

காங்கேயம் :
காங்கேயம் அருகேயுள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது33). இவர் பெரிய இல்லியம் ரோட்டில் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை பழனிசாமி வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
இதனை கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆலை அதிபர் பழனிசாமிக்கும் அவரது குடும்பத்தினருக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதில் மன உளைச்சல் அடைந்த அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.