search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை நஷ்ட ஈடு கேட்டு பண்ருட்டி பெண், உறவினர்கள் தர்ணா: கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
    X

    கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சையில் நஷ்ட ஈடு கேட்டு இரண்டாம் நாளாக தர்ணாவில் ஈடுபடும் பெண் மற்றும் அவரது உறவினர்களை படத்தில் காணலாம்.

    கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை நஷ்ட ஈடு கேட்டு பண்ருட்டி பெண், உறவினர்கள் தர்ணா: கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு

    • குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளனர்.
    • பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 19.9.2022 அன்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிகிச்சை முடிந்ததும் பத்மாவதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பிறகு பத்மாவதிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பத்மாவதியை பரிசோதனை செய்ததில் பிரசவத்தின் போது குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளதும், அதனால் தான் வயிறு வலி ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட பத்மாவதி, சிகிச்சை முடிந்ததும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு, எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது.

    இதனையடுத்து பத்மாவதி மற்றும் அவரது கணவர், குழந்தைகள், உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 24-ந்தேதி வந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். அவர்களிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அறுவை சிகிச்சை யின் போது குடலையும், கர்ப்பபையினையும் சேர்த்து தையல் போட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென பத்மாவதி குடும்பத்தார் வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து பத்மாவதி குடும்பத்தார் அங்கிருந்து சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு பத்மாவது, அவரது கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் ஆஸ்ப த்திரியின் டாக்டர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்பாக காணப்படுகிறது.

    Next Story
    ×