அம்பை அருகே விவசாயி தற்கொலை

அம்பையை அடுத்த வி.கே.புரம் சிவந்திபுரம் மடத்து தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). விவசாயி. மது பழக்கத்திற்கு மாரியப்பன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.
அம்பை அருகே விவசாயி தற்கொலை
Published on

நெல்லை:

அம்பையை அடுத்த வி.கே.புரம் சிவந்திபுரம் மடத்து தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). விவசாயி. இவர் நெஞ்சு வலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனிடையே மது பழக்கத்திற்கு மாரியப்பன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10-ந் தேதி வீட்டில் வைத்து மதுவில் விஷத்தை கலந்து குடித்து மாரியப்பன் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com