பணம் வைத்து சூதாட்டம்; 7 பேர் கைது

மதுரை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ. 27 ஆயிரத்து 580 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பணம் வைத்து சூதாட்டம்; 7 பேர் கைது
Published on

மதுரை

மதுரையை அடுத்துள்ள பசுமலை தியாகராஜர் காலனி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சம்பவத்தன்று போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு கட்டிடத்தில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் கோவிந்தராஜ் (வயது63), கதிரேசன் (54), பைபாஸ் ரோடு நேரு குறுக்கு தெரு சுரேஷ்பாபு (38), ராஜபாளையம் போத்திராஜ் (57), பசுமலை ராஜா (49), ஈஸ்வரன் (57), திருநகர் கணேசன் (54) என்று தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ. 27 ஆயிரத்து 580 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com