search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pothanur"

    • ரூ. 1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருடு போனது.
    • செல்ேபான் திருடும் சி.சி.டி.வி காட்சி வைரலாகி வருகிறது.

    கோவை,

    கோவை போத்தனூரை சேர்ந்தவர் புண்ணியகோடி.

    இவர் சாரதா மில் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்தனர். அதில் நள்ளிரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் செல்போன்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் அவர் யார் என தேடி வருகின்றனர். இந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

    மேலும் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் நேற்று இரவு ஒரே நாளில் அடுத்தடுத்து மேலும் 2 செல்போன் கடைகளில் திருடு போனதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 3 செல்போன் கடைகளில் திருடு போன சம்பவம் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் உரிமையாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சுந்தராபுரம்-மதுக்கரை மார்க்கெட் ரோடு மேம்பாலம் அருகே பாழடைந்த கிணறு உள்ளது
    • கிணற்றில் ஆணின் உடல் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    குனியமுத்தூர்

    கோவை சுந்தராபுரம்-மதுக்கரை மார்க்கெட் ரோடு மேம்பாலம் அருகே பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று திடீரென தூர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதி மக்கள் அங்கு சென்று கிணற்றை எட்டி பார்த்தனர். அப்போது கிணற்றில் ஆணின் உடல் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இதுகுறித்து மக்கள் போத்தனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நடசேன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து கிணற்றில் இறந்து கிடந்த ஆணின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் உடலை சோதனை செய்தனர்.

    அப்போது அவரது பாக்கெட்டில் டிரைவிங் லைசன்ஸ் இருந்தது.அதனை எடுத்து விசாரித்தபோது அவர் மதுக்கடை மார்க்கெட் ரோடு எம்.எல்.ஏ வீதியை சேர்ந்த துரைராஜ் (வயது 42) என்பது தெரியவந்தது. அவர் மாயமானதாக அவரது மனைவி அஜந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்திருந்தார். துரைராஜ் சிட்கோவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    அவருக்கு 12 மற்றும் 10 வயதில் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் குடிபோதையில் தவறி விழுந்தாரா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • தென்மாவட்டங்களில் சுற்றுலாதலங்களுக்கு வருவோர் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

    கோவை:

    மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி (எண் 06029), திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரெயில் (எண் 06030) கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவையில் இருந்து மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்வோர், தென்மாவட்டங்களில் இருந்து கோவை, ஊட்டி சுற்றுலாதலங்களுக்கு வருவோர் என ஏராளமானோர் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த ரெயிலானது கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

    இந்தநிலையில் இன்று முதல் கோவை மாவட்டம் போத்தனூர் ரெயில் நிலையத்திலும் ரெயில் நின்று செலலும் என சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    • கோவிலின் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்

    கோவை:

    கோவை மதுக்கரை ரோட்டில் ஸ்ரீ பூங்குழலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முருகானந்தம் (வயது 70) என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கோவிலை மூடிவிட்டு சென்றார்.

    நள்ளிரவு கோவிலின் கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் உண்டியலை திறந்து அதில் இருந்த ரூ.3 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து முருகானந்தம் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    • 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.

    குனியமுத்தூர்,

    போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆட்டுத் தொட்டி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இப்பகுதியில் எதிர் எதிரே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. அதனால் எந்த நேரமும் குடிமகன்கள் இப்பகுதியில் கும்மாளமிட்டு வருவது வழக்கம். சாலையோரமாக நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனத்தில் உள்ள பொருட்களை அபேஸ் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டுச் செல்லும் ஹெல்மெட்டுகள் மேலும் வீட்டிற்கு வாங்கி செல்லும் பொருட்கள் ஆகியவை காணாமல் போய் விடும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது அடிதடி ரகளை சம்பவங்களும், கூச்சல் குழப்பங்களும் இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பயந்து கடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

    ஈச்சனாரியை சேர்ந்த முத்து என்பவர் நேற்று சாரதா மில் ரோட்டில் அமைந்துள்ள அரசன் தியேட்டர் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு டிக்கெட் விவரம் தெரிந்து கொள்ள உள்ளே சென்றார். இரண்டு நிமிடங்களில் வெளிவருவதற்குள் வாகனத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த பேக் திருட்டு போய்விட்டது.

    ரூபாய் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கியிருந்த பேக் திருடு போய்விட்டதால், அதிர்ச்சி அடைந்த அவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தியேட்டர் வளாகத்தில் அமைந்துள்ள சி.சி.டி.வி. காமிரா மூலம் போலீசார் ஆய்வு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். இதுமட்டுமன்றி சராசரியாக ஒரு நாளைக்கு 10 -க்கும் மேற்பட்ட ஹெல்மெட்டுகள் காணாமல் போய் வருகிறது.

    சாரதாமில் ரோடு கார்னரில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது. நடந்து செல்லும் தூரத்தில் போத்தனூர் காவல் நிலையமும் உள்ளது. ஆனாலும் இப்பகுதியில் திருட்டு நபர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட இப்பகுதியில் 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும். ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் கூறுகையில், 24 மணி நேரமும் சீருடை இல்லாத போலீசார் இப்பகுதியை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை மீறுபவர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பின் தொடர்ந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினர். 

