அம்பையில் தண்ணீரில் மூழ்கி முதியவர் பலி

நடராஜன் குடும்பத்தை பிரிந்து சாலையோரம் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.முடப்பாலம் கல்வெட்டாங்குழிக்கு நடராஜன் சென்றபோது தண்ணீரில் மூழ்கி பலியானார்.
அம்பையில் தண்ணீரில் மூழ்கி முதியவர் பலி
Published on

நெல்லை:

அம்பை சம்பந்தர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது75). இவர் குடும்பத்தை பிரிந்து சாலையோரம் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கடை வியாபாரிகள், பொதுமக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு அங்கேயே படுத்து தூங்கி வந்துள்ளார். சம்பவத்தன்று அம்பை அருகே உள்ள முடப்பாலம் கல்வெட்டாங்குழிக்கு சென்றார்.

இந்நிலையில் திடீரென தண்ணீரில் மூழ்கி பலியானார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு அம்பை போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com