என் மலர்

  நீங்கள் தேடியது "Ambai"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • நகர மகளிரணி தலைவி சுமதி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

  கல்லிடைக்குறிச்சி:

  இந்துக்கள் பற்றி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா அவதூறாக பேசியதாக கூறி அவரை கண்டித்து அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ.க. நகரத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராம்ராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஊரக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் லெட்சுமண ராஜா, வீகேபுரம் நகர தலைவர் தங்கேஸ்வரன், நகர பிரபாகரி பால்பாண்டி, அம்பை ஒன்றிய தலைவர் சண்முக பிரகாஷ், சேரை மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத், சேரை கிழக்கு ஒன்றிய தலைவர் சின்ன முருகன், அம்பை நகர பொதுச்செயலாளர்கள் சுகுமாரன், சுதன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சிவராமகிருஷ்ணன், மகளிரணி பொதுச்செயலாளர் செல்வி சுப்பிரமணியன்,நகர துணைத்தலைவர்கள் செல்வராஜ், வன்னியப்பன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார், நகர மகளிரணி தலைவி சுமதி, நகர இளைஞரணி தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூல்மாடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • லைசென்ஸ் எடுக்க தனது பெற்றோரிடம் அவர் பணம் கேட்டுள்ளார்.

  நெல்லை:

  அம்பைைய அடுத்த கோடாரங்குளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மகன் பூல்மாடன்(வயது 27).

  நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூல்மாடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வி.கே.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர்.

  பின்னர் பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பூல்மாடனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு பூல்மாடன் வாகனம் ஓட்டி படித்துவிட்டு அதற்கு லைசென்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளார். லைசென்ஸ் எடுக்க பணம் தேவைப்பட்டுள்ளது.

  உடனே அவர் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், சிறிது நாட்கள் கழித்து லைசென்ஸ் எடுத்து கொள்ளலாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

  இதனால் மனம் உடைந்த பூல்மாடன் கோபத்தில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் இந்த ஆண்டு ஆவணி தேரோட்டத்திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நேற்று மாலை நடந்தது.

  வி.கே.புரம்:

  அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் இந்த ஆண்டு ஆவணி தேரோட்டத்திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  தினமும் அய்யா தண்டில் வாகனம், கருட வாகனம், உள்ளிட்ட 11 வாகனங்களில் வீதி உலா வந்து மக்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8 மற்றும் 10-ம் திருவிழாக்களில் பால்குடம் எடுத்தல், சந்தன குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஆரம்பித்த நாள் முதல் தினமும் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, பணிவிடை, பால் தர்மம் மற்றும் இரவு 8 மணிக்கு மேல் அன்ன தர்மம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.

  விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நேற்று மாலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யா ஸ்ரீ மன் நாராயணசாமி எழுந்தருளி கோவிலை பவனி வந்தார். இதில் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  நிகழ்ச்சியில் வாகைபதி இளைஞர் குழுவினரின் செண்டை, சிங்காரி மற்றும் நையாண்டி மேளத்துடன் சிறப்பு வானவேடிக்கையும், சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது. இரவு 11 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை வாகைபதி அன்பு கொடிமக்கள் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல்லிடைக்குறிச்சி மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
  • காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையும், சில பகுதியில் மதியம் 1 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கல்லிடைக்குறிச்சி:

  கல்லிடைக்குறிச்சி மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதல் கூறியிருப்பதாவது:-

  நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்வரும் கோட்டத்தை சார்ந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்தடை ஏற்படும்.

