search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinking Water Project"

    • லோயர் கேம்ப் முல்லைப்பெரியாறு பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • தடுப்பணை பணிகள் ஆகியவற்றை மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் லோயர் கேம்ப் முல்லைப்பெரியாறு பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.1653.21 கோடி மதிப்பில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தி பணிகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது முல்லை ப்பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பம்பிங் ஹவுஸ், பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகள் ஆகியவற்றை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் பிரவீன்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் தேனி - கூடலூர் பிரதான சாலையில் கே.புதுப்பட்டி, உத்தம பாளையம், சின்னமனூர் சாலையோரங்களில் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு விரைந்து முடிக்க பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டனர்.

    பின்னர் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் ஆலோ சனைக் கூட்டம் நடை பெற்றது. இதில் கண்கா ணிப்பு பொறியாளர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 118.10 அடியாக உள்ளது. 306 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 46.90 அடியாக உள்ளது. 41 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 69.04அடியாக உள்ளது. 10 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 8.8, தேக்கடி 7.6, கூடலூர் 2.2, சண்முகாநதி அணை 10.6, உத்தமபாளை யம் 2.4, வைகை அணை 5.8, மஞ்சளாறு 1, சோத்துப்பாறை 4, வீரபாண்டி 4, அரண்ம னைப்புதூர் 20 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • தாசம்பாளையம் பிரிவு அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ரோட்டில் ஆறு போல ஓடுகிறது.

    அவினாசி :

    அவினாசி அருகே அன்னூர், கருவலூர், அவினாசி, திருமுருகன் பூண்டி, அனுப்பர்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 4 வது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவினாசி, மேட்டுப்பாளையம் ரோட்டில் தாசம்பாளையம் பிரிவு அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ரோட்டில் ஆறு போல ஓடுகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    குடிநீருக்காக மக்கள் அவதி பட்டு வரும் நிலையில் இப்படி குடிநீர் வீணாவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனே வடிகால் வாரியத்தனர் உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • கூட்டுக்குடிநீர் திட்டங்களால் பாப்பாக்குடி, ஆலங்குளம், முக்கூடல் ஒன்றியங்களைச் சேர்ந்த 49 ஊரக கிராமங்கள் குடிநீர் பெறுவதில் தன் நிறைவு பெறுகின்றன.
    • இதில் சுமார் 5,10000 பேர் பயன் அடைவார்கள்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தில் தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ. 543.20 கோடி மதிப்பீட்டில் சங்கரன்கோவில், புளியங்குடி, நகராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி, சிவகாசி மாநகராட்சி, திருத்தங்கள் நகராட்சி, மற்றும் ரூ. 50.5 கோடி மதிப்பீட்டில் நெல்லை மாவட்டம் பாப்பாகுடி ஒன்றியத்தைச் சேர்ந்த 17 குக்கிராமங்கள் மற்றும் முக்கூடல் பேரூராட்சியில் ஒரு குக்கிராமம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்தை சேர்ந்த 31 குக்கிராமங்களுக்கான தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாக கொண்ட கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் மற்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் தலைமை தாங்கினார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ்மீனா முன்னிலை வகித்தார். மதுரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ரகுபதி வரவேற்றார். சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் திட்ட விளக்க உரை ஆற்றினர்.

    தொடர்ந்து எம்.பி.க்கள் தென்காசி தனுஷ்குமார், விருதுநகர் மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன்திருமலைகுமார், ராஜ பாளையம் தங்கபாண்டியன், சிவகாசி அசோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், நிதி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    கூட்டக்குடிநீர் திட்டங்களால் பாப்பாக்குடி, ஆலங்குளம், முக்கூடல் ஒன்றியங்களைச் சேர்ந்த 49 ஊரக கிராமங்கள் குடிநீர் பெறுவதில் தன் நிறைவு பெறுகின்றன.

