search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "owner"

    • தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்களால் புகார் அளிக்கப்பட்டது.
    • வழக்கில் 6,131 பேரிடம், சுமார் ரூ.410 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரஹ்மான் நகரை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறியுள்ளார்.

    இதை நம்பி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் பலரும் கோடிக்கணக்கான ரூபாய் வரை முதலீடு செய்தனர். இதில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பணம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கமாலுதீன் இறந்த பிறகு அவரது மனைவி ரஹானா பேகம், கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி ஆகியோரிடம் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்களால் புகார் அளிக்கப்பட்டது.

    பின்னர் இந்த வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 6,131 பேரிடம், சுமார் ரூ.410 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இந்த மோசடி வழக்கில் கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி, கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மகன் அப்சல் ரகுமான், டிரான்ஸ்போர்ட் அலுவலக உதவியாளர்கள் என சிலரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் கமாலுதீனின் நண்பரான தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகரை சேர்ந்த அங்குராஜா (வயது 41) என்பவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

    கைதான அங்குராஜா தஞ்சையில் பிளக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கமாலுதீனுடன் சேர்ந்து ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களின் முதலீட்டு பணத்தில் அசையா சொத்துக்கள் வாங்கியும் விற்பனை செய்தும் லாபம் சம்பாதித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

    • இவர் பண்ருட்டியில் உள்ள துணிக்கடையில் ஜவுளி எடுக்க வந்தார்.
    • புகாரின் பேரில் அங்கிருந்த சி.சி.டி.வி. கோமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    கடலூர்:

    புதுவை மாநிலம் கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி. இவர் பண்ருட்டியில் உள்ள துணிக்கடையில் ஜவுளி எடுக்க வந்தார். அப்போது அவரது மணிபர்சை தவறவிட்டார். அதில் ரூ.8 ஆயிரம் இருந்தது. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் காணாமல் போன மணி பர்ஸை தேடி கண்டுபிடித்து உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து சென்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அபராதமும் விதித்து வருகிறார்கள்.
    • ரோட்டில் திரியும் மாடுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகரில் சாலையில் மாடுகள் சுற்றி திரிவதை தடுப்பதற்காக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து சென்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அபராதமும் விதித்து வருகிறார்கள். இருப்பினும் மாடுகள் ரோட்டில் நடமாடுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே ஐஸ்அவுஸ் பகுதியில் முதியவரை மாடு முட்டி தள்ளிய சம்பவம் நடைபெற்று உள்ளது. அதே பகுதியில் ஏற்கனவே போலீஸ்காரர் உள்பட 6 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு முட்டி தள்ளியது. நங்கநல்லூர் பகுதியிலும் இதே போன்று 3 பேரை மாடு முட்டு தள்ளிய சம்பவமும் நடை பெற்று உள்ளது. இந்த சம்பவங்களில் போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். ஐஸ்அவுஸ் பகுதியில் முதியவரை மாடு முட்டிய சம்பவத்துக்கு பிறகு அந்த பகுதியில் போலீஸ் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளும் ரோந்து சென்று ரோட்டில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 30 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சென்னையில் மாடுகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தனர். இதன் மூலம் ரோட்டில் திரியும் மாடுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • சம்பவத்தன்று உத்திராபதி என்பவர் இட்லியை கடனாக கேட்டுள்ளார்.
    • தனது ஆதரவாளருடன் கடைக்கு சென்று நெடுஞ்செழியனை தாக்கினார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கம்பளிமேடை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 52). இவர் அதே பகுதியில் இட்லி கடை வைத்து வந்துள்ளார். சம்பவத்தன்று உத்திராபதி என்பவர் இட்லியை கடனாக கேட்டுள்ளார். அப்போது நெடுஞ்செழியன் தர மறுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உத்ராபதி தனது ஆதரவாளருடன் கடைக்கு சென்று நெடுஞ்செழியனை தாக்கினார். அப்போது அதனை தடுக்க வந்த எழிலரசி, வசந்தா, ஆறுமுகம் ஆகியோரையும் தாக்கினார்கள். மேலும் எழிலரசியை மானபங்கம்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நெடுஞ்செழியன், எழிலரசி, ஆறுமுகம் ,வசந்தா ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெடுஞ்செழியன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் உத்ராபதி, மோகன், விஜி ஆகிய 3 பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கமுதி புறவழிச்சாலைக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
    • கமுதி புறவழிச்சாலைக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதியில் புறவழிச்சாலை அமைக்க கமுதி வருவாய் கிராமத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நிலம் வழங்கியவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து இழப்பீட்டுத் தொகை பெறலாம் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்திருந்தார். அதன்படி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஜானகி தலைமை யில் இதற்கான கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட 12 பட்டாதாரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தனர். 12 பேருக்கும் இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் சேதுராமன், மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன், தலைமை நில அளவையர் நாகவள்ளி மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