  ஆழ்வான் துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து,பனையங்குறிச்சி,நாலாங்கட்டளை,கீழக்குத்தபாஞ்சான்,காசிதர்மம்,முக்கூடல்,சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர்,சாட்டுபத்து, அரிகேசவநல்லூர்,வெள்ளாங்குளி,ரெங்கசமுத்திரம், ஊர்க்காடு, அம்பாசமுத்திரம், வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தி யர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி,வைராவிக்குளம்,பொன்மாநகர்,தெற்கு பாப்பான் குளம்,மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர்,ஏர்மாள்புரம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையும், ஆவுடையனூர், மனல்காட்டலூர், பண்டாரகுளம், வள்ளி யம்மாள்புரம், பாப்பான் குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அம்பாசமுத்திரத்தில் உள்ள புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது42), இவர் கடந்த 14-ந் தேதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிக்க சென்றார்.
  • இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  கல்லிடைக்குறிச்சி:

  அம்பாசமுத்திரத்தில் உள்ள புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது42), இவர் கடந்த 14-ந் தேதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிக்க சென்றார்.

  அப்போது மோட்டார் சைக்கிளை படித்துறை அருகே நிறுத்திவிட்டு குளிக்க சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தப்போது, அதனை காணவில்லை.

  இதுகுறித்து சீனிவாசன் அம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  இதில் நெல்லை தாழையூத்து சங்கர் நகரை சேர்ந்த நாகராஜன் (24), மேலப்பாளையம் அகமது பிள்ளை தெருவை சேர்ந்த முகமது அபுபக்கர் சித்திக் (21) ஆகிய இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

  இதையடுத்து அம்பை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு நாகராஜன், முகமது அபுபக்கர் சித்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணவன்-மனைவிக் கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
  • இது தொடர்பாக அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சிங்கை:

  அம்பை பெரியகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி கார்த்திகை செல்வி (வயது30). இவர்களுக்கு முத்துமாரி (6), சுபதர்ஷனி (5) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

  கணவன்-மனைவிக் கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

  நேற்றும் அவர்களுக் கிடையே வக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  இதில் மனமுடைந்த கார்த்திகை செல்வி தனது மகள்களுடன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

  உடனடியாக அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இது தொடர்பாக அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடித்தபசு திருவிழா கடந்த மாதம் 31 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

  கல்லிடைக்குறிச்சி:

  அம்பையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சின்ன சங்கரன் கோவில் என்று அழைக்கப்படும் கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவிலில் ஆடித் தபசு திருவிழா கடந்த மாதம் 31 -ந் தேதி கோவிலில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

  தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலை என இரு வேலைகளிலும் அபிஷேகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டு தினம்தோறும் ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் வழங்கினர்.

  ஆடித்தபசு நாளான நேற்று கோமதியம்மனை தரிசனம் செய்ய சின்ன சங்கரன்கோவிலில் அம்பை, வி.கே.புரம், கல்லிடை உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

  தொடர்ந்து ஆடித்தபசுவையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து சங்கரநாராயணராக வந்து கோமதி அம்மனுக்கு காட்சியளித்தார்.

  இதனைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து கோவிலில் திருக்கல்யாணமும் நடைபெற்றது.

  இந்த திருவிழாவையொட்டி அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமை‌யிலான போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல் பாலீஸ் செய்யும் 19 எந்திரங்கள் மற்றும் ஒரு வெல்டிங் எந்திரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
  • மின்மோட்டார் மற்றும் காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது.

  நெல்லை:

  அம்பை பண்ணை சங்கரையா தெருவை சேர்ந்தவர் வைர முத்து(வயது 74). இவர் சின்ன சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தனது வயலில் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

  சம்பவத்தன்று அவரது வயலில் நிறுத்தியிருந்த பவர் டிரில்லர், அங்கிருந்த மின்மோட்டார் மற்றும் காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக வைரமுத்து அம்பை போலீசில் புகார் அளித்தார்.

