search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Rice Mill"

  • அரிசி ஆலைகள் விவசாயிகளிடம் இருந்து குவிண்டால் ஒன்றுக்கு 10 முதல் 12 கிலோ வரை நெல் சேகரிக்க அனுமதித்துள்ளனர்.
  • சட்டவிரோதமாக நெல் விற்பனை செய்ததன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கை மாறியுள்ளது.

  திருப்பதி:

  அரிசி ஆலையாளர்களிடம் இருந்து வசூலான ரூ.100 கோடியை தேர்தல் நிதியாக காங்கிரஸ் மேலிடத்திற்கு வழங்கியதாக பா.ஜ.க. குற்றம்சாட்டி உள்ளது.

  இது தொடர்பாக தெலுங்கானா மாநில பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் மகேஷ்வர் ரெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  தெலுங்கானா மாநில காங்கிரஸ் சட்டவிரோத நெல் கொள்முதலுக்கு அனுமதி வழங்கியுள்ளது. நெல் ரூ.1600 கோடிக்கு ரசீது இல்லாமல் விற்கப்பட்டது.

  அரிசி ஆலை உரிமையாளர்களிடம் காங்கிரஸ் கட்சி மந்திரி உத்தம் குமார் ரெட்டி மற்றும் சிவில் சப்ளை துறை அதிகாரிகள் ரூ.500 கோடி பெற்றனர். அதில் ரூ.100 கோடியை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு தேர்தல் நிதியாக உத்தம் குமார் ரெட்டி சமீபத்தில் கொடுத்தார்.

  "உத்தம்குமார் ரெட்டி முதல் மந்திரி பதவிக்கான பந்தயத்தில் இருக்கிறார், கட்சி மேலிடத்தை மகிழ்விப்பதற்காக, தேர்தலுக்கு 100 கோடி ரூபாய் அனுப்பினார்.

  அரிசி ஆலைகள் விவசாயிகளிடம் இருந்து குவிண்டால் ஒன்றுக்கு 10 முதல் 12 கிலோ வரை நெல் சேகரிக்க அனுமதித்துள்ளனர்.

  சட்டவிரோதமாக நெல் விற்பனை செய்ததன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கை மாறியுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பா.ஜ.க.வின் இந்த குற்றச்சாட்டு தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • நவீன அரிசி ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  தரங்கம்பாடி:

  மயிலாடுதுறை சித்தர்க்கா ட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை நிர்வாகம் ஐகோர்ட்டில் அளித்த உறுதி மொழியை மீறி சுற்றுச்சூழல் சீர்கேட்டில் ஈடுபடுவதாக கூறி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

  இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல்,

  , ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி மதியழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமணி தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமார் வரவேற்றார். இந்த ஆலையால் ஆயிரக்க ணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக வழக்கறிஞர்கள் கணபதீஸ்வரன், பாலாஜி, விஜயசுந்தரம், ஆறுமுகம், வசந்த் ஆகியோர் விளக்க உரையாற்றினார்.

  இதில் நவீன அரிசி ஆலை நிர்வாகம் ஐகோ ர்ட்டில் அளித்த உறுதிமொ ழிக்கு எதிராக, புழுங்கல் அரிசியை அரைக்க நாள் ஒன்றுக்கு 5 டன் உமியை எரித்து வருவதால் காற்றில் கரித்துகள்கள் பரவி மனிதர்களுக்குசுவாசக் கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட நோய் ஏற்ப டுகிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும் நவீன அரிசி ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

  இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஏழு மணி நன்றி கூறினார்.

