என் மலர்
நீங்கள் தேடியது "Rasipuram"
- 3 மகள்களை கொன்று விட்டு தந்தை கோவிந்தராஜ் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
- வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மகள்களை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா திம்மநாயக்கன்பட்டியை அடுத்த சிங்கிலியன் கோம்பை அருகே உள்ளது வேம்பாகவுண்டன்புதூர். இந்த பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40), ரிக் வண்டி தொழிலாளி. இவரது மனைவி பாரதி (25). இவர்களுக்கு பிரித்திகாஸ்ரீ (8), ரித்திகா ஸ்ரீ (6), தேவ ஸ்ரீ (5) ஆகிய 3 பெண் குழந்தைகளும், அனீஸ்வரன் (1½) என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
கோவிந்தராஜ் கடந்த 8 மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரிக் லாரி வாங்குவதற்காக ரூ.14 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது. ஆனால் அந்த பணத்தை வைத்து அவர் வீடு கட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தொழில் செய்ய முடியாமல் கோவிந்தராஜ் இருந்து வந்தார். மேலும் கடனை அடைக்க கேரள மாநிலத்திற்கு கூலி வேலைக்கு சென்று வந்தார்.
அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து தனியார் நிதி நிறுவனத்திற்கு 7 மாதங்களாக தலா ரூ.27 ஆயிரம் வீதம் மாதத் தவணையை செலுத்தி வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து கோவிந்தராஜ் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.
இங்கு வேலை இல்லாமல் கோவிந்தராஜ் இருந்து வந்தார். இதனால் மாத தவணை செலுத்துவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோர் சாப்பிட்டு முடித்தவுடன் தூங்க சென்றனர். அப்போது படுக்கை அறையில் கோவிந்தராஜின் மனைவி பாரதி தனது 1½ வயது ஆண் குழந்தை அனீஸ்வரனுடன் தூங்க சென்றார். வீட்டின் ஹாலில் கோவிந்தராஜ் மற்றும் 3 மகள்களும் தூங்கினர். இன்று அதிகாலை 3 மணியளவில் எழுந்த கோவிந்தராஜ், மனைவி மற்றும் மகன் தூங்கி கொண்டிருந்த படுக்கை அறையின் கதவை வெளிப்புறமாக தாழ் போட்டார்.
பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ஹாலில் தூங்கி கொண்டிருந்த மகள்கள் பிரித்திகா ஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ, தேவ ஸ்ரீ ஆகிய 3 பேரையும் கொடூரமாக வெட்டினார். தூக்கத்தில் இருந்த குழந்தைகள் திடீரென எழுந்து கதறி துடித்தனர். குழந்தைகள் அழும் சத்தம் கேட்டதும் படுக்கை அறையில் இருந்த பாரதி அலறியடித்துக் கொண்டு வெளியே வர முயன்றார். அப்போது வெளிப்புறமாக கதவு தாழிடப்பட்டு இருந்ததால் அவரால் வர முடியவில்லை.
இந்த நேரத்தில் கோவிந்தராஜ் துடிக்க துடிக்க 3 குழந்தைகளையும் அரிவாளால் வெட்டினார். இதில் தலை துண்டிக்கப்பட்டு 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். பின்னர் கோவிந்தராஜ் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.
பாரதியின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இவர்களது வீட்டிற்கு ஓடி வந்தனர். அப்போது குழந்தைகள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததையும், விஷம் குடித்த நிலையில் கோவிந்தராஜ் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டின் படுக்கை அறையில் இருந்த பாரதி மற்றும் அவரது 1½ வயது மகனையும் அவர்கள் மீட்டனர். வீட்டின் படுக்கை அறையில் பாரதி தனது 1½ வயது மகனுடன் படுத்து தூங்கியதால் அவர்கள் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த கொடூர சம்பவம் குறித்து உடனடியாக மங்களபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் மங்களபுரம் போலீசார் விரைந்து வந்தனர்.
மேலும் கொலை நடந்த வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் கொலை செய்யப்பட்ட 3 பெண் குழந்தைகள் மற்றும் தற்கொலை செய்து கொண்ட கோவிந்தராஜ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சனையில் கோவிந்தராஜ் 3 மகள்களையும் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சோளமுத்து மற்றும் பெரியக்காள் ஆகிய 2 பேரை தாக்கியுள்ளனர்.
- இரண்டு சமூகத்திற்கு இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க அமைதி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது கவுண்டம்பாளையம். இந்த ஊரைச் சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் கடந்த வியாழக்கிழமை இன்னொரு சமூகத்தினர் வசிக்கும் சாலையின் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை பார்த்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வேகத்தடை உள்ளது மெதுவாக செல்லுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. அப்போது இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது இரு சமூகத்தினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் சோளமுத்து மற்றும் பெரியக்காள் ஆகிய 2 பேரை தாக்கியுள்ளனர். மேலும் சோளமுத்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயம் அடைந்த சோளமுத்து மற்றும் பெரியக்காள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதையடுத்து நடவடிக்கை எடுக்க கோரி சோளமுத்து மற்றும் பெரியக்காள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணைபோலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் காயம் அடைந்த பெரியக்காள் ராசிபுரம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராசிபுரம் போலீசார் சஞ்சய் (23) மணிகண்டன்(25) உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர இரண்டு சமூகத்திற்கு இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க அமைதி பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது.
- உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் விறுவிறுப்பான வாக்குபதிவு நடைபெற்றது.
- நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி ஊராட்சியில் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் ஒன்றியம் பிள்ளா–நல்லூர் பேரூராட்சியில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று காலையில் தொடங்கியது. தி.மு.க. சார்பில் உஷாராணியும், அ.தி.மு.க சார்பில் ஜெயந்தியும், அ.ம.மு.க. சார்பில் ரத்தினம்மாளும் போட்டியிடுகின்றனர்.
இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆண் பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அதேபோல் நாமகிரிப்பேட்டை ஒன்றி–யம் ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் 4 பேர் போட்டியிடுகின்றனர். இன்று காலையில் வாக்கா–ளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
அதேபோல் மத்துரூட்டு ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலும் தொடங்கியது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. ராசிபுரம் ஒன்றியம் பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று காலையில் தொடங்கியது. தி.மு.க. சார்பில் உஷாராணியும், அ.தி.மு.க சார்பில் ஜெயந்தியும், அ.ம.மு.க. சார்பில் ரத்தினம்மாளும் போட்டியிடுகின்றனர்.
இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆண் பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அதேபோல் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் 4 பேர் போட்டியிடுகின்றனர். இன்று காலையில் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். அதேபோல் மத்துரூட்டு ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலும் தொடங்கியது.
- ராசிபுரத்தில் 3508 பருத்தி மூட்டைகள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
- ஏலத்தில் ஆர்சிஎச் ரகப் பருத்தி 2746 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 751 மூட்டைகளும், கொட்டு பருத்தி 11 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டன.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 3508 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் ஆர்சிஎச் ரகப் பருத்தி 2746 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 751 மூட்டைகளும், கொட்டு பருத்தி 11 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் ஆர்சிஏச் ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7868-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9959-க்கும், சுரபி ரகப் பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8600 -க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10109-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5100-க்கும், அதிகப்பட்சமாக ரூ.5900-க்கும் ஏலம் விடப்பட்டது.

இந்நிலையில் வங்கி அலுவலக உதவியாளர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். #RasipuramNurse #ChildKidnap

ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் ஆலாங்காட்டு புதூர் பாரதிநகரைச் சேர்ந்தவர் சின்னுசாமி. இவரது மகன் ரமேஷ் (35) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு ராசிபுரம் அருகேயுள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் டவுன் நரசிம்மன் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 62). நெசவு தொழிலாளி. இவர் கடந்த மாதம் 18-ந் தேதி நெல்லை மாவட்டம், தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக அவரது நண்பர் ஒருவருடன் சென்றிருந்தார். விழாவில் கலந்து கொண்டுவிட்டு ரெயிலில் புறப்பட்டு ராசிபுரத்திற்கு வந்தனர். அவர்கள் இருவரும் கடந்த மாதம் 20-ந் தேதி விடியற்காலையில் ராசிபுரம் ரெயில் நிலையத்தில் இறங்கி உள்ளனர்.
பிறகு அங்கிருந்து ராசிபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றனர். புதிய பஸ் நிலையத்தில் இறங்கிய சந்திரன் அவரது நண்பரை வீட்டுக்கு போகச் சொல்லியுள்ளார். ஆனால் சந்திரன் அவரது வீட்டுக்கு செல்லவில்லை.
தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்கு சென்றவர் ஊர் திரும்பிய நிலையில் வீட்டுக்கு திரும்பி வராததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் தெரியவில்லை. இது பற்றி சந்திரன் மனைவி சாந்தி (59) தனது கணவர் மாயமானது குறித்து ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். இது பற்றி ராசிபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராசிபுரம் நகராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் முன்னிலை வகித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு டிசம்பர் மாதம் மக்கள் செயல்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும். ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை நிரந்தரமாக போக்குவதற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவர அனுமதி வழங்கியுள்ளார். இந்த புதிய குடிநீர் திட்டத்திற்காக அரசராமணி கிராமப் பகுதியில் 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். இந்த புதிய குடிநீர் திட்டத்தில் ராசிபுரம் நகராட்சி, பட்டணம், சீராப்பள்ளி, நாமகிரிபேட்டை, புதுப்பட்டி ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும், புதுச்சத்திரம் யூனியன் பகுதிகளும் பயன்பெறும். இதைத் தவிர ராசிபுரம், வெண்ணந்தூர் ஒன்றியத்தில் விடுபட்ட கிராமங்களை இந்த திட்டத்தில் சேர்க்கப்படும்.
முதல் அமைச்சர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும்படியும், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.






