதிரே உள்ள சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த லாரி மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரவணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    • அதிக வட்டி கேட்டு தொந்தரவு செய்ததால் பரிதாபம்
    • ரூ.70 ஆயிரம் தர வேண்டி உள்ளது என கூறி செல்லத்துரையிடம் தொடர்ந்து பணம் கேட்டு தெந்தரவு செய்துள்ளார்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள புங்கரை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 62), கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்தவரிடம் இருந்து ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

    பின்னர் இதற்காக வட்டி மற்றும் கடன் தொகையை முழுவதையும் கட்டி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் கொடுத்த நபர் இன்னும் ரூ.70 ஆயிரம் தர வேண்டி உள்ளது என கூறி செல்லத்துரையிடம் தொடர்ந்து பணம் கேட்டு தெந்தரவு செய்துள்ளார்.

    இதனால் செல்லத்துரை மனவேதனை அடைந்தார். அவர் நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்துள் ளார். இத னால் செல் லத்துரை மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் செல்லத்துரை இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தக்கலை பகுதியில் கந்து வட்டி கொடுமையால் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்துவிட்டு பெங்களுரில் தனியார் ஆஸ்பத்தியில் வேலை பார்த்து வருகிறார்.
    • குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே ஈஞ்சவிளை, செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56), தொழிலாளி. இவருக்கு ஜெயா (50) என்ற மனைவி யும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி மார்த்தாண் டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் பி.எஸ்.சி. நர்சிங் படித்து முடித்துவிட்டு பெங்களுரில் தனியார் ஆஸ்பத்தியில் வேலை பார்த்து வருகிறார்.

    ராஜேந்திரன் வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மது அருந்தி வந்தார். நேற்று மாலை வீட்டின் பின்புறம் தோட்டத்தில் மயங்கிய நிலையில் படுத்து இருந்தார். இவரது மனைவி ஜெயா பார்த்தபோது வாயில் இருந்து நுறை தள்ளியபடி இருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர்.

    டாக்டர் பரிசோதித்து பார்த்தபோது ராஜேந்திரன் ஏற்கனவே விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. ஜெயா குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    • சிவக்குமார் விஷ மருந்தை சாப்பிட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை பகுதியில் வசித்து வருபவர் வெங்கடாசலம் மகன் சிவக்குமார் (வயது 42). இவர் தறி ஓட்டும் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி கலாமணி (36). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடைபெற்றது. இவ ர்களுக்கு குழந்தை இல்லை.

    சிவகுமார் நீண்ட நாட்க ளாக கடும் வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததால் மரு த்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் வயிற்று வலி குணமாகாததாலும், தனக்கு குழந்தை இல்லாததாலும் மனவேதனையில் இருந்த சிவக்குமார் விஷ மருந்தை சாப்பிட்டார்.

    இதையடுத்து உறவின ர்கள் அவரை மீட்டு பெரு ந்துறை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்நி லையில் அங்கு சிகிச்சை பெ ற்று வந்த சிவகுமார் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.

    பின்னர் இது குறித்து அவரது மனைவி கலாமணி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×