    • பேக்கரி உரிமையாளரிடம் நகை-பணம் மோசடி செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கீழக்கரை தெருவை சேர்ந்தவர் மகேந்திரன், பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியை வளர்மதி (வயது51). இவர்க ளது பேக்கரியில் விருதுநகர் ஆவலப்ப கோவில் தெருவை சேர்ந்த முத்து கணேஷ் (37) என்பவர் 17 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வீடு கட்டுவதற்கு உதவி செய்யும்படி மகேந்தி ரனிடம் கேட்டார். அவர் பல தவணைகளில் ரூ.10 லட்சம் கொடுத்தார். மீண்டும் உதவி கேட்டபோது வளர்மதி 24 பவுன் நகை களை கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பேக்கரிக்கு சரக்கு வாங்க கொடுத்த பணத்திற்கு சரியாக கணக்கு தராமல் முத்து கணேஷ் இருந்துள்ளார். மேலும் வீடு கட்டுவதற்கான பணிகள் எதனையும் அவர் செய்த தாகவும் தெரியவில்லை.

    இதைத்தொடர்ந்து வளர்மதி அவரிடம் பணம் மற்றும் நகையை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டார். இந்த நிலையில் அவர் வேலையை விட்டு சென்று விட்டார்.

    அதன் பின்பும் பலமுறை பணம்-நகையை திரும்ப கேட்டும் அவர் கொடுக்க வில்லை. இதையடுத்து விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் வளர்மதி புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடை உரிமையாளரை கைது செய்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி மேலூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவதாக மேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தஜோதி, கேசவன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் செக்கடி காய்கறி மார்க்கெட் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ரவிச்சந்திரன் என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

    • மனைவி மற்றும் உறவினர்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
    • காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    காங்கேயம் :

    காங்கேயம் அருகேயுள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது33). இவர் பெரிய இல்லியம் ரோட்டில் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை பழனிசாமி வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதனை கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆலை அதிபர் பழனிசாமிக்கும் அவரது குடும்பத்தினருக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதில் மன உளைச்சல் அடைந்த அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • பெரியசாமி மளிகை கடைக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் அரிசி மூட்டைகள் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.
    • சீனிவாசன் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் பெரியசாமி என்பவர் மளிகை கடை நடத்தி வருகி றார். இந்த நிலையில் திருப்பூர் அருகே உள்ள மங்கலம் சின்னாண்டிபாளையத்தில் காரைக்குடியை சேர்ந்த சீனிவாசன்(வயது 48) என்பவர் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இவர் பெரியசாமி மளிகை கடைக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் அரிசி மூட்டைகள் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.

    அந்த அரிசி மூட்டைகளுக்கு பணம் தராமல் பெரியசாமி தவணை சொல்லி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணத்தை வசூல் செய்வதற்காக வந்த சீனிவாசனை, பெரியசாமி தரப்பினர் தாக்கியுள்ளனர். அவர் வந்த காரையும் அடித்து நொறுக்கினர். இது குறித்து சீனிவாசன் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசனை தாக்கியவர்களை தேடி வந்த நிலையில், பெரியசாமியின் மளிகை கடையில் வேலை பார்க்கும் சின்னத்துரை(24) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.

