என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோட்டீஸ்"

    • மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
    • பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு 43 வயதான நபர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    கர்நாடகாவில் கடந்த சிலநாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கியதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. தலைநகர் பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, கோலார், தும்கூரு, ஹாசன் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

    இந்த நிலையில், பெங்களூரு சாலைகளில் ஏற்பட்ட சேதத்தினால் வாகனம் ஓட்ட முடியாமல் உடல் மற்றும் மனா ரீதியாக பாதிப்பு அடைந்ததாக கூறி பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு 43 வயதான நபர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    அந்த நோட்டீஸில் "நான் வரி செலுத்தும் ஒரு குடிமகன். பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நகரின் அடிப்படை உள்கட்டமைப்பை பராமரிக்க தவறியுள்ளது. பெங்களூரு நகரின் இந்த மோசமான சாலைகளில் பயணிக்கும்போது உடல் ரீதியான துன்பங்களையும் மன வேதனையையும் எதிர்கொண்டேன். இதனால் ஏற்பட்ட கடுமையான கழுத்து மற்றும் முதுகு வலி காரணமாக, எலும்பியல் மருத்துவமனைக்கு ஐந்து முறை சென்றேன். எனக்கு 4 முறை அவசர சிகிச்சை அளித்தனர்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நோட்டீஸுக்கு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் எதுவும் வரவில்லை.

    • சாமி புறப்பாடு செய்து சோமவார மடத்தில் இருந்து அன்னதானம் செய்வது வழக்கம்.
    • கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்ட அனுமதி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வர சுவாமிக்கு தெற்கு வீதியில் சோமவார மடம் இருந்து வருகிறது.

    இந்த மடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பூண்டி சைவ செட்டியார்கள் 4வது சோமவாரத்தில் உபயங்கள் செய்து, சாமி புறப்பாடு செய்து அந்த சோமவார மடத்தில் இருந்து அன்னதானம் செய்வது வழக்கம்.

    இந்த இடத்திற்கு திருப்பூண்டி சைவ செட்டியார்கள் சார்பில் கோவிலுக்கு முறையாக குத்தகை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து குடியிருந்து வருகிறார்தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்ததால் அந்த கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்கள் அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி கோரினர்.

    இந்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறையினர் அந்த கட்டித்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர் இந்த நிலையில் தற்சமயம் அந்த கட்டிடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வரும் தனி நபருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு, அதன் நகல் கதவில் ஒட்டப்பட்டது.

    அந்த ஆக்கிரமிப்புதாரர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் அறநிலையத்துறை சார்பில் அந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டிடம் கட்ட திருப்பூண்டி சைவ செட்டியார்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    இதன்படி நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுபடி நாகை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, வேதாரண்யம் கோவில் நிர்வாக அதிகாரி கவியரசு மற்றும் வருவாய்துறையினர், கோவில் பணியாளா்கள் ஜே.சி.பிஇயந்திரம் மூலம் கட்டிடத்தை வேதாரண்யம்காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஆய்வாளர்கள்குணசேகரன் கன்னிகா, பசுபதி, மற்றும் போலிசார், பாதுகாப்புடன் பழுதடைந்த ஓட்டுவீட்டைஇடித்து அகற்றினர்

    பின்பு திருக்கோயில் வசம் இடம் எடுக்கப்பட்டது. அக்கிரமிப்பில் இருந்து மீட்க பட்டசொத்தின் மதிப்பு சுமார்ரூ. 1 கோடி என கூறப்படுகிறது.

    • சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளுக்கு முறைகேடாக மண், மரம் கடத்துவதாக புகார் எழுந்தது.
    • அப்போது அனுமதியின்றி நடத்திய 12 செங்கல் சூளைகளுக்கு தாசில்தார் வெங்கடேசன் ‘நோட்டீஸ்’ வழங்கினார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளுக்கு முறைகேடாக மண், மரம் கடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கெங்கவல்லி தாசில்தார் வெங் கடேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் கெங்கவல்லி, கடம்பூர், தெடாவூர், ஆணையாம்பட்டி, நடுவலுார், மண்மலை, தம்மம்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம் பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அனுமதியின்றி நடத்திய 12 செங்கல் சூளைகளுக்கு தாசில்தார் வெங்கடேசன் 'நோட்டீஸ்' வழங்கினார்.

    • பூரண மதுவிலக்கு கேட்டு தொடர்ந்த வழக்கில் தலைமை செயலாளர்-டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
    • இதற்கு சீராய்வு மனுவை காந்திராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளர் காந்திராஜன். இவர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2021-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மது விலக்கு விவகாரம் அரசின் கொள்கை முடிவு.