    இதில் சுமார் 5,10000 பேர் பயன் அடைவார்கள். தமிழக முதல்-அமைச்சர் தென்காசி மாவட்டத்திற்கு சுமார் ரூ. 650 கோடி மதிப்பீட்டில் திட்டங்களை வாரி வழங்கி உள்ளார். இந்த 2 ஆண்டு காலத்திற்குள் ரூ. 1,828 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் சேமிப்பு திட்டம் ரூ. 4.3 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை துறைக்கு வாகனம், ரூ. 15 கோடியே 37 லட்சத்தில் எல்.இ.டி. விளக்குகள், ரூ. 3 கோடியே 38 லட்சத்தில் குடிநீர் பணிகளுக்கான ஆணைகள், ரூ. 4.62 கோடியில் நீர்நிலை மேம்பாட்டு திட்டங்கள், ரூ. 5.93 கோடியில் பூங்காக்கள் அமைக்கும் பணி, ரூ. 8.85 லட்சத்தில் மின்மயானம் அமைக்கும் பணி, ரூ. 9 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம், ரூ. 12.21 கோடியில் வணிக வளாகம், ரூ. 6.50 கோடியில் அரசு அலுவலக கட்டிடம், ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் அறிவு சாரா மையங்கள், ரூ. 44.88 லட்சத்தில் சாலை பணிகள், ரூ. 36 கோடியே 84 லட்சத்தில் இதர பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகின்றார்.

    தென்காசி தனி மாவட்டமாகி உள்ள நிலையில் தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ரூ. 650 கோடி நிதியை தென்காசி மாவட்டத்திற்கு ஒதுக்கி உள்ளார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தி.மு. ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், பரமகுரு, யூ.எஸ்.டி. சீனிவாசன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமாமகேஸ்வரிசரவணன், புளியங்குடி விஜயா, மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாவட்ட துணைச் செயலாளர்கள், புனிதா, ராஜதுரை, மனோகரன் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, பூசைபாண்டியன், கிறிஸ்டோபர், பெரியதுரை, சேர்மதுரை, ராமச்சந்திரன், நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கரன்கோவில் மாரிச்சாமி, வேல்சாமிபாண்டியன், தேவா என்ற தேவதாஸ், வெள்ளத்துரை, சாகுல் ஹமீது, மாரிச்சாமி, பராசக்தி, மகேஸ்வரி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் முனியசாமி பேரூர் செயலாளர்கள் ரூபி பாலசுப்ரமணியன், மாரிமுத்து, மாவட்ட மகளிர் அணி தலைவர் அன்புமணி, துணைத்தலைவர் அண்ணாமலை, தொ.மு.ச. மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், நகரத் துணைச் செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், சுப்புத்தாய், இளைஞர் அணி சரவணன், நகர பொருளாளர் லாசர் என்ற சதாசிவம், மற்றும் கார்த்தி, வீராசாமி, வீரமணி, கணேஷ், ஜெயக்குமார், பிரகாஷ், ஜான், சிவா, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தூர்பாண்டி நன்றி கூறினார்.

    • வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அடிக்கல் நாட்டப்படுகிறது.
    • விழா நடைெபறும் இடத்தை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ெஜகதீஷ் ஆய்வு செய்தார்.

    திசையன்விளை:

    வள்ளியூர் ஒன்றியத்தில் 179 கிராமங்களுக்கும், ராதாபுரம் ஒன்றியத்தில் 181 கிராமங்களுக்கும், நாங்குநேரி ஒன்றியத்தில் 259 கிராமங்களுக்கும், களக்காடு ஒன்றியத்தில் 149 கிராமங்களுக்கும், சேரன்மாதேவி ஒன்றியத்தில் 22 கிராமங்களுக்கும், பாளையங்கோட்டை ஒன்றியத்தில் 41 கிராமங்களுக்கும் என 831 கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.605 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசிடம் அனுமதி பெறப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அடிக்கல் நாட்டப்படுகிறது.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழா நடைெபறும் இடத்தை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ெஜகதீஷ் ஆய்வு செய்தார்.

    இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், படையப்பா முருகன், ஊராட்சி மன்ற தலை வர் பேபிமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் புளோ ரன்ஸ் விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முல்லை பெரியாற்றிலிருந்து மதுரை மாநகர் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு குருவனூற்று பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
    • சலவைத்தொழில் செய்து வரும் மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் முல்லை பெரியாற்றிலிருந்து மதுரை மாநகர் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு குருவனூற்று பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதே இடத்தில் சலவைத்தொழில் செய்து வரும் மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தனியாக பாதை, படித்துறை, தங்கும்அறை மற்றும் மின்இணைப்பு வழங்கு வதாக உறுதியளித்தனர். ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் மதுரை மாநகராட்சி பொறியாளர் அரசு தலைமையில் செயற்பொறியாளர் பாக்கியலெட்சுமி உள்பட 30 பேர் கொண்ட பொறியாளர் குழு ஆய்வுக்கு வந்தது.

    அப்போது கூடலூர் சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகி குமரன் தலைமையில் பொறியாளர் குழுவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு உறுதியளித்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த பொறியாளர் குழுவினர் மேயர், ஆணையாளரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின்பு கலைந்து சென்றனர்.

    ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி பொறியாளர் குழுவை சலவை தொழிலாளர்கள் முற்று கையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வடக்கு பகுதிக்கு மேல்நிலைத் தொட்டிகளில் வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறது.
    • வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் சப்ளை ஆய்வு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு அம்ரூத் திட்டத்தில் 4 வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பணி ஏறத்தாழ நிறைவடைந்து தற்போது வடக்கு பகுதிக்கு மேல்நிலைத் தொட்டிகளில் வெள்ளோட்டம் நடைபெற்று வருகிறது.இதனை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். இரண்டாவது மண்டலம், 7வது வார்டு குருவாயூரப்பன் நகரில் ஆய்வு நடந்தது. மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    மேல்நிலை தொட்டியில் நீரேற்றும் முறை மற்றும் வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் சப்ளை ஆகியன ஆய்வு செய்யப்பட்டது. குழாய் உடைப்பு சரி செய்தல், சரியான அளவில் குழாய்கள் பதித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொ ள்ள அறிவுறுத்தப்பட்டது.

    • 1672 டன் குப்பைகளை அகற்ற குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் தனியார் நிறுவனத்திடம் ரூ.27.9 லட்சம் செலுத்தியது.
    • ஒரு மாதத்திற்குள் நிலம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருஷ்ணா நதிநீர் திட்டத்துக்காக சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை அய்யப்பன் தாங்கல் ஆயில் மில் சாலையில் காலி நிலம் உள்ளது. இது கிருஷ்ணாநதி நீர் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலம் ஆகும். இங்கு குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தேங்கும் குப்பைகள் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது. 450 தெருக்களில் இருந்து 12.5 டன் குப்பைகள் இந்த நிலத்தில் கொட்டப்பட்டன.

    இதனால் இந்த இடம் சுகாதார சீர்கேடாக மாறி யது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்ப வர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளித்தனர். அய்யப்பன் தாங்கல் மட்டுமின்றி குன்றத்தூர் பஞ்சாயத்து எல்லைக்கு உள்ளிட்ட கெருகம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளி லும் இதேபோன்று குப்பைகள் கொட்டும் பிரச்சினைகள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து விசாரணை நடத்தியது.

    இந்நிலையில் சுற்றுச் சூழலை மாசுப்படுத்தியதற்காக உள்ளாட்சி அமைப்பு ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்த சில மாதங்களில் ஆயில்மில் சாலையில் கொட்டப்பட்ட 1672 டன் குப்பைகளை அகற்ற குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் தனியார் நிறுவனத்திடம் ரூ.27.9 லட்சம் செலுத்தியது.

    இதையடுத்து இங்கு 90 சதவீத குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்திற்குள் நிலம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருஷ்ணா நதிநீர் திட்டத்துக்காக சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், "ஆயில்மில் சாலையில் குப்பைகள் அகற்றப்பட்டாலும், தற்போது அதற்கு இணையாக உள்ள பொன்னியம்மன் கோவில் தெருவில் குப்பைகளை கொட்ட தொடங்கியுள்ளனர். இந்த நிலமும் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் ஒரு பகுதியாகும்" என்றனர்.

