search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு போன 20 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல்; ஒருவர் கைது
    X

    திருட்டு போன 20 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல்; ஒருவர் கைது

    • மோட்டாா் சைக்கிளை விற்பனை செய்ய முயன்றவரை போலீசார் பிடித்து விசாரித்தனா்.
    • ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 20 மோட்டாா் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா், வல்லம், ஒரத்தநாடு காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அவ்வப்போது மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு போனது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிள்களை திருடும் கும்பலை கைது செய்வதுடன் அந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவி ட்டார்.

    அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்க ப்பட்டது.

    இந்த தனிப்படையினா், பல்வேறு இடங்களிலுள்ள கண்கா ணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். மேலும், குறைந்த விலையில் மோட்டாா் சைக்கிள் விற்பனை செய்பவா்கள் குறித்து விசாரித்தனா்.

    அப்போது, ஒரு இளைஞரிடம் குறைந்த விலையில் மோட்டாா் சைக்கிள் விற்பனை செய்ய முயன்ற தஞ்சாவூா் பூக்காரத் தெருவைச் சோ்ந்த அரவிந்தை (வயது 30) பிடித்து விசாரித்தனா்.

    இதில், தஞ்சாவூா் பகுதியில் மோட்டாா் சைக்கிள்களை 4 போ் சோ்ந்து திருடுவதும், பதிவு எண்களை மாற்றி, குறைந்த விலையில் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

    இதையடுத்து, அரவிந்திடமிருந்து ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 20 மோட்டாா் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, அரவிந்தை கைது செய்து, மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.

    Next Story
    ×