அம்பை சோதனையில் 21 கிலோ பறிமுதல்: சென்னையில் இருந்து கஞ்சா கடத்தி வந்த மேலும் 3 பேருக்கு வலைவீச்சு

அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன்,மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை படத்தில் காணலாம்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை படத்தில் காணலாம்
Published on

கல்லிடைக்குறிச்சி:

அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சந்திரன், மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு லோடு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் மானுரை சேர்ந்த இசக்கிமுத்து (39), சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த இசக்கி பாண்டி, நெல்லை டவுனை சேர்ந்த மடத்தான், சிவா ஆகியேரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com