    இதில் தலையிட முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் இதற்கு சீராய்வு மனுவை காந்திராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் அரசு பூரண மதுவிலக்கை எப்போது கொண்டு வரும். அதற்கான கால அட்டவணை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அரசு தலைமை செயலாளர் டாஸ்மாக் மேலாண் இயக்குநர், ஆயத்தீர்வை இயக்குநர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

    • திருச்செங்கோட்டில் ஒரு சில கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என கடுமையாக எச்சரித்தனர்.
    • தனியார் நெய் கம்பெனி நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது அந்த கம்பெனி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி இன்றி செயல்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர பகுதிகளில் உள்ள 33 வார்டுகளிலும் டீக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட கடைகள் உள்ளன். இங்கு திருச்செங்கோடு நகராட்சி அதிகாரிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    ஆயில் கண்டு பிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்த முடியாதவாறு அழிக்கப்பட்டது . ஒரு சில கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர் . மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என கடுமையாக எச்சரித்தனர்.

    தொடர்ந்து அங்குள்ள ஒரு தனியார் நெய் கம்பெனி

    நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது அந்த கம்பெனி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி இன்றி செயல்பட்டு வருவது கண்டு

    பிடிக்கப்பட்டது.

    இதை யடுத்து அந்த நிறுவனத்திற்கு அனுமதி

    பெறுமாறும் இல்லை யென்றால் சீல் வைக்கப்ப டும் எனவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    • பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வரிபாக்கியை பலர் செலுத்தவில்லை.
    • ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சொத்து வரி, 3 கோடியே, 65 லட்சம், குடிநீர் கட்டணம், 3 கோடியே, 3 லட்சம், பாதாள சாக்கடை திட்டத்தில், 81 லட்சம் உள்பட, 7.50 கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி உள்ளது. வரிபாக்கி உள்ள தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வரிபாக்கியை பலர் செலுத்தவில்லை.

    இந்த நிலையில் நேற்று நகராட்சி வருவாய் ஆய்வாளர் லூக்காஸ், வருவாய் உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கிருஷ்ணகிரி டி.பி., லிங்க் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜப்தி நோட்டீசை ஒட்டினார்கள். அதில், கடந்த 3 ஆண்டுகளாக மண்டபத்தின் தொழில்வரி, சொத்துவரி கட்டப்படவில்லை.

    நிலுவைத ்தொகையான, 3 லட்சத்து, 21 ஆயிரத்து, 608 ரூபாயை வருகிற 6-ந் தேதிக்குள் கட்டத்தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நகராட்சியில் வரி பாக்கி நிலுவையுலுள்ள அனைவரும் உடனடியாக வரியை கட்டுமாறும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    • பள்ளியை பூட்டிவிட்டு மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து சென்ற 7 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது
    • பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் வேளாங்கண்ணிக்கு கல்வி சுற்றுலா சென்றனர்

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கரு.தெற்கு தெரு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் வேளாங்கண்ணிக்கு கல்வி சுற்றுலா சென்றனர். இதற்கு கல்வி துறையின் அனுமதியை பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் பள்ளிக்கூடம் பூட்டப்பட்டிருப்பதை அறிந்து விசாரித்தனர். அப்போது மாணவர்களை ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா அழைத்து சென்றதும் அதற்கு உரிய அனுமதி பெறாததும் தெரியவந்தது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வைரலாகியது. இதையடுத்து கல்வி சுற்றுலா சென்ற மாணவர்களை ஆசிரியர்கள் அவசரமாக ஊருக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் கறம்பக்குடி வட்டார கல்வி அலுவலர் என மொத்தம் 7 பேரிடம் அறந்தாங்கி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டியை சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்துள்ள நிலையில், கரு.தெற்கு தெரு அரசு நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளை அனுமதியின்றி கடல் பகுதிக்கு அழைத்து சென்றது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இது குறித்து வடகாடு போலீஸ் விசாரித்து வருகிறது.


    கடைகளை காலி செய்ய நகராட்சி நோட்டீஸ்

    அரியலூர்,

    அரியலூர் நகராட்சியாக கடந்த 2010ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இந்த நகராட்சியானது 7.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 30 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இந்த நகராட்சியில், 1975ம் ஆண்டு சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. சுமார் 25 பேருந்துகள் நிறுத்தும் வசதி கொண்ட இந்த பேருந்து நிலையத்தில் தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. சுமார் 30 கி.மீ சுற்றளவு பகுதிகளில் இருந்து அன்றாட 10 ஆயிரம் மேற்பட்ட பயணிகள் இந்த பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். 48 ஆண்டுகால பழைய கட்டிடத்தில் 60 கடைகள் ஏலம் விட்டப்பட்டிருந்தாலும், சுமார் 100 கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளது,இதனால் பயணிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்பது அரியலுார் மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. இதனை ஏற்று தமிழக அரசும், அரியலூரில் மத்திய பேருந்துநிலையம் அமைக்கப்படும் என அறிவித்து, இதற்கென 7.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான டெண்டர் பணிகளும் முடிவடைந்த நிலையில் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது.இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் உரிமை யாளர்களுக்கு நோட்டிஸ் வழங்கியுள்ளது. புதிய பேருந்து நிலையம் கட்டு மான பணி முடியும் வரையில், தற்காலிகபேருந்து நிலையம் அரியலூர் -திருச்சி புறவழிச்சாலையில் உள்ள தனியார் இடத்தில் செயல்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடி ந்தவுடன் டெண்டர் மூலம் கடைகள் ஏலம் விடப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    • ஊட்டியில் விரைவில் கோடை சீசன் தொடங்குகிறது.
    • போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தவிர்க்க இந்த நோட்டீஸ் வழங்கபட்டு உள்ளது.

