search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "damages"

    • இயர் பட்ஸ் பயன்படுத்தி அழுக்குகளை எடுக்கிறோம்.
    • அழுக்குகள் உள்பகுதியில் செல்கிறது.

    நகத்தை எப்படி வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து நகத்தை வெட்டுகிறோம். அதேபோல தான் காதுகளையும் அடிக்கடி சுத்தம் செய்வோம். அதனை சுத்தம் செய்வதற்கு சில நபர்கள் ஊக்கு, சில நபர்கள் கோழி இறகு, இன்னும் சில நபர்கள் இயர் பட்ஸ் பயன்படுத்துவார்கள். இயர் பட்ஸ் பயன்படுத்துவதினால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

    காது அடைப்பு

    காதுகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு இயர் பட்ஸ் பயன்படுத்தி அழுக்குகளை எடுக்கிறோம். ஆனால் இயர் பட்ஸ் பயன்படுத்தும் போது நடுப்பகுதியில் இருக்கும் அழுக்குகள் உள்பகுதியில் செல்கிறது. இதனால் அழுக்குகள் சேர்ந்து காது அடைப்பை ஏற்படுத்தும்.

    காதில் இருக்கும் மெழுகுகள் காதுகளின் ஆரோக்கியத்தை பாதுக்காக்கிறது. அதேநேரம் அந்த மெழுகினை அடிக்கடி எடுத்தால் காதில் எரிச்சலையும், வறட்சியையும் ஏற்படுத்தும்.

    காயம்:

    காதுகளில் அடிக்கடி இயர் பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் அல்லது சீழ் வடிதல் பிரச்சினையை உண்டாக்கும். மேலும் காதின் செவி தன்மையை பாதித்து காது கேட்காமல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

    நாம் சாப்பிடும் உணவுகளின் சுவையை அறிவதற்கு காதுகளின் நடுப்பகுதியில் ஒரு நரம்பு செல்கிறது. இதில் நீங்கள் இயர் பட்ஸ் பயன்படுத்தும் போது இந்த நரம்பினை பாதித்தால் உணவின் சுவையை அறிய முடியாது.

    அதனால் அடிக்கடி இனி இயர் பட்ஸ் பயன்படுத்தாதீர்கள். மேலும் ஊக்கு, குச்சி, கேர்பின் போன்றவை பயன்படுத்தி காதுகளில் உள்ள அழுக்குகளை எடுக்க பயன்படுத்தாதீர்கள் அது உங்களுக்கே பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது.

    • மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வீரமணி உயிரிழந்தார்.
    • போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள ஊத்தங்கால் பழைய காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் வீரமணி (வயது 24). இவர் கடந்த 4.5.2017 அன்று ஊ.மங்கலம் அம்பேத்கர் சிலை அருகே கடலூர்-விருத்தாசலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வீரமணி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து வீரமணியின் தாய் அனுசுயா, சகோதரி ரதி ஆகியோர் நஷ்டஈடு பெற்றுத்தரக்கோரி கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் பலியான வீரமணியின் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட விழுப்புரம் போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.17 லட்சத்து 73 ஆயிரத்து 600 வழங்க வேண்டும் என கடந்த 18.3.2021 அன்று உத்தரவிட்டார். ஆனால் இதுநாள் வரை வீரமணியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வீரமணியின் குடும்பத்தினர், நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், வீரமணியின் குடும்பத்துக்கு விழுப்புரம் போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.23 லட்சத்து 68 ஆயிரத்து 129 வழங்க வேண்டும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    • குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளனர்.
    • பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 19.9.2022 அன்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிகிச்சை முடிந்ததும் பத்மாவதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பிறகு பத்மாவதிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பத்மாவதியை பரிசோதனை செய்ததில் பிரசவத்தின் போது குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளதும், அதனால் தான் வயிறு வலி ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட பத்மாவதி, சிகிச்சை முடிந்ததும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு, எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது. 

    இதனையடுத்து பத்மாவதி மற்றும் அவரது கணவர், குழந்தைகள், உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 24-ந்தேதி வந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். அவர்களிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அறுவை சிகிச்சை யின் போது குடலையும், கர்ப்பபையினையும் சேர்த்து தையல் போட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென பத்மாவதி குடும்பத்தார் வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து பத்மாவதி குடும்பத்தார் அங்கிருந்து சென்றனர். 

    இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு பத்மாவது, அவரது கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் ஆஸ்ப த்திரியின் டாக்டர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்பாக காணப்படுகிறது.

    • மகனின் இறப்புக்கு நஷ்டஈடு கோரி பா.ஜ.க. நிர்வாகி மனு கொடுத்தார்.
    • மாவட்ட நிர்வாகமும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராளியைச் சேர்ந்தவர் முனியாண்டி. பா.ஜ.க. கிளைச்செயலாளராக உள்ளார். இவரது மகன் தினேஷ்குமார் ஒரு கட்டிட ஒப்பந்ததாரர்.

    அவர் மேல்நிலைத்தொட்டி கட்டுமான பணிக்காக கடந்த 2021-ம் ஆண்டு வெளியூர் சென்றார் . அப்போது அவர் பாம்பு கடித்து இறந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மகனின் இறப்புக்கு நிவாரணம் கோரி முனியாண்டி தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனிடம் மனு கொடுத்தார். அந்தமனு விசாரிக்கப்பட்டு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கும் படி பரிந்துரைக்கப்பட்டது.

