கடனுக்கு இட்லி கொடுக்காததால் ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்

சம்பவத்தன்று உத்திராபதி என்பவர் இட்லியை கடனாக கேட்டுள்ளார். தனது ஆதரவாளருடன் கடைக்கு சென்று நெடுஞ்செழியனை தாக்கினார்.
கடனுக்கு இட்லி கொடுக்காததால்  ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த கம்பளிமேடை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 52). இவர் அதே பகுதியில் இட்லி கடை வைத்து வந்துள்ளார். சம்பவத்தன்று உத்திராபதி என்பவர் இட்லியை கடனாக கேட்டுள்ளார். அப்போது நெடுஞ்செழியன் தர மறுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உத்ராபதி தனது ஆதரவாளருடன் கடைக்கு சென்று நெடுஞ்செழியனை தாக்கினார். அப்போது அதனை தடுக்க வந்த எழிலரசி, வசந்தா, ஆறுமுகம் ஆகியோரையும் தாக்கினார்கள். மேலும் எழிலரசியை மானபங்கம்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நெடுஞ்செழியன், எழிலரசி, ஆறுமுகம் ,வசந்தா ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெடுஞ்செழியன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் உத்ராபதி, மோகன், விஜி ஆகிய 3 பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com