    ஊட்டி

    ஊட்டியில் விரைவில் கோடை சீசன் தொடங்குகிறது. இதையொட்டி மலர் கண்காட்சி நடைபெறும். இதற்கான தற்போதே பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஊட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் போலீசார், ஊட்டியில் சாலையோரமாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து உள்ளவர்களுக்கு கடைகளை உடனடியாக அகற்றும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. தவறும்பட்சத்தில் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், மார்ச் மாதம் முதல் ஊட்டியில் சீசன் காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். மேலும் முக்கிய நபர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு கருதியும் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தவிர்க்க இந்த நோட்டீஸ் வழங்கபட்டு உள்ளது. என்றனர்.

    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
    • தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத்தேர்வு கடந்த 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த தனித்தேர்வரான அந்தியூரை சேர்ந்த ஆம்புலன்சு டிரைவர் மணிகண்டன் (வயது 25) என்பவர் நேற்று பள்ளிக்கு சென்றார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த தலைமை ஆசிரியை மணிகண்டனிடம் பயிற்சி வகுப்புக்கு முறையாக வராததால் செய்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றால் ஏ 4 அளவு கொண்ட வெள்ளை காகிதம் 4 பண்டல்களை வாங்கி வந்து கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் மணிகண்டனும் அருகில் உள்ள கடைக்கு சென்று வெள்ளை காகித பண்டல்களை வாங்கி வந்தார்.

    இதேபோல் நன்னடத்தை சான்றிதழ் வாங்க வந்த ஒரு வாலிபரிடமும் 2 பண்டல்கள் வெள்ளை காகிதம் வாங்கி வர சொன்னதாக கூறப்படுகிறது.

    இதனால் மணி கண்டன் ஆசிரியை களிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது தலைமை ஆசிரியை கூறுகையில், "இந்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து பல்வேறு பொருட்களை வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.

    அதுபோல் வெள்ளை காகித பண்டல்களையும் விருப்பத்தின்பேரில் வாங்கி கொடுத்தார்கள். ஆனால் மணிகண்டனிடம் நாங்கள் காகித பண்டல்களை வாங்கி வரச்சொல்லி கேட்க வில்லை" என்று கூறினார்.

    இதையடுத்து மணிகண்டனை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நடந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் 120 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருவதாக தெரிகிறது.
    • 15 நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று ரெயில்வே சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது.

    கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் நகர், வள்ளியம்மன் நகர், கரிமேடு உள்ளிட்ட ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் 120 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருவதாக தெரிகிறது.

    இந்தநிலையில் அவர்கள் 15 நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று ரெயில்வே சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் 120 குடும்பங்களை சேர்ந்த 609 பேர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க கோரியும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் பிரகாஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் மனு அளித்தனர்.

    • அறிவிப்பு பலகைகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் வைக்கும் பணி நடந்து வருகிறது
    • 25 ஆக்கிரமிப்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    நீலகிரி

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் கீழ் கைத்தளா பகுதியில் விரிவாக்க பணி நடைபெற உள்ளதால், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வருகிற மே மாதம் கோடை விழா நடைபெறுகிறது. இதை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக சமவெளி பகுதிகளுக்கு செல்லும். நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் சாலையோரங்களில் வைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை அரவேனு கீழ் கைத்தளா பகுதியில் உள்ள குறுகிய வளைவை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அந்த இடத்தை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதால், அந்த இடத்தை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது:- கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை கைத்தளாவில் நில அளவை செய்ததில், நெடுஞ்சாலை இடத்தில் வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த இடத்தில் சாலை மேம்பாடு பணிகள் நடைபெற உள்ளதால், தாங்களாகவே உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் காவல்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதற்குண்டான செலவு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த நோட்டீஸ் அப்பகுதியில் உள்ள 25 ஆக்கிரமிப்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஜக்கனாரை ஊராட்சி தலைவர், கீழ் கைத்தளா பகுதியில் அகற்றப்படும் வீடுகளுக்கு மாற்றாக வேறு பகுதியில் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    ×