    மாவட்ட நிர்வாகமும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் தற்போது வரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நிவாரணம் பெற்றுத்தருமாறு கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனில் முனியாண்டி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    • இளையராஜா (வயது 44). இவர் தனது நிலத்தில் தென்னங்கன்று வைத்து அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மூலம் பராமரித்து வந்தார்.
    • கனகராஜ் மற்றும் 3 நபர்கள் திடீரென்று நிலத்திற்குள் நுழைந்து 30 தென்னங் கன்றுகளை சேதப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 44). இவர் தனது நிலத்தில் தென்னங்கன்று வைத்து அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மூலம் பராமரித்து வந்தார். இந்த நிலையில் இளையராஜா, கனகராஜை வேலைக்கு வர வேண்டாம் என நிறுத்திவிட்டார்.   சம்பவத்தன்று கனகராஜ் மற்றும் 3 நபர்கள் திடீரென்று நிலத்திற்குள் நுழைந்து 30 தென்னங் கன்றுகளை சேதப்படுத்தினர். இதனை தட்டிக் கேட்ட இளையராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் கனகராஜ், அருள், வேல் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் பலியான தொழிலாளிக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    • கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

    கடலூர்:

    புவனகிரி அருகே உள்ள வில்லியநல்லூரை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் நவீன்ராஜ் (வயது 48), தொழிலாளி. இவர் கடந்த 9.7.2018 அன்று மோட்டார் சைக்கிளில் கடலூர்-பூண்டியாங்குப்பம் சாலையில் சென்ற போது, அவ்வழியாக வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் மோதியதில் உயிரிழந்தார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் நஷ்டஈடு பெற்று தரக்கோரி கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 21.1.2021 அன்று, நவீன்ராஜ் குடும்பத்திற்கு விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.12 லட்சத்து 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்காததால் நவீன்ராஜ் பெற்றோர், கோர்ட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கடலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், விபத்தில் இறந்த நவீன்ராஜ் குடும்பத்திற்கு விழுப்புரம் போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.15 லட்சத்து 4 ஆயிரத்து 311 கொடுக்க வேண்டும், இல்லையென்றால் சம்ப ந்தப்பட்ட போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ் ஜப்தி செய்ய ப்படும் என உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனால் கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    தோல்விக்கான காரணம் குறித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபல டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா டென்னிஸ் பேட் மூலம் நடுவரின் இருக்கையை சேதப்படுத்தியுள்ளார். #Pliskovalostcool #italianopentennis #blacklistforever
    உலகின் முதல் 5 டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக வலம் வருபவர் கரோலினா பிளிஸ்கோவா. இவர் நேற்று நடைபெற்ற இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் 3-6, 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் மரியா சக்காரி என்பவரிடம் தோல்வியை தழுவினார்.

    மூன்றாவது செட்டில் பிளிஸ்கோவா அடித்த பந்து சரியான கோட்டிற்குள் விழுந்துள்ளது. ஆனால், கோட்டிற்கு வெளியே விழுந்ததாக கூறி நடுவர் தனது முடிவை அறிவித்ததால், பிளிஸ்கோவா தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக நடுவர் மார்தாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிளிஸ்கோவா, போட்டி முடிந்தபிறகு தனது பேட் மூலம் நடுவரது நாற்காலியை தாக்கி சேதப்படுத்தினார்.

    பிளிஸ்கோவாவின் சகோதரியும் டென்னிஸ் வீராங்கணையுமான கிரிஸ்டினா தனது டுவிட்டர் பக்கத்தில், நடுவர் மார்தா குறித்த கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவில், ‘நான் பார்த்த நடுவர்களில் மிகவும் மோசமான நடுவர் மார்தா. எனக்கும் எனது சகோதரிக்கும் இனி வரும் போட்டிகளில் மார்தா நடுவராக வரமாட்டார் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவில், ‘மார்தாவை முழுவதுமாக தடை செய்ய வேண்டும்’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்திருந்தார். #Pliskovalostcool #italianopentennis #blacklistforever
    பொத்தனூர், பாண்டமங்கலம் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் 50 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்தில் வாழை விவசாயம் பிரதானமாக உள்ளது. குறிப்பாக பொத்தனூர், பாண்டமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் வாழைகள் பயிரிட்டு உள்ளனர்.

    தோட்டத்தில் வெட்டப்படும் வாழைக்குலைகளை பரமத்திவேலூரில் உள்ள மண்டிகளுக்கு மொத்தமாக எடுத்து வந்து ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு வாழை குலைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக சென்னைக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது.

    நேற்று முன்தினம் பகலில் பரமத்திவேலூர், பாண்ட மங்கலம், பொத்தனூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழக்கம்போல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது.

    இதில் பொத்தனூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழைகள் அடியோடு முறிந்து விழுந்தன. இதே போல் பாண்டமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளும் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன.

    வாழைகளுக்கு நாட்டப்பட்டிருந்த கம்புகளும் காற்றில் பெயர்ந்து கீழே சாய்ந்தது. அதுபோல் கயிறுகள் அறுந்து வாழைகள் கீழே சாய்ந்தன. பலத்த காற்றில் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்ததாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    சாகுபடி செய்யப்பட்ட பூவன், கற்பூரவள்ளி, ரஸ்தாலி, மொந்தன், பச்சநாடான் போன்ற வாழை குலைகள் பிஞ்சிலேயே சேதம் அடைந்ததால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×