என் மலர்
நீங்கள் தேடியது "Malpractice"
- மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது.
- சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அரிசி ஆலை இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சிங்கனூர் பகுதியில் தனியார் அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. அரிசி ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். உரிய அனுமதி இன்றியும், விதிமுறைகளை மீறி இயங்கி வரும் அரிசி ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தும், அரிசி ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அரிசி ஆலையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ( திருப்பூர் தெற்கு ) சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன் அறிவுறுத்தலின்படிஉதவி சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா தலைமையில் அதிகாரிகள் அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் அரிசி ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அந்த ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரியத்திற்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையின் பேரில் அரிசி ஆலையின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். இந்த நிலையில் மின் இணைப்பை துண்டித்த பின்னும் இரவு நேரங்களில் ஜெனரேட்டர் மூலம் அந்த அரிசி ஆலை இயங்குவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உரிய அனுமதி இன்றி செயல்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அரிசி ஆலை இயக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
- மரக்கன்று வளர்ப்பு திட்டப்பணிகள் மந்தம் தண்ணீர் ஊற்றாததால் கருகி வருகின்றன
- 100 நாள் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்லைக்கு உள்பட்ட அபிராமம் பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் மூலம் மரக்கன்று வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட்டபோதி லும், சில நூறு மரக்கன்றுகள் கூட இப்போது இல்லை. இதனால் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கபடுகின்றனவா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், ஒடைகள், வரத்துக்கால்வாய்கள், நீர்பிடிப்பு பகுதிகளில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வாங்கப்பட்டு நடப்படுகின்றன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் (100 நாள் வேலைத்திட்டம்) பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் பசுமை பகுதியாக மாற வாய்ப்புள்ளதால் அரசு நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஊரகப்பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக மரக்கன்றுகள் வளர்க்கப் பட்டு வருகின்றன. இவற்றில் வேம்பு, அரசு மா, பலா, புளி, தேக்கு புங்கன் போன்ற 15-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.
மொத்தமாக மரக்கன்று கள் நடப்பட்டுள்ள இடங்களில் தண்ணீர் ஊற்றுவதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர்தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலான இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டாலும் சில 100 குழிகளில் மட்டுமே மரக்கன்றுகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை வைத்து பெயரளவில் தண்ணீர் ஊற்றும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கூறும்போது, மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பல குழிகளில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளமே இல்லை. ஆனாலும் அதிகாரிகள் உத்தரவின்படி 100 நாள் திட்டப் பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. மேலும் பல கிராமங்களில் 100 நாள் திட்டம் மூலம் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதாக கணக்கு எழுதப்படுகிறது. ஆனால் எங்குமே மரக்கன்றுகள் இல்லை.
பணியாளர்கள் எண் ணிக்கை கணக்கெடுப்பு நடத்தப்பட்டவுடன் ஒருசில குழிகளில் மட்டுமே தண்ணீர் ஊற்றப்படுகிறது. பிறகு பணியாளர்கள் ஓய்வு எடுக்க சென்று விடுகின்றனர். தண்ணீர் ஊற்றியும் மரக்கன்றுகள் வளராததற்கு என்ன காரணம்? என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.
எனவே அரசு மரக்கன்று கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் தண்ணீர் ஊற்றுவது பெயரளவில் மட்டுமே நடக்கிறது. இதனால் முறையாக மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றவும் 100 நாள் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுபற்றி 100 நாள் வேலைத்திட்டத்தை கண்காணிக்கும் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறும்போது, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கொண்டு வரப் பட்ட திட்டம் தான் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் அரசு நிலங்கள், சாலையோரங்கள், கண்மாய், குளம், ஊரணி கரைகளில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களில் மட்டும் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் அக்டோ பர் மாதம் முதல் டிசம்பர் வரை மட்டும் தான் பரவ லாக மழை இருக்கிறது. மற்ற 9 மாதங்களில் 55 சதவீத தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. பெரும்பாலன கிராமங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை யில், மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்றுவது சிரம மாக உள்ளது.
இருந்தபோதிலும் ஊராட்சிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் இருப்பு உள்ள இடங்களில் அடி பம்பு பொருத்தி தண்ணீர் எடுத்து மரக்கன்றுகளுக்கு தண்ணிர் ஊற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
- முறைகேடு செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் மீது தாசில்தாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- புகாரின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி சிவசுப்பிரமணியபுரம் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட ராமசாமி கோவில் இடத்திற்கான பட்டாவில் தனி நபர்களின் பெயரினை இணைத்து முறைகேடு செய்ததாக ஆவுடையானூர் கிராம நிர்வாக அலுவலர் மீது தென்காசி தாசில்தாரிடம் ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபி தலைமையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் புகாரின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டவிரோத பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் நீக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதில் தமிழன் மக்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகன் சமூக ஆர்வலர்கள் ரமேஷ்குமார்,செல்லப்பா மற்றும் பாதிக்கப்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை என்ஜினீயராக பணியாற்றியவர் அல்போன்ஸ். இவர் நகராட்சி கமிஷனராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இதே காலக்கட்டத்தில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றியவர் வேல் முருகன்.
அருப்புக்கோட்டையை சேர்ந்த சங்கரன் என்பவர் தனது விசைத்தறி கூடத்தை விஸ்தரிப்பு செய்வதற்காக நகராட்சி கமிஷனர் பொறுப்பு வகித்த அல்போன்சை அணுகினார். சங்கரனின் சகோதரர் மணிவண்ணன் என்பவரும் சங்கரனுடன் சென்று இருந்தார். இவர்கள் விசைத்தறி கூட விஸ்தரிப்புக்கான விண்ணப்பம் தராத நிலையிலும், அல்போன்சும், நகரமைப்பு ஆய்வாளர் வேல்முருகனும் விதிமுறைகளை மீறி முறைகேடாக சங்கரனுக்கும், மணிவண்ணனுக்கும் விசைத்தறி கூடத்துக்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முறைகேடாக அனுமதி வழங்கியது தெரியவந்தது. அதன் பேரில் இது குறித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கோரினர். உயர் அதிகாரிகள் அனுமதி அளித்ததன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அல்போன்ஸ், நகரமைப்பு ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் சங்கரன், மணிவண்ணன் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.