search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tenthiruperai"

    • சுவாமி பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ தேவி, பூதேவி, நீளாதேவி, ஆதி நாயகி, குருகூர் நாயகி சமேதராக சயனக் குறட்டில் எழுந்தருளினார்.
    • இரவு 7.30 மணிக்கு பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்னவாகனத்திலும் மாடவீதி புறப்பாடு நடந்தது.

    தென்திருப்பேரை:

    நவதருப்பதிகளில் 9-வது திருப்பதி ஆழ்வார்திரு நகரிஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவில். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கருடசேவை நடந்தது. கைசிக ஏகாதசியை முன்னிட்டு காலையில் 6 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு திருமஞ்சனம், 8 மணிக்கு திருவாராதனம். பின்னர் சுவாமி பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ தேவி பூதேவி நீளாதேவி ஆதி நாயகி குருகூர் நாயகி சமேதராக சயனக் குறட்டில் எழுந்தருளினார். இடது மண்டபத்தில் நம்மாழ்வார் தொடர்ந்து கூரத்தாழ்வார். ராமானுஜர். தேசிகர், மணவாளமாமுனி மற்றும் ஆழ்வாராதிகள் எழுந்தருளினர்.

    மதுரகவி பரம்பரையின் அண்ணாவியார் பாலாஜி சுவாமியை அரிவாணம் கொண்டு அழைத்து வந்தனர். சுவாமி முன்னிலையில் அண்ணாவியார் பாலாஜி கைசிக ஏகாதசி புராணம் ஆன நம்பாடுவான் கதையை படித்தார். பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நம்மாழ்வார் தனது சன்னதி வந்தவுடன் அண்ணாவியார் சுவாமியை அவரது திருமாளிகைக்கு பிரம்ம ரதத்தில் கொண்டு விடுவர். அருளிப்பாடு சாதிப்பார். அப்போது கோவில் ஸ்ரீ பாதம் தாங்கிகள் அவரை அவரது திரு மாளிகையில் கொண்டு விட்டனர். மாலை 6 மணிக்கு சாயரட்சை. பின்னர் பொலிந்து நின்றபிரான். மற்றும் நம்மாழ்வார் வாகன குறட்டிற்கு எழுந்தருளி இரவு 7.30 மணிக்கு பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் மாட வீதி புறப்பாடு நடந்தது.

    நிகழ்ச்சியில் எம்பெருமா னார் ஜீயர். நிர்வாக அதிகாரி தமிழ் செல்வி, தக்கார் கோவில மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, முன்னாள் அறங்காவலர் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தென்திருப்பேரையில் நடைபெற்றது
    • பா.ஜ.க.வினர் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து பிரசுரங்கள் கொடுத்தனர்.

    தென்திருப்பேரை:

    பிரதமர் மோடியின் பா.ஜ.க. ஆட்சியில் 9 ஆண்டு சாதனையை வீடு, வீடாக கொண்டு சேர்க்கும் பணியாக பா.ஜ.க. ஆட்சியில் மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தென்திருப்பேரை சன்னதி தெருவில் தொடங்கப்பட்டு பல்வேறு தெருக்களில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவர் குமரேசன், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி, கூட்டுறவு பிரிவு தலைவர் ஜெயசிங், வக்கீல் பிரிவு தலைவர் கண்ணன், பிரசார பிரிவு தலைவர் ஆட்டோ சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் செல்வி, சந்தியா, அமைப்பு சாரா மக்கள் சேவைபிரிவை சேர்ந்த சிவசந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் பொதுமக்களிடம் வருகிற 2024-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற வாசகத்திற்கு இணங்கி மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    • குட்டக்கரை பகுதியில் டி.யு.ஆர்.ஐ.பி. திட்டத்தின் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • தார் சாலை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூராட்சிக்குட்பட்ட குட்டக்கரை பகுதியில் டி.யு.ஆர்.ஐ.பி. திட்டத்தின் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி தார் சாலை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் அமிர்தவள்ளி, பேரூராட்சி செயல் அலுவலர், வார்டு கவுன்சி லர்கள் லட்சுமி, மாரி யம்மாள், சண்முக சுந்தரம், ஆனந்த், தி.மு.க. மத்திய ஒன்றிய அவைத் தலை வர் மகர பூசனம், மு ன்னாள் கவுன்சிலர் மேக நாதன், ஊர் பிரமுகர்கள் துரை ராஜ், பால்ராஜ், ஒப்பந்த தாரர் மாரி, பாபு மற்றும் பேரூராட்சி பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    • தென்திருப்பேரை பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசு பாபு, துணை தலைவர் அமிர்த வள்ளி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலேயே தென்திருப்பேரை பேரூராட்சிக்கு முதன் முதலாக ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடி நீர் திட்டத்தை ஒதிக்கீடு செய்து கொடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டம் மன்ற கூட்ட அரங்கில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசு பாபு, துணை தலைவர் அமிர்த வள்ளி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    தீர்மானம்

    கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலேயே தென்தி ருப்பேரை பேரூராட்சிக்கு முதன் முதலாக ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடி நீர் திட்டத்தை ஒதிக்கீடு செய்து கொடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என். நேரு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆனந்த், சண்முகசுந்தரம், கொடி, சீதாலட்சுமி, மாரியம்மாள், சுபா காசிலட்சுமி மற்றும் இளநிலை அலுவலர் சேக் அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் தென்திருப்பேரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.

    மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.

    ×