  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

  அம்பை சம்பந்தர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கணேசன்(29). இவர் அடையகருங்குளம் ரைஸ்மில் தெருவில் கல் செதுக்கும் தொழில் நடத்தி வருகிறார். கடந்த 3-ந்தேதி வழக்கம்போல் அவர் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

  மறுநாள் காலை சென்று பார்த்தபோது கல் பாலீஸ் செய்யும் 19 எந்திரங்கள் மற்றும் ஒரு வெல்டிங் எந்திரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

  இதுதொடர்பாக வி.கே.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு போன எந்திரங்கள் மதிப்பு ரூ.2.80 லட்சம் ஆகும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல்லிடைக்குறிச்சி கோட்டத்தை சேர்ந்த ஓ.துலுக்கர்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • 6-ந் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

  நெல்லை:

  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தின் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் ( விநி யோகம்) சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

  கல்லிடைக்குறிச்சி ேகாட்டத்தை சேர்ந்த ஓ.துலுக்கர்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் ( சனிக்கிழமை) மின் விநியோகம் தடைபடும்.

  அதன்படி ஓ.துலுக் கர்பட்டி துணை மின்நிலை யத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் ஆழ்வான்துலுக்கர்பட்டி, ஓ.துலுக்கர்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்ப்டடி, தாழையூத்து, பனையங் குறிச்சி, நாலாங்கட்டளை, கீழ குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

  அதேபோல் வீரவ நல்லூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கல்லிடைக் குறிச்சி, காரைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், கூனி யூர், வெள்ளாங்குளி, புதுக்குடி, ரெங்கசமுத்திரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும். அம்பாசமுத்திரம் துணை மின்நிலையம் மூலம் மின்விநியோகம் பெறும் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார் கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி பகுதிகளில் காலை 9 மணிமுதல் 2 மணி வரை மின்தடை இருக்கும். மணிமுத்தாறு துணை மின்நிலையத்திற்குட்பட்ட மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவி குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை. ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

  கடையம் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் ஆவுடையானூர், மணல் காட்டானூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், மற்றும் சிவநாடானூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அம்பாசமுத்திரம் பகுதியில் புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • பள்ளி மாணவ, மாணவிகள் பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பேரணியாக வந்தனர்.

  கல்லிடை:

  உலக புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு அம்பாசமுத்திரம் பகுதியில் புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது.

  அம்பை வனச்சரக அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய பேரணி தாலுகா அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழியாக பூக்கடை பஜாரில் திரும்பி தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி, கலைக்கல்லூரி, வழியாக சென்று வனத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை அடைந்தது, பேரணியில் வனத்துறையினர் ஒலிம்பிக் தீபம் ஏந்தி தொடர் ஓட்டமாக கொண்டு வந்து ஏற்றினர்.

  இதில் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி, மெரிட் மேல்நிலைப்பள்ளி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி, கேம்ப்ரிட்ஜ் பள்ளி மாணவ, மாணவிகள், கலந்து கொண்டு புலிகளின் முக்கியத்துவம், வனப் பாதுகாப்பின் அவசியம், மரம் நடுதலின் அவசியம் பற்றிய பதாகைகள் ஏந்தியும், கோசங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணியாக வந்தனர். மேலும் புலிகள் தினத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு வனத்துறை சார்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் வரையப்பட்ட ஓவியங்கள் வன உயிரினக்காப்பாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பயிற்சி வனச்சரகர் கிருத்திகா புலிகளின் எண்ணிக்கை அதன் குணாதியங்கள், வனப் பாதுகாப்பு விபரங்களை தெரிவித்து பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சுபா பிரசவத்திற்காக அம்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • சிகிச்சை பலனளிக்காமல் சுபா பரிதாபமாக உயிரிழந்தார்.

  நெல்லை:

  நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை அருகே உள்ள தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்தவர் சுபா ( வயது 29).

  இளம்பெண்

  இவருக்கும் விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுபா நாகர்கோவிலில் உள்ள சித்த மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி வந்தார். இதனால் அவர்கள் அங்கே வீடு எடுத்து குடியிருந்து வந்தனர். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சுபா பிரசவத்திற்காக அம்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

  திடீரென அவருக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவர் அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

  ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுபா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print