search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "7 arrested"

  • சக்திவேல் பரமசிவம் என்பவரிடம் ஜேசிபி எந்திர டிைரவராக வேலை செய்து வந்தார்.
  • ஜே.சி.பி எந்திர டிரைவர் சக்திவேலை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது

  கள்ளக்குறிச்சி: 

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கூகையூர் போயர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி வள்ளியம்மாள்(வயது 58), கூலிவேலை செய்து வருகின்றனர். இவருக்கு இந்திரா என்ற மகளும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். மகளை நைனார் பாளையத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். சக்திவேலுக்கு சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

  சக்திவேலின் மனைவி மற்றும் பிள்ளைகள் சென்னையில் அவரது பெற்றோருடன் தங்கி வருகின்றனர். சக்திவேல் கடந்த 4 ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா புலிக்கரம்பூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவம்(43) என்பவரிடம் ஜேசிபி எந்திர டிைரவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சக்திவேலுக்கு சரிவர சம்பளம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் தற்போது சக்திவேல் டிரைவர் வேலைக்கு செல்லவில்லை. மேலும் சக்திவேல், பரமசிவம் ஆகியோர்களுக்குள் கொடுக்கல், வாங்கல் பிரசினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது .

  இந்நிலையில் கடந்த 4-ம் தேதி காலை 10.30 மணியளவில் சக்திவேல் தன் வீட்டில் இருந்தபோது, 2 மோட்டார்் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் லஷ்மணபுரம் சாலையில் ஜேசிபி எந்திரம் கவிழ்ந்து விட்டது. அதனால் ஜே.சி.பி எந்திர டிரைவர் சக்திவேலை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதை நம்பிய சக்திவேல் அவர்களுடன் மோட்டார்் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின்னர் சில மணி நேரம் கழித்து சக்திவேலின் தாய்க்கு வந்த போனில் சக்திவேலை கடத்தி விட்டதாகவும், ரூ. 5 லட்சம் பணம் தந்துவிட்டு சக்திவேலை மீட்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் சக்திவேலை கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

  இதுகுறித்து வள்ளியம்மாள் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட சக்திவேலை தேடி வந்தனர். இந்நிலையில் செல்போன் டவர் மூலம் திட்டக்குடி அருகே புலிக்க ரும்பூர் பரமசிவம் என்பவரது மாடி யில் இருந்த சக்திவேலை மீட்டனர். மேலும் இந்த வழக்கில் ஜேசிபி இயந்திர உரிமையாளர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த பரமசிவம்(43), அவரது டிரை வர் சுப்ரமணி மகன் ரமேஷ்(36), ஜெயகுமார் மகன் ஜெகதீஷ்(23), ராஜா மகன் ரவி(19), முத்துகிருஷ்ணன் மகன் பெரியசாமி(23), பழனிவேல் மகன் வெற்றிசெல்வன்(19), சவுந்தர்ராஜன் மகன் சந்திரன்(20) மற்றும் பென்னாடம் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் தனராஜ் (42) உள்ளிட்ட 8பேரை கீழ்குப்பம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • மதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • ரூ. 27 ஆயிரத்து 580 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

  மதுரை

  மதுரையை அடுத்துள்ள பசுமலை தியாகராஜர் காலனி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  அதன் அடிப்படையில் சம்பவத்தன்று போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

  அப்போது அங்குள்ள ஒரு கட்டிடத்தில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் கோவிந்தராஜ் (வயது63), கதிரேசன் (54), பைபாஸ் ரோடு நேரு குறுக்கு தெரு சுரேஷ்பாபு (38), ராஜபாளையம் போத்திராஜ் (57), பசுமலை ராஜா (49), ஈஸ்வரன் (57), திருநகர் கணேசன் (54) என்று தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ. 27 ஆயிரத்து 580 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

  அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணி அந்தமான் நிகோபார் தீவில் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #AmericanTourist #NorthSentinelIslan
  அந்தமான்:

  அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் சாவ் (வயது 27) என்பவர் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சுற்றுலா வந்திருந்தார். கடந்த சனிக்கிழமையன்று உள்ளூர் மீனவர் ஒருவருடன் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற அவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவரை அங்குள்ள பழங்குடியின மக்கள் கொன்றிருக்கலாம் என தெரிகிறது.  வடக்கு சென்டினல் தீவில் பாதுகாக்கப்பட்ட சென்டினலிஸ் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் வெளியுலகம் அறியாதவர்கள் என்பதால், அன்னியர்கள் யாராவது வந்தால் அவர்களை தாக்குகிறார்கள். குறிப்பாக வில் அம்புகள் மூலம் நெருப்பை பற்ற வைத்து வெளிநபர்களை தாக்கி கொன்றுவிடுவார்கள். அதனால் அங்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடையை மீறி உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் ஜான் ஆலன் அங்கு சென்றபோது தாக்கப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜான் ஆலன் அந்த தீவுக்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்த மீனவர்கள் 7 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. #AmericanTourist #NorthSentinelIsland
  ×