போத்தனூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

கோவிலின் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்
போத்தனூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
Published on

கோவை:

கோவை மதுக்கரை ரோட்டில் ஸ்ரீ பூங்குழலி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த முருகானந்தம் (வயது 70) என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கோவிலை மூடிவிட்டு சென்றார்.

நள்ளிரவு கோவிலின் கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் உண்டியலை திறந்து அதில் இருந்த ரூ.3 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து முருகானந்தம் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com