search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Daughters"

    பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோரின் மனித உரிமைகளை காக்க விரிவான கொள்கை வகுக்குமாறு ராணுவ அதிகாரிகளின் மகள்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளனர். #SupremeCourt #ArmyofficerDaughter #HumanRight
    புதுடெல்லி:

    ராணுவ அதிகாரிகளின் மகள்களான பிரீதி கேதார் கோகலே (வயது 19), கஜல் மிஷ்ரா (20) ஆகிய இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்து உள்ளனர்.

    அந்த வழக்கில், பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோரின் மனித உரிமைகளை காக்க விரிவான கொள்கை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உள்ளனர்.



    குறிப்பாக பணியின்போது, தனிநபர்களாலும், கட்டுக்கடங்காத கும்பல்களாலும் தாக்கப்படுகிற பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று இந்த வழக்கின் மூலம் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது வன்முறை கும்பலால் நடத்தப்பட்ட கல்வீச்சுகளை வழக்கில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

    இந்த வழக்கில் எதிர் தரப்பினராக மத்திய அரசு, ராணுவ அமைச்சகம், காஷ்மீர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
    திண்டுக்கல் அருகே வீட்டை அபகரித்து கொண்டதால் 3 மகள்களுடன் பெண் கலெக்டர் ஆபீசில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் நல்லம்மாள். (வயது 50). இவர் இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அதிர்ச்சி அடைந்த டி.எஸ்.பி. பிரபாகரன் மற்றும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது நல்லம்மாள் போலீசாரிடம் கூறியதாவது:-

    நான் வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியில் வசித்து வருகிறேன். எனது கணவர் வேல்முருகன் 4 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். சிறுகுழந்தைகளான அவர்களை நான் கூலி வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறேன்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் வசித்த வீட்டை அதே பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவர் அபகரித்து கொண்டு வீட்டை விட்டு துரத்தினார். இதனால் நான் எனது குழந்தைகளுடன் நாடக மேடையில் தங்கி பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறேன்.

    இதுகுறித்து கடந்த டிசம்பர் மாதம் கலெக்டர் ஆபீசில் மனு அளித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் நான் எனது குழந்தைகளுடன் கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க வந்தேன்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

    இதனையடுத்து போலீசார் அவரை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×