பண்ருட்டி துணிக்கடையில் காணாமல் போன மணிபர்சை கண்டுபிடித்து உரியவரிடம் ஓப்படைத்த போலீசார்

இவர் பண்ருட்டியில் உள்ள துணிக்கடையில் ஜவுளி எடுக்க வந்தார்.புகாரின் பேரில் அங்கிருந்த சி.சி.டி.வி. கோமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
போலீசார் மணிபர்சை உரியவரிடம் ஒப்படைத்த காட்சி.
போலீசார் மணிபர்சை உரியவரிடம் ஒப்படைத்த காட்சி.
Published on

கடலூர்:

புதுவை மாநிலம் கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி. இவர் பண்ருட்டியில் உள்ள துணிக்கடையில் ஜவுளி எடுக்க வந்தார். அப்போது அவரது மணிபர்சை தவறவிட்டார். அதில் ரூ.8 ஆயிரம் இருந்தது. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் காணாமல் போன மணி பர்ஸை தேடி கண்டுபிடித்து உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com