    • தென்திருப்பேரை பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசு பாபு, துணை தலைவர் அமிர்த வள்ளி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலேயே தென்திருப்பேரை பேரூராட்சிக்கு முதன் முதலாக ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடி நீர் திட்டத்தை ஒதிக்கீடு செய்து கொடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசு பாபு, துணை தலைவர் அமிர்த வள்ளி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    தீர்மானம்

    கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலேயே தென்தி ருப்பேரை பேரூராட்சிக்கு முதன் முதலாக ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடி நீர் திட்டத்தை ஒதிக்கீடு செய்து கொடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என். நேரு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆனந்த், சண்முகசுந்தரம், கொடி, சீதாலட்சுமி, மாரியம்மாள், சுபா காசிலட்சுமி மற்றும் இளநிலை அலுவலர் சேக் அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் தென்திருப்பேரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.

    மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.

    • அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம்ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் பாலாற்று படுக்கை அமையப்பெற்றுள்ளது.

    இப்பகுதியில் இருந்து ஜல் ஜீவன் மிசன் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், சோளிங்கர், அரக்கோணம், காவேரிப்பாக்கம், ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 88-குக்கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை பணி நேற்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் அனிதா குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மோகனசுந்தரம் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரூபாய் 41.98-கோடியில் செயல்படுத்தப்பட உள்ள கூட்டு குடிநீர் திட்டப்பணிக்கு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த திட்டத்தின் வாயிலாக 88-குக்கிராமங்களுக்கு பாலாற்று பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    இதனால் கிராம மக்களின் குடிநீர் தேவைகள் நிரந்தரமாக பூர்த்தி செய்யப்படும்.மேலும் 2022-அடிப்படை ஆண்டின் மக்கட்தொகை 54711-நபர்களுக்கு தினசரி தேவையான 2.50- மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. இதேபோல் இடைக்கால ஆண்டின் மக்கட்தொகை யான 64562, நபர்களுக்கு 2.70- மில்லியன் லிட்டர் தண்ணீரும், உச்சக்கட்ட ஆண்டின் மக்கட்தொகை யான 72219-நபர்களுக்கு 2.98- மில்லியன் லிட்டர் தண்ணீரும் வழங்கும் அளவில் வடி வமைக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் படி பாலாற்று பகுதியில் புதிய 5-நீர் உறிஞ்சு கிணறுகளை நிரந்தரமாக அமைத்து, இதன் மூலம் பெறப்படும் குடிநீரை புதியதாக அமைக்கப்பட உள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் சேகரிக்கப்படும். பின்னர் இதில் இருந்து நெகிழ் இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் உந்தப்பட்டு மக்கள் பயனுக்கு கொண்டு வரப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அரசு அதிகாரிகள் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து வரைபடம் மூலம் விளக்கம் அளித்தனர். அப்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் நித்தியானந்தம், உதவி பொறியாளர் சுபவாணி, நெமிலி தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினர் ஞானமணி, மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் சி.மாணிக்கம், காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி உட்பட பலர் உடன் இருந்தனர்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் நகராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் முன்னிலை வகித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு டிசம்பர் மாதம் மக்கள் செயல்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும். ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை நிரந்தரமாக போக்குவதற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவர அனுமதி வழங்கியுள்ளார். இந்த புதிய குடிநீர் திட்டத்திற்காக அரசராமணி கிராமப் பகுதியில் 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். இந்த புதிய குடிநீர் திட்டத்தில் ராசிபுரம் நகராட்சி, பட்டணம், சீராப்பள்ளி, நாமகிரிபேட்டை, புதுப்பட்டி ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும், புதுச்சத்திரம் யூனியன் பகுதிகளும் பயன்பெறும். இதைத் தவிர ராசிபுரம், வெண்ணந்தூர் ஒன்றியத்தில் விடுபட்ட கிராமங்களை இந்த திட்டத்தில் சேர்க்கப்படும்.

    முதல் அமைச்சர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும்படியும், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×