    • மைக்செட் உரிமையாளர் மீது தாக்குதல் நடந்தது.
    • மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கட்டைய தேவன் பட்டி ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்(32). மைக்செட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று ஊத்துப்பட்டியில் உள்ள சூசையப்பர் ஆலய திருவிழாவிற்காக மைக்செட், சீரியல் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சோலைபட்டியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் மின்விளக்குகளை அணைத்துள்ளார். சரவணகுமார் அதனை தட்டிகேட்டார்.

    இதைத்தொடர்ந்து அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 11 பேர் சரவணகுமாருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் சரவணகுமார், அவருடைய சகோதரர் ரமேஷ்குமார்,உறவினர் வேல்முருகன் ஆகியோரை தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளை தற்காலிகமாக மூடி, ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
    • மீண்டும் குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளை தற்காலிகமாக மூடி, ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனால் குவாரிகளில் எம்.சாண்ட் உள்ளிட்ட பொருட்கள் எடுக்க முடியாமல் லட்சகணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதாகவும் எனவே மீண்டும் குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

    மேலும், குவாரிகளில் ஏற்கனவே தயாராக உள்ள எம்.சாண்ட் மற்றும் குண்டு கற்களை விற்பனைக்கு எடுத்து செல்ல அனுமதி வழங்க கோரி நெல்லை, தென்காசி மாவட்ட கல்குவாரி உரிமையாளர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தயாராக உள்ள எம்.சண்ட் குண்டு கற்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான ஆணைகளை கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி உள்ளதாகவும், ஆனால் 10 நாட்களாகியும் அனுமதி வழங்கவில்லை எனவும் குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்ட சீட்டு அடிப்போர் சங்கம் சார்பில் நிர்வாகி ரிச்சர்ட் தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் குவாரி உரிமையாளர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு இன்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் 48 குவாரிகளும், தென்காசி மாவட்டத்தில் 47 குவாரிகளும் உள்ளது.

    குவாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் எங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஏற்கனவே எடுக்கப்பட்ட எம்.சாண்ட் குண்டு கற்களை கொண்டு செல்ல கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. அதனை நாங்கள் கொடுத்த பின்பும் அனுமதி வழங்காமல் உள்ளனர்.

    எனவே அதற்கு உடனே அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சங்ககிரியை சேர்ந்தவர் ஜேடர்பாளையம் தடுப்பணையில் குளித்த ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் சாவு.
    பரமத்திவேலூர்:

    சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவார பகுதியை சேர்ந்தவர் ஷாநவாஸ் (வயது 40). இவர் அப்பகுதியில் ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்தி வந்தார். 

    இவர் குடும்பத்துடன் சுற்றுலா தனது மனைவி சுமையா மற்றும் இவரது மகன்கள் உமர்சாகித் (15), சையத் சமீத் (13) மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 15 பேர் பரமத்தி வேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையத்தில் காவிரியாற்றில் உள்ள படுகை அணை பூங்காவிற்கு சுற்றுலா வந்தனர்.
     
    பின்னர் காவிரி ஆற்றின் அருகில் உள்ள ராஜ வாய்க்காலில் அனைவரும் குளித்தனர். அப்போது ஷாநவாஸ் மட்டும் ஆழமான பகுதியில் குளித்தார். 

    அப்போது  திடீரென அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    தண்ணீரில் மூழ்கி பலி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் காணாமல் போன ஷாநவாஸை ராஜா வாய்க்காலில் தேடினர். 

    தண்ணீர் அதிகமாக சென்றதால் தண்ணீரில் மூழ்கியவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் போலீசார் பொதுப்பணித்துறையினர் உதவியுடன் ராஜா வாய்க்காலின் சட்டர்களை அடைத்தனர். 

    இதில் ஷாநவாஸ் ராஜா வாய்க்காலில் மூழ்கி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  போலீசார் அவரது ‌உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
     
    ஷாநவாஸ் உடலை பார்த்து அவரது மனைவி, மகன்கள், உறவினர்கள் கதறி அழுதனர்.   இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×