search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confiscated"

    • புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசிய தகவல் வந்தது.
    • அந்த காரில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 102 மது மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்களுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு கெம்பளம் பஸ் நிறுத்தம் அருகே ஒரு சொகுசு கார் நின்றிருந்தது. அந்த காரில் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ராஜேஷ் கண்ணாவுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இந்த தகவலின்பேரில் டி.எஸ்.பி. தனராஜ் மேற்பார்வையில் சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையிலான வாழவந்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த 102 மது மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மதுபாட்டில்களுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் காரின் உரிமையாளர் பெரிய கோவிலூரை சேர்ந்த கார்த்திக், செல்வராஜ் என்பதும், இருவரும் தலைமறைவாகி உள்ளதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • இம்மானுவேல் சர்ச் அருகே போனில் பேசியபடி சென்றபோது, செல்போன் திருட்டு நடைபெற்றது.
    • மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை.

    கோவை ரேஸ்கோர்ஸ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் மகேந்திரன் (40). இவர் திருப்பூரில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் துணை வணிகவரி அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இவர் திருப்பூரில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்தார்.

    பின்னர் காந்திபுரத்தில் இருந்து டவுன் பஸ்சில் உப்பிலிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ரேஸ்கோர்சில் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அங்குள்ள இம்மானுவேல் சர்ச் அருகே போனில் பேசியபடி சென்றபோது, அவரின் அருகே மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 2 பேர் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடி விட்டது. இதுகுறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த சென்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

    • மோட்டாா் சைக்கிளை விற்பனை செய்ய முயன்றவரை போலீசார் பிடித்து விசாரித்தனா்.
    • ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 20 மோட்டாா் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா், வல்லம், ஒரத்தநாடு காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அவ்வப்போது மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு போனது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிள்களை திருடும் கும்பலை கைது செய்வதுடன் அந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவி ட்டார்.

    அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்க ப்பட்டது.

    இந்த தனிப்படையினா், பல்வேறு இடங்களிலுள்ள கண்கா ணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். மேலும், குறைந்த விலையில் மோட்டாா் சைக்கிள் விற்பனை செய்பவா்கள் குறித்து விசாரித்தனா்.

    அப்போது, ஒரு இளைஞரிடம் குறைந்த விலையில் மோட்டாா் சைக்கிள் விற்பனை செய்ய முயன்ற தஞ்சாவூா் பூக்காரத் தெருவைச் சோ்ந்த அரவிந்தை (வயது 30) பிடித்து விசாரித்தனா்.

    இதில், தஞ்சாவூா் பகுதியில் மோட்டாா் சைக்கிள்களை 4 போ் சோ்ந்து திருடுவதும், பதிவு எண்களை மாற்றி, குறைந்த விலையில் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

    இதையடுத்து, அரவிந்திடமிருந்து ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 20 மோட்டாா் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, அரவிந்தை கைது செய்து, மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.

    • 13 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
    • 2019ல் லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.

    திருப்பூர் :

    திருப்பூரில், விபத்து இழப்பீடு வழங்காததால், மூன்று அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். தாராபுரம், ஆலாம்பாளை யத்தை சேர்ந்தவர் செல்வவேல், 16. இவர் தனது, இரு நண்பர்களுடன் காரில் கடந்த, 2014ல் சென்ற போது, அரசு பஸ் மோதியதில், காரில் சென்ற, மூவர் இறந்தனர். இதில், செல்வவேல் இழப்புக்கு, இழப்பீடு கேட்டு அவரது சகோதரி செல்வபிருந்தா, திருப்பூர் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.

    கடந்த, 2019ல், 13 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதுவரை இழப்பீடு வழங்காததால், பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். நேற்று, பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதைபோல் திருவண்ணாமலையை சேர்ந்தவர் இனிகோ ஜான்துரை, 28. கடந்த, 2017ல், டூவீலரில் முதலிபாளையம் பிரிவு அருகே சென்ற போது, அரசு பஸ் மோதி இறந்தார். இதுதொடர்பான வழக்கில், 2019ல், லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்காத காரணத்தால், பஸ்சை நேற்று ஜப்தி செய்தனர்.

    கோவையை சேர்ந்தவர் ராஜன், 45. கடந்த, 2016ல், உக்கடம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்ற போது, அரசு பஸ் மோதியதில் இறந்தார். இதுதொடர்பான இழப்பீடு வழக்கில், 12 லட்சத்து, 75 ஆயிரத்துக்கு சமரசம் செய்யப்பட்டது. இப்பீடு வழங்காததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

    • 1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை தேடிவருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சர்வ சாதாரணமாக ரேசன் அரிசி கடத்தல் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் போதிய பலனில்லை. மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கான டன் ரேசன் அரிசி சட்ட விரோதமாக ஆலை களுக்கும், வெளிமா நிலங்களுக்கும் கடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் சிவகாசி பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்தபோது அதில் இருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் காரை சோதனையிட்டபோது அதில் 1500 கிலோ ரேசன் அரிசி கடத்துவது தெரியவந்தது. அதனையும், காரையும் பறிமுதல் செய்த போலீசார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை தேடிவருகின்றனர்.