  • மனைவி மற்றும் உறவினர்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
  • காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  காங்கேயம் :

  காங்கேயம் அருகேயுள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது33). இவர் பெரிய இல்லியம் ரோட்டில் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை பழனிசாமி வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

  இதனை கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆலை அதிபர் பழனிசாமிக்கும் அவரது குடும்பத்தினருக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதில் மன உளைச்சல் அடைந்த அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

  • மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது.
  • சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அரிசி ஆலை இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

  பல்லடம்:

  பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சிங்கனூர் பகுதியில் தனியார் அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. அரிசி ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். உரிய அனுமதி இன்றியும், விதிமுறைகளை மீறி இயங்கி வரும் அரிசி ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தும், அரிசி ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அரிசி ஆலையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ( திருப்பூர் தெற்கு ) சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன் அறிவுறுத்தலின்படிஉதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது.

  இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அந்த ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையின் பேரில் அரிசி ஆலையின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். இந்த நிலையில் மின் இணைப்பை துண்டித்த பின்னும் இரவு நேரங்களில் ஜெனரேட்டர் மூலம் அந்த அரிசி ஆலை இயங்குவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உரிய அனுமதி இன்றி செயல்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அரிசி ஆலை இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

  • அரிசி ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
  • பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

  பல்லடம் :

  பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சிங்கனூரில் பகுதியில் தனியார் அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. அரிசி ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். உரிய அனுமதி இன்றியும், விதிமுறைகளை மீறி இயங்கி வரும் அரிசி ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தும், அரிசி ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

  இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அரிசி ஆலையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ( திருப்பூர் தெற்கு ) சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன் அறிவுறுத்தலின்படிஉதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அந்த ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரிய த்திற்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையின் பேரில் அரிசி ஆலையின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். இதனால் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த அரிசி ஆலை இயக்கம் நிறுத்தப்பட்டது.

  • தனியாா் அரிசி ஆலை கடந்த 6 மாதங்களாக இயங்கி வருகிறது.
  • கனரக வாகனங்களால் மண் சாலை பழுதடைந்துள்ளது.

  திருப்பூர் :

  பொங்கலூா் ஒன்றியம் மாதப்பூா் ஊராட்சி சிங்கனூா் கிராமத்தில் தனியாா் அரிசி ஆலை கடந்த 6 மாதங்களாக இயங்கி வருகிறது. இந்த ஆலையின் கரித்துகள்கள் காற்றில் பறந்து சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. அரிசி ஆலைக்கு வரும் கனரக வாகனங்களால் மண் சாலை பழுதடைந்துள்ளது. இந்த ஆலை உரிய உரிமம் இன்றி இயங்கி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா்.

  இதைத் தொடா்ந்து, பல்லடத்தில் உள்ள திருப்பூா் (தெற்கு) மாவட்ட மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை உதவி செற்பொறியாளா் வனஜா, சம்பந்தப்பட்ட அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டாா்.

  • அரிசி ஆலை 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது.
  • அப்பகுதி சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது.

  திருப்பூர் :

  திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்கு உட்பட்ட மாதப்பூர் சிங்கனூர் பகுதி மக்கள் இன்று பள்ளி குழந்தைகளுடன் வந்து திருப்பூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

  எங்களது ஊர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரிசி ஆலை 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து கழிவு நீர் தொட்டியில் சேமிக்கப்பட்ட கழிவு நீர் அங்குள்ள தென்னை மரங்களுக்கு உபயோகப்படுத்தப்படுவதால் அப்பகுதி சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஆலையின் பாய்லர் கழிவுகள் புகை கூண்டு மற்றும் சேமிப்பு தொட்டிகளில் இருந்து நச்சு துகள்கள் காற்றில் கலந்து அருகில் உள்ள துவக்கப்பள்ளி மற்றும் சிங்கனூரில் உள்ள அனைத்து வீடுகளின் சமையல் கூடங்கள் , படுக்கையறை , வீட்டு வாசலில் காய வைக்கப்படும் துணிகள் , இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் மீது சாரல் மழை போல் கரி மற்றும் தவிட்டு துகள்கள் விழுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு அப்பகுதி பொது மக்களுக்கு சளி இருமல் உள்ளிட்ட நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது . அரிசி ஆலை முறையாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்தவித அனுமதியும் பெறாததற்கான சான்றுகள் உள்ள நிலையில் அரிசி ஆலையின் மீது நடவடிக்கை எடுத்து சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும்.

  இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

  • சிப்காட் நவீன அரிசி ஆலையில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
  • இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

  சிவகங்கை

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் நவீன அரிசி ஆலையை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  பின்னர் அவர் கூறியதாவது:-

  சிவகங்கை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை மழையிலிருந்து நனையாமல் பாதுகாக்கும் வகையில் 60.600 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூறை அமைப்பிலான நெல் சேமிப்பு மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணி முடிக்கப்பட்ட 31,600 மெட்ரிக் டன்கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு மேடைகள் முதல்-அமைச்சரால் கடந்த 11-ந் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

  மேலும் 14,573 மெட்ரிக் டன் நகர்வு செய்யப்பட்ட நெல்லில் 2,000 மெட்ரிக் டன், மானாமதுரை சிப்காட் நவீன அரிசி ஆலை வளாகத்தில் முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்பிலான மேடையில் சேமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12,573 மெட்ரிக் டன் நெல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் மானாமதுரை நவீன அரிசி ஆலையின் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாடு நகர்பொருள் வாணிப கழகம் சிவகங்கை மண்டலத்தில் 2022-23-ல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு சிவகங்கை மாவட்டத்தில் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கடந்த 21-ந் தேதி வரை 19,365 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

  அதில் 14,573 மெட்ரிக் டன் நகர்வு செய்யப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதலில் 4,549 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 3,134 விவசாயிகளுக்கு ரூ.29.40 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  மேலும் மானாமதுரை பகுதிகளில் 25 இடங்களில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு. நவீன அரிசி ஆலை வளாகத்தில் மேற்கூரை அமைப்பிலான நெல் மேடைகளில் சேமிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், செயற்பொறியாளர் முருகன், மேலாளர் முத்துப்பாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

  • தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் வழங்கப்படும் நெல் மூட்டைகளை அரைத்து அரிசியை பேக்கிங் செய்து அரசுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • ரேஷன் அரிசியை வாங்கி பாலிஷ் செய்து கொடுக்கக் கூடாது.

  திருப்பூர் :

  திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் அரிசி ஆலையில் தமிழக அரசின் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

  திருப்பூரில் இயங்கும் தனியார் அரிசி ஆலையில், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் வழங்கப்படும் நெல் மூட்டை களை அரைத்து அரிசியை பேக்கிங் செய்து அரசுக்கு வழ ங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிசி அரவை ஆலையில் தனி நபர்களின் நெல் அரைத்து கொடுக்கப்படுகிறதா அல்லது அரிசி ஆலையில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறப்பு புலனாய்வுத் துறையின் டிஜிபி ஆபாஸ் குமார் கோவை மண்டல எஸ்.பி பாலாஜி ஆகியோர் உத்தரவிட்டனர்.

  இதையடுத்து ஈரோடு சரக டிஎஸ்பி சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் இசக்கி, கார்த்தி, போலீசார் அரிசி ஆலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் வழங்கும் எல்லை மட்டும் ஆலையில் அரவை செய்து அரிசியை பேக்கிங் செய்து கொடுக்க வேண்டும் ரேஷன் அரிசியை வாங்கி பாலிஷ் செய்து கொடுக்கக் கூடாது. தனிநபர்களின் நெல்லை அரைத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டுமென அரிசி ஆலை நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டது.

  அரிசி ஆலையில் முறைகேடு கண்டறியப்ப ட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்ததாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்தனர்.

  • கிருஷ்ணமூா்த்தி தனது குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா்.
  • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.

  காங்கயம்

  காங்கயம், அய்யாசாமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (வயது 40), அரிசி ஆலை நடத்தி வருகிறாா். இந்நிலையில், கிருஷ்ணமூா்த்தி தனது குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுள்ளாா். மதியம் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

  இது குறித்து காங்கயம் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூா்த்தி புகாா் அளித்தாா்.வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி கொள்ளையர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.