ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலில் கருடசேவை

சுவாமி பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ தேவி, பூதேவி, நீளாதேவி, ஆதி நாயகி, குருகூர் நாயகி சமேதராக சயனக் குறட்டில் எழுந்தருளினார். இரவு 7.30 மணிக்கு பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்னவாகனத்திலும் மாடவீதி புறப்பாடு நடந்தது.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவில் கருடசேவை நடந்த காட்சி.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவில் கருடசேவை நடந்த காட்சி.
Published on

தென்திருப்பேரை:

நவதருப்பதிகளில் 9-வது திருப்பதி ஆழ்வார்திரு நகரிஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவில். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கருடசேவை நடந்தது. கைசிக ஏகாதசியை முன்னிட்டு காலையில் 6 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு திருமஞ்சனம், 8 மணிக்கு திருவாராதனம். பின்னர் சுவாமி பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ தேவி பூதேவி நீளாதேவி ஆதி நாயகி குருகூர் நாயகி சமேதராக சயனக் குறட்டில் எழுந்தருளினார். இடது மண்டபத்தில் நம்மாழ்வார் தொடர்ந்து கூரத்தாழ்வார். ராமானுஜர். தேசிகர், மணவாளமாமுனி மற்றும் ஆழ்வாராதிகள் எழுந்தருளினர்.

மதுரகவி பரம்பரையின் அண்ணாவியார் பாலாஜி சுவாமியை அரிவாணம் கொண்டு அழைத்து வந்தனர். சுவாமி முன்னிலையில் அண்ணாவியார் பாலாஜி கைசிக ஏகாதசி புராணம் ஆன நம்பாடுவான் கதையை படித்தார். பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நம்மாழ்வார் தனது சன்னதி வந்தவுடன் அண்ணாவியார் சுவாமியை அவரது திருமாளிகைக்கு பிரம்ம ரதத்தில் கொண்டு விடுவர். அருளிப்பாடு சாதிப்பார். அப்போது கோவில் ஸ்ரீ பாதம் தாங்கிகள் அவரை அவரது திரு மாளிகையில் கொண்டு விட்டனர். மாலை 6 மணிக்கு சாயரட்சை. பின்னர் பொலிந்து நின்றபிரான். மற்றும் நம்மாழ்வார் வாகன குறட்டிற்கு எழுந்தருளி இரவு 7.30 மணிக்கு பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் மாட வீதி புறப்பாடு நடந்தது.

நிகழ்ச்சியில் எம்பெருமா னார் ஜீயர். நிர்வாக அதிகாரி தமிழ் செல்வி, தக்கார் கோவில மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, முன்னாள் அறங்காவலர் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com