என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Army Officers"

    • பலுசிஸ்தானில் 12 இடங்களில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
    • குற்றக் கும்பல்கள் பலூச் விடுதலை ராணுவம் அமைப்பின் பெயரில் செயல்படுகின்றன.

    பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் தனி நாடு கோரி அரசுக்கு எதிராக பலூச் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையே பலுசிஸ்தான் மாகாணம் முழுவதும் ராணுவம், போலீஸ் ஆகியோரை குறிவைத்து ஒரே நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பெண்கள் அடங்கிய தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதல்களில் 280 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அமைப்பு தெரிவித்தது. மேலும் நுஷ்கி மாவட்டத்தில் முக்கிய நிலைகளைக் கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர். ஆனால் பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடித்ததாகவும், 177 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

    இந்தநிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிப் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது கூறியதாவது:-

    பலுசிஸ்தானில் 12 இடங்களில் தாக்குதல் நடத்தி உள்ளனர். மாகாணம் முழுவதும் நடத்தப்பட்ட விரிவான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 177 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    புவியியல் ரீதியாக பாகிஸ்தானின் 40 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை பலுசிஸ்தான் கொண்டு உள்ளது. அதை கட்டுப்படுத்துவது என்பது மக்கள் தொகை நிறைந்த நகரத்தை கட்டுப்படுத்துவதை விட மிகவும் கடினமானது.

    அதற்குப் பெருமளவிலான படைகளை நிலை நிறுத்த வேண்டும். நமது துருப்புக்கள் அங்கு நிலை நிறுத்தப்பட்டு, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இவ்வளவு பெரிய பகுதியை பாதுகாத்து ரோந்து செய்வதால் ராணுவ வீரர்கள் உடல் ரீதியாக பலவீனமாக உள்ளனர்.

    பெண்கள்,குழந்தைகள் உள்பட பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதிகளுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது. குற்றவாளிகளுக்கும் பிரிவினைவாதக் குழுக்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது. குற்றக் கும்பல்கள் பலூச் விடுதலை ராணுவம் அமைப்பின் பெயரில் செயல்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போஸ்ட் மீது மோதினர்.
    • நடவடிக்கையின் போது, ஆறு பயங்கரவாதிகளையும் சுட்டு கொன்றனர்.

    ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இன்று 6 பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தியதில் இரண்டு அதிகாரிகள் உட்பட குறைந்தது ஏழு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு கேப்டன் உள்பட ஐந்து வீரர்களுடன் கொல்லப்பட்டனர். மிர் அலி பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தாக்குதல் நடத்திய 6 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இதுகுறித்து ஐஎஸ்பிஆர் அறிக்கையின்படி," பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை போஸ்ட் மீது மோதியதாகவும், அதைத் தொடர்ந்து பல தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடந்தன.

    அதைத் தொடர்ந்து நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையின்போது ஆறு பயங்கரவாதிகளையும் சுட்டு கொல்லப்பட்டனர்".

    பயங்கரவாத தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் சையத் காஷிப் அலி மற்றும் கேப்டன் முகமது அகமது பதார் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 2023-ம் ஆண்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது.
    • புகைப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    ஊட்டி:

    இந்திய ராணுவ முப்படைத்தளபதியாக இருந்த பிபின்ராவத் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.

    அப்போது குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் மோசமான வானிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பலியானார்கள்.

    இந்த நிலையில் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான பகுதியில் வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் கடந்த 2023-ம்ஆண்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. இதில் பிபின்ராவத் உள்ளிட்ட உயிரிழந்த 14 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    மேலும் அந்த நினைவுத்தூணில் ஆன்மா அழியாதது, அதனை எந்த ஆயுதத்தாலும் துளைக்க முடியாது, எந்த நெருப்பாலும் அழிக்க முடியாது. தண்ணீராலும் ஈரப்படுத்த முடியாது, காற்றாலும் உலரப்படுத்த முடியாது என்ற பகவத்கீதையின் வாசகங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பிபின்ராவத் உள்ளிட்டோரின் 3-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராணுவத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அப்போது குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமான்டண்ட் வீரேந்திரவாட்ஸ் பிபின்ராவத் உள்ளிட்டோரின் புகைப்படங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களும் திரண்டு வந்து ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்.

    பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோரின் மனித உரிமைகளை காக்க விரிவான கொள்கை வகுக்குமாறு ராணுவ அதிகாரிகளின் மகள்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளனர். #SupremeCourt #ArmyofficerDaughter #HumanRight
    புதுடெல்லி:

    ராணுவ அதிகாரிகளின் மகள்களான பிரீதி கேதார் கோகலே (வயது 19), கஜல் மிஷ்ரா (20) ஆகிய இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்து உள்ளனர்.

    அந்த வழக்கில், பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோரின் மனித உரிமைகளை காக்க விரிவான கொள்கை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உள்ளனர்.



    குறிப்பாக பணியின்போது, தனிநபர்களாலும், கட்டுக்கடங்காத கும்பல்களாலும் தாக்கப்படுகிற பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று இந்த வழக்கின் மூலம் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது வன்முறை கும்பலால் நடத்தப்பட்ட கல்வீச்சுகளை வழக்கில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

    இந்த வழக்கில் எதிர் தரப்பினராக மத்திய அரசு, ராணுவ அமைச்சகம், காஷ்மீர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
    ×