search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Green Tribunal"

    • 1672 டன் குப்பைகளை அகற்ற குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் தனியார் நிறுவனத்திடம் ரூ.27.9 லட்சம் செலுத்தியது.
    • ஒரு மாதத்திற்குள் நிலம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருஷ்ணா நதிநீர் திட்டத்துக்காக சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை அய்யப்பன் தாங்கல் ஆயில் மில் சாலையில் காலி நிலம் உள்ளது. இது கிருஷ்ணாநதி நீர் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலம் ஆகும். இங்கு குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் தேங்கும் குப்பைகள் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது. 450 தெருக்களில் இருந்து 12.5 டன் குப்பைகள் இந்த நிலத்தில் கொட்டப்பட்டன.

    இதனால் இந்த இடம் சுகாதார சீர்கேடாக மாறி யது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்ப வர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளித்தனர். அய்யப்பன் தாங்கல் மட்டுமின்றி குன்றத்தூர் பஞ்சாயத்து எல்லைக்கு உள்ளிட்ட கெருகம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளி லும் இதேபோன்று குப்பைகள் கொட்டும் பிரச்சினைகள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து விசாரணை நடத்தியது.

    இந்நிலையில் சுற்றுச் சூழலை மாசுப்படுத்தியதற்காக உள்ளாட்சி அமைப்பு ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து அடுத்த சில மாதங்களில் ஆயில்மில் சாலையில் கொட்டப்பட்ட 1672 டன் குப்பைகளை அகற்ற குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் தனியார் நிறுவனத்திடம் ரூ.27.9 லட்சம் செலுத்தியது.

    இதையடுத்து இங்கு 90 சதவீத குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்திற்குள் நிலம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருஷ்ணா நதிநீர் திட்டத்துக்காக சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், "ஆயில்மில் சாலையில் குப்பைகள் அகற்றப்பட்டாலும், தற்போது அதற்கு இணையாக உள்ள பொன்னியம்மன் கோவில் தெருவில் குப்பைகளை கொட்ட தொடங்கியுள்ளனர். இந்த நிலமும் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் ஒரு பகுதியாகும்" என்றனர்.

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு தமிழக மக்களை வஞ்சிக்கிற தீர்ப்பாகும் என்று திவாகரன் கூறியுள்ளார். #SterlitePlant #NGT

    மன்னார்குடி:

    அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர், திவாகரன், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி, போது நடந்த கலவரத்தில், பலர் உயிரிழந்தனர். இதனால் தமிழக அரசு, அந்த ஆலையை மூட உத்தரவிட்டது,

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பசுமை தீர்ப்பாயம், வழங்கிய, தீர்ப்பு தமிழக மக்களை, குறிப்பாக, தூத்துக்குடி மக்களை வஞ்சிக்கிற தீர்ப்பாகும், இதில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, போராட்டத்தை நடத்த வேண்டும்,

    தமிழகத்தில் விவசாயத்தை கேள்விக் குறியாக்கும் வகையில், சமீபத்தில், மத்திய நீர்வள ஆணையம், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணைகட்ட வரைவு திட்டத்திற்கு, அனுமதியளித்துள்ளது. இதை பார்க்கும் போது, ஏதோ சொல்லி வைத்த மாதிரி தமிழகத்தை வஞ்சிப்பதை போல மத்திய அரசின் நடவடிக்கை உள்ளது

    நமது அரசியல் இயக்கங்கள், இது போன்ற பொதுப் பிரச்சினைகளில், ஒன்றிணைந்து, போராட வேண்டியது, அவசியமாகும், அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது, நல்ல முடிவை எதிர்பார்ப்போம்.

    தமிழகத்தை தாக்கிய கஜா புயலால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்க போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.

    நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் முடிவுகள், ராகுல் காந்தியின், அரசியல் அணுகு முறையில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகும்.

    பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தியதுடன், அனைத்து துறைகளிலிலும், அரசியல் தலையீடு, மத இன பிரச்சினையை தூண்டி, நாட்டில் அமைதியின் மையை ஏற்படுத்திய, மக்கள் விரோத நடவடிக்கைகளால், பாரதிய ஜனதா கட்சிக்கு தோல்வியை கொடுத்திருப்பதாகவே, கருதுகிறேன்.

    தமிழக முதல்- அமைச்சர் முறையில் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தி.மு.க.தலைவர் ஸ்டாலினும், ஸ்டெர்லைட், மேகதாது அணை, போன்ற பிரச்சினைகளில், மக்களை காப்பாற்ற பொறுப்புடன், குரல் கொடுக்கவேண்டும், அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்டவேண்டும்.

    தினகரனின், செயல்பாடுகள் பிடிக்காமல் தான் செந்தில்பாலாஜி, தி.மு.க.விற்கு சென்றிருக்கிறார். #SterlitePlant #NGT

    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. #GreenTribunal #Vedantha #Sterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.



    தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர். அதேசமயம், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, 10 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவிற்கு தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  வேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது, தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



    இதற்கிடையே ஸ்டெர்லைட் வழக்கில் தன்னையும் எதிர்மனுதாரர்களாக இணைத்து கொள்வதற்காக வைகோ இடைக்கால மனு தாக்கல்  செய்திருந்தார். இந்த மனுவை ஏற்க வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக வரும் 30-ம் தேதி தாக்கல் செய்யும்படி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.  #GreenTribunal #Vedantha #Sterlite
    ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. #SterlitePlant #NationalGreenTribunal
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.

    அந்த மனுவில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது. ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திடீரென்று ஆலை மூடப்பட்டதால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் ஆலை இயக்கப்பட்டு வந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



    இந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ஜவாத் ரஹீம், ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்யவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

    அதேசமயம், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, 10 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு ஜூலை 17-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.  #SterlitePlant #NationalGreenTribunal
    ×