என் மலர்
உள்ளூர் செய்திகள்

1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
- 1500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை தேடிவருகின்றனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சர்வ சாதாரணமாக ரேசன் அரிசி கடத்தல் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் போதிய பலனில்லை. மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கான டன் ரேசன் அரிசி சட்ட விரோதமாக ஆலை களுக்கும், வெளிமா நிலங்களுக்கும் கடத்தப்படுகிறது.
இந்த நிலையில் சிவகாசி பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்தபோது அதில் இருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் காரை சோதனையிட்டபோது அதில் 1500 கிலோ ரேசன் அரிசி கடத்துவது தெரியவந்தது. அதனையும், காரையும் பறிமுதல் செய்த போலீசார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை தேடிவருகின்றனர்.
Next Story






