மகனின் இறப்புக்கு நஷ்டஈடு கோரி பா.ஜ.க. நிர்வாகி மனு

மகனின் இறப்புக்கு நஷ்டஈடு கோரி பா.ஜ.க. நிர்வாகி மனு கொடுத்தார். மாவட்ட நிர்வாகமும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.
மகனின் இறப்புக்கு நஷ்டஈடு கோரி பா.ஜ.க. நிர்வாகி மனு
Published on

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராளியைச் சேர்ந்தவர் முனியாண்டி. பா.ஜ.க. கிளைச்செயலாளராக உள்ளார். இவரது மகன் தினேஷ்குமார் ஒரு கட்டிட ஒப்பந்ததாரர்.

அவர் மேல்நிலைத்தொட்டி கட்டுமான பணிக்காக கடந்த 2021-ம் ஆண்டு வெளியூர் சென்றார் . அப்போது அவர் பாம்பு கடித்து இறந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மகனின் இறப்புக்கு நிவாரணம் கோரி முனியாண்டி தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனிடம் மனு கொடுத்தார். அந்தமனு விசாரிக்கப்பட்டு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கும் படி பரிந்துரைக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகமும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் தற்போது வரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நிவாரணம் பெற்றுத்தருமாறு கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனில் முனியாண்டி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com