நெல்லிக்குப்பத்தில் 30 தென்னங் கன்றுகளை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்கு

இளையராஜா (வயது 44). இவர் தனது நிலத்தில் தென்னங்கன்று வைத்து அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மூலம் பராமரித்து வந்தார். கனகராஜ் மற்றும் 3 நபர்கள் திடீரென்று நிலத்திற்குள் நுழைந்து 30 தென்னங் கன்றுகளை சேதப்படுத்தினர்.
நெல்லிக்குப்பத்தில்  30 தென்னங் கன்றுகளை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்கு
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 44). இவர் தனது நிலத்தில் தென்னங்கன்று வைத்து அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மூலம் பராமரித்து வந்தார். இந்த நிலையில் இளையராஜா, கனகராஜை வேலைக்கு வர வேண்டாம் என நிறுத்திவிட்டார்.   சம்பவத்தன்று கனகராஜ் மற்றும் 3 நபர்கள் திடீரென்று நிலத்திற்குள் நுழைந்து 30 தென்னங் கன்றுகளை சேதப்படுத்தினர். இதனை தட்டிக் கேட்ட இளையராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் கனகராஜ், அருள், வேல் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com