என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போத்தனூர் அருகே மாயமான தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்பு
- சுந்தராபுரம்-மதுக்கரை மார்க்கெட் ரோடு மேம்பாலம் அருகே பாழடைந்த கிணறு உள்ளது
- கிணற்றில் ஆணின் உடல் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குனியமுத்தூர்
கோவை சுந்தராபுரம்-மதுக்கரை மார்க்கெட் ரோடு மேம்பாலம் அருகே பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று திடீரென தூர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதி மக்கள் அங்கு சென்று கிணற்றை எட்டி பார்த்தனர். அப்போது கிணற்றில் ஆணின் உடல் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து மக்கள் போத்தனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நடசேன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து கிணற்றில் இறந்து கிடந்த ஆணின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் உடலை சோதனை செய்தனர்.
அப்போது அவரது பாக்கெட்டில் டிரைவிங் லைசன்ஸ் இருந்தது.அதனை எடுத்து விசாரித்தபோது அவர் மதுக்கடை மார்க்கெட் ரோடு எம்.எல்.ஏ வீதியை சேர்ந்த துரைராஜ் (வயது 42) என்பது தெரியவந்தது. அவர் மாயமானதாக அவரது மனைவி அஜந்த கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்திருந்தார். துரைராஜ் சிட்கோவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
அவருக்கு 12 மற்றும் 10 வயதில் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் குடிபோதையில் தவறி விழுந்தாரா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.