சேலம் அன்னதானப்பட்டியில் வெள்ளிப் பட்டறை உரிமையாளர் மீது தாக்குதல்

சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியில் வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கினர்.
சேலம் அன்னதானப்பட்டியில் வெள்ளிப் பட்டறை உரிமையாளர் மீது தாக்குதல்
Published on

அன்னதானப்பட்டி:

சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 23). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கியதாக கூறப்படுகிறது.

 இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் , மதன் (26), ஷாஜகான் (22), முருகன் (23), ஏழுமலை (21), தமிழரசன் (20) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வழிப்பறி திருடர்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com