    பொத்தனூர் மகாமாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள‌ பொத்தனூர் மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் மற்றும் பூக்குண்ட திருவிழா கடந்த 8-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    15-ந் தேதி மறு காப்பு கட்டுதலும்,16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிம்மம்,ரிஷபம், அன்னபட்சி,பூதகி, யானை மற்றும் குதிரை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    22-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், 23-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்மன் ரதம் ஏறுதலும், மாலை 4 மணிக்கு திருத்தேர் வீதி வழியாக  உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தொடர்ந்து சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை சேர்ந்தது. 

    நேற்று மாலை தீக்குண்டத்தில் இறங்கும் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் தயாராக இருந்த தீக்குண்டத்தில் ஆண் பக்தர்கள் இறங்கியும், பெண்கள் பூ போட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இன்று (புதன்கிழமை) காலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் , அலகு குத்துதியும் ஊர்வலமாக சென்றனர்.

    இன்று இரவு வாண வேடிக்கை நடைபெறுகிறது. நாளை காலை கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும்,27-ந் தேதி மஞ்சள் நீராடலும்,28-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 29, மற்றும் 30-ந் தேதி முதற்கால மற்றும் 2-ம் கால யாக பூஜையும், அன்னபாவாடை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. 

    விழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் மகா மாரியம்மன் கோவில் அறக்கட்டளையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். எந்தவித அசம்பா விதங்களும் ஏற்படாத வகையில் பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின்வாரிய ஊழியர்கள் ஆங்காங்கே மின் கம்பிகளை துண்டித்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    போத்தனூர் அருகே ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    போத்தனூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் பெரிய சாமி (வயது 25). ஆட்டோ டிரைவர். இவருக்கு குடிப் பழக்கம் உண்டு. இதை அவரது மனைவி இந்துமதி (24) கண்டித்துள்ளார். இதனால் பெரியசாமி நான் தற்கொலை செய்யப் போகிறேன் என மனைவியை மிரட்டி வந்துள்ளார்.

    நேற்று மாலை பெரியசாமி குடிபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது பெரியசாமி, நான் தற்கொலை செய்யப் போகிறேன் என கூறி சேலையில் தூக்கு போடுவது போல நடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலை இறுக்கி பெரியசாமி தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இந்துமதி சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பெரியசாமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் அவர் இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போத்தனூரில் சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்த பெண் மீது ஸ்டவ் வெடித்து சிதறியது. இதில் காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    கோவை:

    போத்தனூர் பாரதிநகரை சேர்ந்தவர் நாகராஜ். கார் டிரைவர். இவரது மனைவி அமலா (வயது 21). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பவத்தன்று அமலா வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர் பாராதவிதமாக ஸ்டவ் வெடித்து சிதறியது.

    இதில் அமலாவின் உடலில் தீப்பற்றி படுகாயம் அடைந்து கதறினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக் காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்

    இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    பொத்தனூர், பாண்டமங்கலம் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் 50 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்தில் வாழை விவசாயம் பிரதானமாக உள்ளது. குறிப்பாக பொத்தனூர், பாண்டமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் வாழைகள் பயிரிட்டு உள்ளனர்.

    தோட்டத்தில் வெட்டப்படும் வாழைக்குலைகளை பரமத்திவேலூரில் உள்ள மண்டிகளுக்கு மொத்தமாக எடுத்து வந்து ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு வாழை குலைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக சென்னைக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது.

    நேற்று முன்தினம் பகலில் பரமத்திவேலூர், பாண்ட மங்கலம், பொத்தனூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழக்கம்போல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது.

    இதில் பொத்தனூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழைகள் அடியோடு முறிந்து விழுந்தன. இதே போல் பாண்டமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளும் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன.

    வாழைகளுக்கு நாட்டப்பட்டிருந்த கம்புகளும் காற்றில் பெயர்ந்து கீழே சாய்ந்தது. அதுபோல் கயிறுகள் அறுந்து வாழைகள் கீழே சாய்ந்தன. பலத்த காற்றில் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்ததாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    சாகுபடி செய்யப்பட்ட பூவன், கற்பூரவள்ளி, ரஸ்தாலி, மொந்தன், பச்சநாடான் போன்ற வாழை குலைகள் பிஞ்சிலேயே சேதம் அடைந்ததால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    போத்தனூர் அருகே 8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    போத்தனூர் அருகே உள்ள கருணாநிதிநகரை சேர்ந்தவர் குமார்(வயது 35). கூலி தொழிலாளி. இவர் அப்பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறினார். மாணவி மறுப்பு தெரிவித்த போது, என்னை காதலிக்க வில்லை என்றால் உன் மீது ஆசிட் வீசுவேன் என மிரட்டினார். இதனால் மாணவி பயந்து போனார்.

    இதை பயன்படுத்தி குமார், மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். நடந்த சம்பவங்களை மாணவி தனது தாயிடம் கூறி அழுதார். அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் குமார் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய கிழக்கு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×