search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cannabis seized"

    • அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன்,மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சந்திரன், மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு லோடு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் மானுரை சேர்ந்த இசக்கிமுத்து (39), சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த இசக்கி பாண்டி, நெல்லை டவுனை சேர்ந்த மடத்தான், சிவா ஆகியேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சேலம் ரெயிலில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை கேரள மாநிலம் நோக்கி சென்ற தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. 

    அந்த ரெயிலில் சேலம் ெரயில்வே பாதுகாப்பு படையினர் கஞ்சா கடத்தலை தடுக்க சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் பெரிய 
    பை ஒன்று சந்தேகத்திற்கிடமாக இருந்தது. 

    அந்த பையை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. இதைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த பையை சோதனை செய்த போது, அதில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 

    அதனை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்ற விவரம் தெரியவில்லை.  சேலம் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ெரயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை அருகே போதை பொருள் விற்றதாக 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    மதுரை:

    தமிழகத்தில் போதை பொருட்களான கஞ்சா, புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனை திருட்டுத்தனமாக விற்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை வைகை தென்கரை சர்வீஸ் ரோட்டில் சிலர் கஞ்சா விற்பதாக கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையாவுக்கு தகவல் கிடைத்தது. அவர் போலீசாருடன் சென்று சோதனை நடத்தியபோது கஞ்சா விற்றதாக 2 பேரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் கைதானவர்கள் சின்னராஜ் (வயது 30) அய்யனார்குளம், உசிலம்பட்டி, காவேரி (35) என தெரிய வந்தது.

    இதேபோல் தல்லாகுளம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக திருப்பதி, பாலா, மாணிக்கம், பெரியவீரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 583 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. #tamilnews
    திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, 2 சிம்கார்டுகள் ஆகியவற்றை சிறை வார்டன்கள் பறிமுதல் செய்தனர்.
    திருச்சி:

    சென்னை சிந்தாமணி அண்ணாநகரை சேர்ந்தவர் சங்கர்(வயது 32). ஆயுள்தண்டனை கைதியான இவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சங்கரை புழல் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றினார்கள். சென்னை ஆயுதப்படை போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வந்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, சிறையின் நுழைவு வாயிலில் சங்கரிடம் சிறை வார்டன்கள் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அவர் தனது உடைக்குள் 200 கிராம் கஞ்சா, 2 சிம்கார்டுகள் ஆகியவற்றை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. உடனே அவற்றை சிறை வார்டன்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் சிறை வார்டன் ரமேஷ் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் கைதியிடம் கஞ்சா மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்தது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×