குமாரபாளையத்தில் சில்லி சிக்கன் கடைக்கு சீல் வைப்பு

குமாரபாளையம் பள்ளிப்பாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் விற்கப்பட்ட சிக்கன் துர்நாற்றம் வீசியது. இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டதையடுத்து நேற்று இந்த கடையை பூட்டினர்.
குமாரபாளையத்தில் சில்லி சிக்கன் கடைக்கு சீல் வைப்பு
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் பள்ளிப்பாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் விற்கப்பட்ட சிக்கன் துர்நாற்றம் வீசியது. கடையில் ஆய்வு செய்ததில் கெட்டுப்போன இறைச்சி குளிர்சாதனப்பெட்டியில் இருந்ததை பறிமுதல் செய்தனர்.இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டதையடுத்து நேற்று இந்த கடையை பூட்டினர்.

இது பற்றி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் கூறுகையில், பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் எந்த உணவு பொருள் கடையாக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் பல கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com