search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறிமுதல்"

    பரமத்தி வேலூர் தாலுகாவில் கிராவல் மண் கடத்திய மினி லாரி பறிமுதல் செய்தனர்.
    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தியிலிருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே பரமத்தி கிராம நிர்வாக அலுவலர் ஆர்த்தி மற்றும் உதவியாளர் சுதாகர் ஆகியோர் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது உரிய ஆவணங்கள் இன்றி கிராவல் மண் எடுத்து வந்து தெரியவந்தது. அதிகாரிகளை பார்த்ததும் மினி லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மினி லாரியையும், அதிலிருந்த கிராவல் மண்ணையும் பறிமுதல் செய்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

    இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மினி லாரி டிரைவர் திருப்பூர் மாவட்டம், சோமனூர் ரோடு, வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த மனோகரன் (55) என்பவரை தேடி வருகின்றனர்.
    கடத்துவதற்கு வைத்திருந்த 900 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கண்ணகி நகர் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி மற்றும் ஆர்.ஐ. பிரவீனுக்கு தகவல் கிடைத்தது. 

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு ரேசன் அரிசி மூட்டை ஒன்றுக்கு 50 கிலோ வீதம் 18 மூட்டைகள்  தயார் நிலையில் கட்டி கடத்துவதற்காக  வைக்கப்பட்டு இருந்தன. 

    அவைகளை பறிமுதல் செய்து திருச்செங்கோட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார்  செய்யப்பட்டது.

    புகரின் பேரில், ரேசன் அரிசி கடத்த முயன்ற நபர்கள் யார்? என்பதை குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
    சேலம் ரெயிலில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை கேரள மாநிலம் நோக்கி சென்ற தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. 

    அந்த ரெயிலில் சேலம் ெரயில்வே பாதுகாப்பு படையினர் கஞ்சா கடத்தலை தடுக்க சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் பெரிய 
    பை ஒன்று சந்தேகத்திற்கிடமாக இருந்தது. 

    அந்த பையை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. இதைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த பையை சோதனை செய்த போது, அதில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 

    அதனை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்ற விவரம் தெரியவில்லை.  சேலம் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ெரயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரேஷன் அரிசி பறிமுதல் செய்தவரை கைது செய்தனர்.
    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் குறிப்பிட்ட இடத்தில் சோதனை மேற்கொண்ட போது தலைமைறைவான பகுதியில் பதுக்கி வைத்திருந்த 24 மூடை(1200 கிலோ) பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மதுரை காமராஜ புரம் பகுதியை சேர்ந்த வீரபத்திரன் (வயது33) என்பவர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து திருமங்கலம் நகர் போலீசார் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரியிடம் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வீரபத்திரனை கைது செய்தனர்.
    ×