    • சிறுவலூர் போலீசார் காளிசெட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.
    • 40.473 கிலோ எடை கொண்ட 485 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காளிசெட்டி பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சிறுவலூர் போலீசார் காளிசெட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் ஒரு வாலிபர் புகையிலை பொரு ட்களை பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காளிசெட்டி பாளையம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை வீட்டில் வைத்து கடைகளில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஹான்ஸ், போதை பாக்கு உள்பட 40.473 கிலோ எடை கொண்ட 485 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரேசனை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்தவர் சூரியநாராயணன் (வயது 42) . இந்து அறநிலையத்துறை அலுவலக தற்காலிக உதவியாளர்.
    • ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிறுத்தையின் தோலுடன் நின்று கொண்டிருந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்தவர் சூரியநாராயணன் (வயது 42) . இந்து அறநிலையத்துறை அலுவலக தற்காலிக உதவியாளர்.

    இவர் நேற்று ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிறுத்தையின் தோலுடன் நின்று கொண்டிருந்தார். அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    விசாரணையில் சிறுத்தை தோலை நண்பர் ஒருவரிடம் இருந்து வாங்கி இருந்ததாக அவர் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தை தோல் நோய்வாய்ப்பட்டு இறந்த சிறுத்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்டதா? அல்லது வேட்டையாடி எடுக்கப்பட்டு உள்ளதா?, எந்த பகுதியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டு உள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தையின் தோலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த காயமோ? அல்லது வெட்டுக்காயங்களோ இல்லை.

    எனவே அது உடல்நலக்குறைவால் இறந்த சிறுத்தையின் தோலாக இருக்கலாம் எனவும், இறந்த சிறுத்தை முண்டந்துறை வனப்பகுதியில் வசித்த சிறுத்தையாக இருக்கலாம் எனவும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் 5 ரோட்டில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்த போலீஸ்காரரிடம் செல்போன் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    • மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி நாச்சினாம்பட்டியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 35). இவர் சென்னை ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

    சொந்த ஊருக்கு வந்த வீராசாமி நேற்று முன்தினம் வேலைக்கு புறப்பட்டார். இரவு 11 மணி அளவில் சேலம் 5 ரோட்டில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர், அவரிடம் இருந்த ரூ.24 மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வீராசாமி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனை பறித்து சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

    • ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்
    • புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் ரெயில்வே போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார்நேற்று மதியம் 3.30 மணிக்குதிருப்பூர் ரெயில் நிலையத்தில்சோதனை மேற்கொண்டனர்.அப்போது புதுடெல்லியில்இருந்து திருவனந்தபுரம்நோக்கி சென்ற வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்வந்தது.

    ரெயிலின் பொதுப்பெட்டியில் கழிப்பிடம் அருகேகேட்பாரற்று ஒரு மூட்டைகிடந்தது. அதை கைப்பற்றிஉள்ளே பார்த்தபோது 6 கிலோபுகையிலை பொருட்கள் இருந்தது. அதை யார் கொண்டுவந்தார்கள் என்று தெரியவில்லை. போலீசார் அதை கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறார்கள்.

    • மினி லாரியில் கடத்தப்பட்ட 3 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதையடுத்து லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் சுற்று வட்டார பகுதியில் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பட்டை தீட்டி அதிக விலைக்கு விற்பதாக அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் வந்தன.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் வட்டாட்சியர் சிவராமன், வருவாய் துறையினர் ரேசன் அரிசி பதுக்கி வைத்து இருப்பவர்களை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அதன்படி நேற்று அதிகாரிகள் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி- செங்கப்படை தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் சிவராமன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள் மறித்தனர். இதையடுத்து லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    தொடர்ந்து லாரியை சோதனை செய்தபோது அதில், 60 கிலோ எடையுள்ள 59 முடைகள் ரேசன் அரிசி கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த எடை 3 டன் ஆகும். வட்டாட்சியர் சிவராமன் ரேசன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தார். சோதனையின் போது வட்ட வழங்கல் அலுவலர் வீரமணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் உள்பட பலர் இருந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • அதன்படி காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தற்போது கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் முழுமையாக இயங்கி வருகின்றது. இந்நிலையில் சமீப காலமாக கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதையடுத்து பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காய்ச்சல் இருமல், சளி அறிகுறி இருப்ப வர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

    அதன்படி காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதில் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படாமல் அவர்கள் அருகில் இருக்கும் மருத்து வமனை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

    மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தாக்கம் ஏற்பட்டு வருவதையடுத்து தடுப்பு நடவடி க்கையாக காலையில் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதில் காய்ச்சல், சளி அறிகுறி உள்ளவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனை ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதேபோல் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ள மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என ஏற்கனவே பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளோம். எனவே இதைப்பற்றி அச்சப்பட தேவையில்லை.

    இதேபோல் நமது மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் செல்போன்களை பயன்படுத்துவதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. எனினும் சோதனை செய்யும் போது செல்போன் கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடத்துவதற்கு வைத்திருந்த 900 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கண்ணகி நகர் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி மற்றும் ஆர்.ஐ. பிரவீனுக்கு தகவல் கிடைத்தது. 

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு ரேசன் அரிசி மூட்டை ஒன்றுக்கு 50 கிலோ வீதம் 18 மூட்டைகள்  தயார் நிலையில் கட்டி கடத்துவதற்காக  வைக்கப்பட்டு இருந்தன. 

    அவைகளை பறிமுதல் செய்து திருச்செங்கோட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார்  செய்யப்பட்டது.

    புகரின் பேரில், ரேசன் அரிசி கடத்த முயன்ற நபர்கள் யார்? என்பதை குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
    ×